முத்தக்காட்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாவனி... அங்கு நடந்ததே வேறாம்
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய முத்தக்காட்சி சர்ச்சைக்கு தற்போது பாவனி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நிஜத்தில் அன்று என்ன நடந்தது என்பதை பாவனி முதல் முறையாக வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தனக்கு எதிராக வரும் நெகட்டிவ் கருத்துக்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அரசியலுக்கு வந்துவிட்டால் கோபப்படக் கூடாது! ஸ்டாலினை போல் எடுத்ததும் நான் தலைவராகவில்லை! EPS பேச்சு!

பாவனி கொடுத்த விளக்கம்
தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிகழ்வுகளில் ஒன்றாக பாவனி மற்றும் அமீர் முத்தக்காட்சிகள் சமூக வலைதளத்தை பரபரப்பாக்கி இருந்தது. அதை பற்றி இந்த நிகழ்ச்சி முடிந்து ஒரு சில வாரங்கள் கடந்த நிலையில் தற்போது பாவனி விளக்கம் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து இவரைப் பற்றியும் அமீரை பற்றியும் சமூக வலைத்தளத்தில் நெகட்டிவ் கருத்துக்கள் பரவி வருவதால் அன்று என்ன நடந்தது என்பதை அனைவருக்கும் விளக்கமாக கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் ரசிகர்கள் அப்போ எல்லாமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மாஸ்டர் ப்ளன் தானா?? என்று கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

அதிகரித்த நெகட்டிவ் கருத்துக்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம் தான். முதல் சீசனில் ஓவியா மற்றும் ஆரவ் மருத்துவ முத்தம் போல தற்போது அமீர், பாவனியின் அதிரடி முத்தம் அனைவரையும் திகைப்படைய செய்திருந்தது. ஒரு ரியாலிட்டி ஷோவில் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா என்று பலரும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் அமீருக்கு எதிராக பல நெகட்டிவ் கருத்துக்கள் கிளம்பிக் கொண்டிருந்தது. அதற்கு முன்பு வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் அமீர் அறிமுகமானதும் அவருடைய சோக கதையை கேட்டு அவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த பலர் இந்த நிகழ்வுக்கு பிறகு வெறுக்க தொடங்கி விட்டார்கள்.

இதுதான் நடந்ததாம்
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகுதான் அன்று நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் அதைப் பற்றியே பலரும் இவர்களிடம் கேள்விகளை கேட்டு வருவதால் அதற்கான விளக்கத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அமீர் தனக்கு முத்தம் தரவில்லை என்றும் அவர் தன்னுடைய காதலை சொல்ல வந்தார் என்றும் கூறுகிறார். ஏற்கனவே அமீர் தன்னிடம் காதலை சொல்ல வந்த போது எனக்கு வெக்கமாக தான் இருந்து வந்தது. அமீரை ட்டீஸ் பண்ணுவதற்காகத்தான் நான் அவரை தம்பி என்று அழைத்தேன். அதை அமீரும் சரி, அனைவரும் அப்படி கூப்பிடாதே என்று சொன்னதும் நானும் விட்டுவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

எல்லாமே எடிட்தானாம்
தன்னிடம் அமீர் நடந்து கொண்டதை பார்த்து பலர் அவருக்கு எதிராக பேசி வருகிறார்கள். ஆனால் அமீர் என்னை அவ்வளவு கேரிங்காக பார்த்து கொண்டார், என் கையில் அடிபட்டு இருந்த நேரத்திலும் சரி, மற்ற நேரங்களிலும் தனக்கு உதவியாகவும் அனுசரணை ஆகவும் இருந்தார் என்று பாவனி கூறியிருக்கிறார். அதனால் அமீர் பாவனிடம் நடந்து கொண்டதை வைத்து அவருடைய விளையாட்டை யாரும் நிர்ணயம் செய்ய வேண்டாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் அவருடைய விளையாட்டை சிறப்பாக விளையாடி இருந்தார் என்றும் கூறியிருக்கிறார். அமீர் தன்னுடைய காதில் ஐ லவ் யூ என்று சொன்ன வார்த்தையை தான் எடிட் செய்து இப்படி வெளியிட்டு இருக்கிறார்கள் என்று முத்தக்காட்சிக்கு மொத்தமாக ஒரு விளக்கத்தை கொடுத்து முடித்திருக்கிறார்.