
ஒரு வழியா இப்பவாவது இந்த முடிவுக்கு வந்தீங்களே..!! பாரதிகண்ணம்மாவுக்கு குவியும் கருத்துக்கள்
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பல நாட்களாக எதிர்பார்த்து இருந்த தருணம் தற்போது நிகழ தொடங்கி இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மார்ச் மாத ராசிபலன் 2022: ரிஷப ராசிக்கு யோகத்தை தரப்போகும் நவ கிரகங்கள்

நெகட்டிவ் கருத்துக்களால் பிரபலம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விடுகிறது. ஒரு சில நேரங்களில் சில சீரியல்கள் நெகட்டிவ் கருத்துக்களால் பிரபலமடைந்து டாப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் பாரதிகண்ணம்மா சீரியலும் ஒன்று. இந்த சீரியல் ஆரம்பத்தில் அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல யாரும் எதிர்பார்க்காத வகையில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு டிஆர்பியில் டாப்பில் வலம் வரத் தொடங்கிவிட்டது. அதற்கு முன்பு இந்த சீரியலை பார்க்காத பல ரசிகர்கள் கூட சமூக வலைத் தளத்தில் இதைப் பற்றி வரும் செய்திகளை தெரிந்து சீரியலை பார்க்க தொடங்கியிருக்கின்றனர்.

புதுமுகங்களின் அறிமுகம்
பாரதிகண்ணம்மா சீரியலில் ஆரம்பத்தில் கண்ணம்மா கேரக்டரில் டிக்டாக் மூலமாக பிரபலமடைந்த ரோஷ்னி ஹரிப்ரியன் நடித்துக்கொண்டிருந்தார். அவரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக கலாய்த்து வந்த நிலையில் தனக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வருவதால் தொடர்ந்து இதில் நடிக்க விருப்பம் இல்லை என்று இந்த சீரியலை விட்டு ரோஷ்னி ஹரிப்ரியன் விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது வினுஷா இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவரும் சமூக வலைத்தளத்தில் பிரபலமானதை தொடர்ந்து இந்த சீரியலின் மூலமாக முதல் முறையாக அறிமுகமாகியிருக்கிறார்.

பாரதியின் கோபம்
பாரதிகண்ணம்மா சீரியல் வருடங்களை கடந்து இருந்தாலும் இதில் ஒளிபரப்பாகும் கதை டிஎன்ஏ டெஸ்ட் என்ற ஒற்றை மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்து வருகிறது. அதனால் அடிக்கடி கலாய்க்கபட்டு வருகிறது. தற்போதைய ப்ரோமோவும் அதற்கு விதிவிலக்கல்ல. தற்போது பாரதி தன்னுடைய மகள் ஹேமாவுடன் ஸ்கூலுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது லட்சுமி எதிர்பாராதவிதமாக காரில் வந்து விழுந்து விடுகிறார். இதைப் பார்த்ததும் கடும் கோபத்தில் பாரதி கண்ணம்மா குழந்தையை இப்படியா தெருவில் விடுவது என்று சண்டை போடுகிறார். உடனே கண்ணம்மா இப்பவாவது நீங்க குழந்தைக்கு அப்பாவாக நடந்து கொள்கிறீர்களே அதுவே எனக்கு போதும் என்று கண்கலங்கியபடி கூறுகிறார்.

கண்ணம்மா கூறிய பதில்
கண்ணம்மாவின் பேச்சை எப்போதும் போல காது கொடுக்காமல் தன்னுடைய இஷ்டத்திற்கு பாரதி பேசிக் கொண்டிருந்தாலும் குழந்தை லட்சுமி இடத்தில் பாரதி வைத்திருக்கும் பாசத்தை பார்க்கும்போது இதற்காகவாவது அந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து ரிசல்ட் பார்த்து விட்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் அறிவுரைகளை கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாரதி குழந்தையின் அப்பாவாக மாறி உரிமையுடன் கண்ணம்மாவை திட்டுவதை பார்க்கும்போது ஒருவழியாக இப்போதாவது இந்த முடிவுக்கு வந்தீர்களே..., இனி இப்படியே லட்சுமி மீது இருக்கும் பாசத்தால் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று பல்வேறு ரசிகர்களும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.