ஒருவழியாக ரசிகர்கள் எதிர்பார்த்தது பாரதிகண்ணம்மாவில் வந்துவிட்டது.. வேற லெவல் திருப்பம்
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலின் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்காகத்தான் காத்திருந்தோம் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் கூறிவருகின்றனர்.
அமீர் வீட்டில் ராஜூ செய்த செயல்... ராஜுவுக்கு இப்படி ஒரு திறமையா...வியந்து போன ரசிகர்கள்

டிஎன்ஏ டெஸ்ட் தான் முடிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் கடந்த இரண்டு வருடமாக ஒளிபரப்பாகி வந்தாலும், இந்த கதையின் திருப்பம் எப்போது வரும்..சீரியல் எப்போது முடியும் என்று ஒரு சில ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனாலும் கதையில் அடிப்படை கருவாக டிஎன்ஏ டெஸ்ட் இருந்தாலும் புதுப்புது திருப்பங்களால் கதைக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி குடும்பத் தலைவிகளை இந்த சீரியல் கவர்ந்து வருகிறது. இந்த சீரியல் தற்போது பெண் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் நெட்டிசன்களின் கலாய்ப்புக்கும் ஆளாகிவிடுகிறது.

முதல் பாகம் முடிவு
பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது, ஆரம்பத்தில் மாமியார் சௌந்தர்யாவுக்கு பிடிக்காமல் இருந்தது. இந்த நிலையில் கண்ணம்மா கர்ப்பமானதும், மருமகளாக ஏற்றுக் கொண்டார். ஆனால் அதுவரைக்கும் உருகி உருகி பாசத்தை கொட்டி வந்த பாரதி வெண்பாவின் சூழ்ச்சியால் தான் குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை என்று ஆழமாக நம்பியதால் கண்ணம்மாவின் மீது சந்தேகத்தை சந்தேகப்பட்டு இருக்கிறார். இதனால் கண்ணம்மாவிற்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கண்ணம்மா பாரதியோடு கோபித்து விட்டு வீட்டை விட்டு கிளம்பி விட்டார். முதல் பாகம் இப்படியே முடிவடைந்து போனது.

மீண்டும் கண்ணம்மா எடுத்த முடிவு
அடைந்தால் பாரதிதான் அடைவேன் என்று சின்னத்திரை நீலாம்பரியாக கண்ணம்மா வெண்பா பல விஷயங்களை செய்து கொண்டிருக்கும்போது, தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் இரண்டாவது பாகமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாரதியும் கண்ணம்மாவும் விவாகரத்துக்கு அப்ளை செய்து இருக்கின்றனர். இதனால் இவர்கள் இருவரும் ஆறு மாதங்களுக்கு ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று கோர்ட்டு கூறி விட்டது. இதனால் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழும்போது கண்ணம்மாவின் மீது தவறு இல்லை என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டு இருந்தது. அதை புரிந்து கொண்ட பாரதி புது முடிவு எடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வழக்கம் போல நான் தவறு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கண்ணம்மா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இவர் தொடங்கி விட்டார். அதனால் மீண்டும் கண்ணம்மா வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.

லேட்டஸ்ட் ப்ரமோ
ஏற்கனவே வெண்பா மீது கோபத்தில் இருக்கும் பாரதிக்கு இன்று வெண்பா போன் செய்து பேசி இருக்கிறார். அஞ்சலியை கொலை செய்யும் நோக்கத்தோடு வெண்பா செய்த செயல்கள் எல்லாம் பாரதிக்கு தெரிந்ததால், தற்போது வெண்பா மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதனால் பெரிய துரோகி என்று வெண்பாவை திட்டி தீர்க்கிறார். இதனால் வெண்பா பாரதியிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியிருக்கிறார். இந்த எபிசோடு ப்ரமோவை பார்த்ததும் ரசிகர்கள் இதற்காகத்தான் நாங்கள் காத்திருந்தோம். இப்போதான் இந்த சீரியலின் கதை சூடு பிடித்திருக்கிறது தயவுசெய்து வெண்பாவை கொன்றுவிடுங்கள் என்றெல்லாம் விதவிதமாக கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.