• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரதி மாமா.. வேகமாக அழைச்ச ஸ்வேதா... விக்கித்து வியர்த்து போன பாரதி

|

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ரொம்ப நல்லாத்தான் இருக்கு. கருப்பை வெறுக்க கூடாது, தோலின் நிறத்தில் இல்லை மனிதர்களின் வாழ்க்கை என்பதை உணர்த்துவதா கதையை கொண்டு போக முயற்சிக்கறாங்க.

இப்போ காலம் மாறிப் போச்சு நிறத்தில் ஒன்றுமில்லை, சருமத்தை ஆரோக்கியமாக வச்சுக்கிட்டாலே உடல் அழகு, முகப் பொலிவு கிடைக்கும்ன்ற மன செட்ல எல்லாரும் இருக்கும் காலம் இது.

அதுக்கும் இந்த டிவி சீரியல்கள் காரணம்னு சொல்லலாம். எப்போ பார்த்தாலும் வெள்ளை வெள்ளையா பொண்ணுங்களை கூப்பிட்டு சீரியல்களில் நடிக்க வைக்கறாங்க. அவங்க முக லட்சணம் தெரியாமாட்டுது...பளிச்சுன்னு காலர் மட்டுமே தெரியறதால யாரு அழகு, அழகில்லேன்ன்னு கூட சொல்ல முடியலிங்க.

பார்த்தியளா சந்தேகப்பட்ட மாதிரி செய்துபுட்டாவ... சந்திராவுக்கு பதில் விஜி நடிக்கறாகளாமே!

அஞ்சலி

அஞ்சலி

அகிலன், அஞ்சலி திருமண புடவைகள், ஜவுளிகள் எடுக்க அஞ்சலி வீட்டு குடும்பம், அகிலன் வீட்டு குடும்பம்னு குடும்பமா கிளம்புறாங்க அப்போ கண்ணம்மாவும் கூட வர்றா. இவளை எதுக்கும்மா அழைச்சுட்டு வர்றேன்னு அஞ்சலி கேட்க.. உனக்கு தெரியாதா காரணமாத்தாண்டி.. எப்பவும் பணக்காரங்க ஷாப்பிங் போனா வீட்டு வேலைக்காரியை வாங்கினதை தூக்க அழைச்சுட்டு போக மாட்டாங்க.. அது மாதிரிதாண்டி இவளையும் நான் கூப்பிட்டேன்னு சொல்றாங்க அஞ்சலி அம்மா.

பாரதி எச்சரிக்கை

பாரதி எச்சரிக்கை

முதல்நாளே பாரதி அஞ்சலியின் போக்கைப் பார்த்து மிக எச்சரிச்சான்..பறக்கறதை புடிக்கறேன்னு இருக்கறதை இழந்துடாதே..மிஸ் யுனிவர்ஸ் லெவல்லே உன்னை கற்பனை பண்ணிக்கிட்டு மிஸ் சென்னையா கூட வர முடியாம மறுபடியும் உன் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு போயிருவ.. எங்க அம்மா யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க.. நான் சொன்னா கேட்பாங்க. நீ அகிலனை விட்டு என்மேல ஆசைப்பட்டா அது சரிவராதும்மா சொன்னா உடனே கல்யாணத்தை நிறுத்திருவாங்க.. பார்த்து நடந்துக்கோன்னு சொல்லிட்டு போறான் பாரதி.

வாழ்க்கை

வாழ்க்கை

ஒருத்தரை காதலிச்சுட்டு, இன்னொருத்தரை கல்யாணம் செய்துகிட்டு பொண்ணுங்க வாழறதில்லையா... அது மாதிரி இந்த அஞ்சலி மாறிடணும்.. அஞ்சலி இல்லேன்னா அகிலன் செத்தே போயிருவானேன்னு புலம்பறான் பாரதி.இந்த நேரத்துலதான் மறுநாள் ஜவுளி எடுக்க போறாங்க.

வசதியா இருக்கு

வசதியா இருக்கு

அகிலனின் அம்மா, அகிலன், அகிலன் அக்கா என்று எல்லாரும் புடவை செலக்ட் பண்றாங்க.. அஞ்சலி என் பக்கத்துல உட்காருன்னு சொல்றான் அகிலன்.. இல்லை இங்கேயே எனக்கு வசதியா இருக்குன்னு பாரதி பக்கத்துல நின்னுகிட்டு சொல்றா அஞ்சலி. பாரதிக்கு ரொம்ப கடுப்பாகுது.

பாரதியிடம்

பாரதியிடம்

அகிலனின் அம்மா செலக்ட் செய்த புடவையை தன் மேல் வைத்துக்கொண்டு கண்ணாடியில் பார்க்கறா அஞ்சலி. ஸ்..ஸ்ஸ்னு பாரதியை கூப்பிட பாரதி திரும்பி பார்க்கறான்.நல்லாருக்கான்னு கேட்கறா அஞ்சலி. பாரதி கடுப்பாகி திரும்பிக்கறான்.

புடவைக்கும் ஸ்..ஸ்ஸ்..

புடவைக்கும் ஸ்..ஸ்ஸ்..

நிச்சயதார்த்த புடவையையும் தனது மேல் போட்டு அழகு பார்த்த அஞ்சலி, மறுபடியும் ஸ்..ஸ்ஸ்.. என்று பாரதியை கூப்பிட திரும்பலை பாரதி.அடுத்த சில நொடிகளில் பாரதி மாமான்னு இருப்பவர்கள் அதிரும்படி கத்த, அனைவரும் திரும்பி பார்க்க, பாரதி கூனிக் குறுகி வியர்த்து நிக்கறான்.

நகருங்க அம்மா

நகருங்க அம்மா

உடனே கூலான அஞ்சலி, பாரதி மாமா கொஞ்சம் நகருங்க.. இந்த புடவை எப்படி இருக்குன்னு அம்மா பார்க்கட்டும்னு சொல்றா. அம்மா எல்லாம் பார்க்க வேணாம்.. நான் செலக்ட் பண்ணினா அது நல்லாத்தான் இருக்கும், அஞ்சலின்னு சொல்லிடறாங்க அகிலனின் அம்மா.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Vijay TV's Bharathi Kannama serial is very good. Do not hate the black colour, try to get the story to make sure that the skin is not the color of the human being.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more