• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதுல உக்காந்து.. என்ன பண்ணிட்டிருக்கு இந்த கண்ணம்மா.. ச்சோ ச்வீட்தான்!

Google Oneindia Tamil News

சென்னை : நான் குழந்தையா இருக்கும்போது இதை செய்ய ஆசைப்பட்டேன் என குழந்தைத் தனத்தை மறக்காத ரோஷ்னி ஹரிப்ரியனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் கமெண்ட்களில் கொட்டுகின்றனர்.

என்ன பாப்பா விளையாட்டு என்று ரசிகர்கள் அதட்டினாலும், நானும் இப்படித்தான் ஆசைப்பட்டேன் என தங்களுடைய ஏக்கத்தையும் மறவாமல் தெரிவிக்கிறார்கள்.

அடடா முடிஞ்சு போச்சா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வெட்கப் புன்னகையில் ஷபானா அடடா முடிஞ்சு போச்சா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வெட்கப் புன்னகையில் ஷபானா

ஷாப்பிங் போன இடத்தில் தள்ளுவண்டியில் உட்கார்ந்தபடி ஹாயாக வலம் வரும் ரோஷினியை பார்த்து கலாய்க்கிறதுக்காக நெட்டிசன்களும் ஓடி வந்துவிட்டனர்.

இன்னும் அதிலிருந்து மாறாத கண்ணம்மா

இன்னும் அதிலிருந்து மாறாத கண்ணம்மா

என்னதான் குமரி ஆனாலும் குழந்தை மனம் உள்ளுக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக காட்டிய ரோஷ்னி ஹரிப்ரியனை பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள் தங்களுடைய ஏக்கங்களையும் தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய ஆசையை இன்னொருவர் செய்வதை பார்த்து சிலர் சந்தோசப்பட்டாலும் சிலரால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தானே இருக்கிறது. அதை இப்போது சில ரசிகர்கள் நிரூபித்து வருகிறார்கள். தன்னுடைய நெடு நாள் ஆசையான ஷாப்பிங் தள்ளுவண்டிக்குள் இருந்து சுவைங்ங்...னு மேட்டில் இருந்து இறங்கி வருவதில் பலருக்கும் பிடித்தது தான். அதை இப்போது ரோஷினி செய்து விளையாடி இருக்கிறார்.

இவரா அவர் என அதிர்ச்சி

இவரா அவர் என அதிர்ச்சி

இவருடைய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த ரசிகர்கள் என்னம்மா இப்படி பண்றிங்களேமா கீழே விழுந்துட்டா என்ன ஆகிறது என்று கதறியும் வருகிறார்கள். இப்போ இல்லாட்டி எப்போ என்று சொல்கிற மாதிரி இவர் கையை தூக்கி குதூகலித்து வண்டியில் வலம் வந்ததை பார்த்து சிலர் பேபி....மா சூப்பர் என்று கொஞ்சவும் தவறவில்லை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் 2 குழந்தைகளின் அம்மாவாக நடித்துக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களால் இவர் ஒரு குழந்தை போல ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இனி கொண்டாட்டம் தான் போங்க

இனி கொண்டாட்டம் தான் போங்க

ஏற்கனவே இவரை பாரதிகண்ணம்மா சீரியலில் வைத்து ட்ரோல் செய்து வந்த ரசிகர்கள் இப்போ இந்த வீடியோவை பார்த்ததும் ஆஹா நமக்கு கன்டென்ட் கிடைத்து விட்டது என்று அடுத்த ட்ரோல் செக்ஷன்க்கு ரெடி ஆகி விட்டனர். கொரோனாவில்தான் தொடர்ந்து அலைகள் வந்து கொண்டிருப்பது இல்லை. கண்ணம்மாவின் வாழ்க்கையிலும் புதுசு புதுசாக அலைகள் வந்து கொண்டிருக்கிறது. அதை வைத்தே மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ்களின் தெறிக்க விடுகின்றனர். இந்தநிலையில் இவருடைய தள்ளுவண்டி வீடியோவை பார்த்ததும் இனி இது ஒரு வாரத்திற்கு போதுமென்று சிலர் சிலாகிக்கின்றனர்.

கையை தூக்கி செம என்ஜாய் தான்

கையை தூக்கி செம என்ஜாய் தான்

அந்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை என்று வடிவேலுவின் காமெடிக்கு இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஸனை பார்த்து சிலர் வாவ்... கண்ணழகி சூப்பராக இருக்கிறது என்று புது பட்டம் சூட்டி இருக்கின்றனர். இன்னொரு ரசிகரோ கண்ணம்மா என்னம்மா இது என்று சிரிப்பை கொட்டியிருக்கிறார். இன்னொரு ரசிகர் இவருடைய இந்த வீடியோவுக்கு சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை என்று இவருடைய ஆசையை பட்டியலிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல ரசிகர்கள் ஹாட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். இதில் ஒருவர் ரோஸ் எப்படி இதுல ஏறி உட்கார்ந்திங்க என்று சந்தேகத்தையும் கிளப்பியிருக்கிறார்.

இப்படியுமா மைண்ட் வாய்ஸ்

இப்படியுமா மைண்ட் வாய்ஸ்

இந்த கொரோனா காலத்தில் ஷாப்பிங் போனோமா வீட்டுக்கு வந்தோமான்னு இல்லாம என்ன அங்க வண்டியில வம்பிழுத்திட்டு அலையறியா.. வீட்டுக்கு வா வச்சிக்கிறேன் என்று இந்த வீடியோவை பார்த்து அவருடைய அம்மா மைண்ட் வாய்ஸ் கொடுத்திருப்பாங்க ...எப்படியும் வீட்டுக்கு போனதும் கும்தலக்காவா அடி கிடைச்சிருக்கும் இப்படி ஆடிட்டு இருந்ததுக்கு என்று... அப்பாடா என்று சிலர் நக்கல் பெருமூச்சும் விட்டிருக்கின்றனர். எப்படியோ கண்ணம்மா எது செய்தாலும் அது ரசிகர்களை குஷிப்படுத்திருதுப்பா.. இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை இருக்கணும்.

English summary
Roshni Haripriyan, who is doing the lead role in the much acclaimed Bharathi Kannamma serial has posted a cute video in which she is playing in a shopping mall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X