கண்ணம்மாவுக்கு அம்மன் கொடுத்த நீதி..புரிந்து கொள்வாரா பாரதி.. புலம்பி தள்ளும் ரசிகர்கள்
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலின் புது ப்ரமோ ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசாணை வெளியிட்டதே நாங்கதான் - அமைச்சர் மா.சுப்பிரணியன் காட்டம்

பலரையும் ஃபீல் பண்ண வைத்த சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்ட சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது மீண்டும் ரசிகர்களால் ஒருபக்கம் ஆதரிக்கப்பட்டும் இன்னொரு பக்கம் கலாய்க்க பட்டும் வருகிறது. பொதுவாக சீரியல்கள் என்றாலே குடும்பத்தலைவிகள் மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் ஆண்களும் பல நேரங்களில் சீரியல்களை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையில் பல பேர் பார்த்து அழுது கொண்டிருக்கும் ஒரு சீரியலாக ஒரு காலத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் இருந்தது.

ஆரம்பத்தில் மாமியார் கொடுமை
தற்போது சீரியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்னும் அரைத்த மாவையே அரைக்கலாமா?? என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த சீரியலின் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், ஆரம்பத்தில் கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ளாத மாமியார் பின்பு அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டதும் மகள் போல பார்த்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். முதலில் உருகி உருகி காதலித்த கணவர் மனைவி கர்ப்பமான செய்தியை கேட்டதும் கண்ணம்மாவை சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்.

ஒன்றாக வாழும் பாரதி, கண்ணம்மா
ஒரு டாக்டராக இருந்துகொண்டு வில்லி வெண்பா செய்யும் வில்லத்தனம் பலரையும் முகம் சுளிக்க வைத்தாலும், கதாநாயகன் ஒரு டாக்டராக இருந்தாலும் பல நேரங்களில் அவர் செய்யும் செயலும் பலரை எரிச்சலடைய வைத்திருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது இருவரும் விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கண்ணம்மாவின் கேரக்டரை புரிந்து கொள்ள பாரதி ஆரம்பித்துள்ளார்.

கண்ணம்மாவுக்கு கிடைத்த நீதி
தன் மனதில் இருக்கும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காக குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்க பாரதி ஏற்பாடு செய்து இருக்கிறார். அப்போது அங்கே தானும் கண்ணம்மாவும் தனி தனியாக பொங்கல் வைக்கப்போவதாக கூறியிருக்கிறார். அது நீதி காத்த அம்மன் கோயில் என்று ஒரு பெண் விளக்கம் கொடுத்து, இந்த கோயிலில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் யார் பக்கம் நீதி இருக்கிறதோ அவர்களுடைய பானை தான் முதலில் பொங்கும் என்று புது விளக்கம் கொடுத்திருக்கிறார். இதனால் ஆர்வத்தில் இவர்கள் இருவரும் பொங்கல் வைத்துக் கொண்டிருக்கும்போது, கண்ணம்மாவின் பானையில் பொங்கல் பொங்கி விட்டது. இதைப் பார்த்ததும் குழப்பத்தில் பாரதி இருந்து கொண்டிருக்கிறார்.

ரசிகர்களின் கருத்து
அம்மன் கண்ணம்மாவுக்கு நீதி வழங்கி விட்டது. ஆனால் அதை பாரதி ஏற்றுக்கொள்வாரா?? அல்லது வழக்கமான தன்னுடைய கேரக்டரால் இதுவும் நடிப்பு என்று சொல்வாரா?? என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் நெட்டிசன்கள் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் உண்மை தெரிந்துவிடும். அதை விட்டுவிட்டு இப்படி எல்லாம் புதுசு புதுசா டெஸ்ட் வைத்து கண்டுபிடிக்கிறார்களே என்று கலாய்த்து வருகிறார்கள்.