பிக்பாஸில் உண்மையான ஜென்டில்மேன்...மனம் திறந்த பாவனி.. வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் உண்மையான ஜென்டில்மேன் இவர்தான் என்று தன்னுடைய மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த பல நிகழ்வுகளில் இவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டு இருக்கிறது என்று பாராட்டித் தள்ளியுள்ளார்.
பிட்ஸ்பர்க்கில் மூன்று துண்டாக நொறுங்கிய பாலம்..சரிந்து விழுந்த வாகனங்கள் - உடனே வந்த பிடன்

மனம் திறந்த பாவனி
சமீபத்தில்தான் விஜய் டிவியில் பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சி முடிவடைந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் வெளியே வந்ததும் தங்களுடைய அன்றாட வேலைகளை துவங்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு சில ரசிகர்கள் உள்ளே நடந்த பல நிகழ்வுகள் பற்றி சமூக வலைத்தளத்தில் இப்ப வரைக்கும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி வருகின்றனர். அந்த வகையில் பாவனி பிக் பாஸ் வீட்டில் நடந்த பல நிகழ்வுகளைப் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

ரசிகர்களின் அபரிமிதமான அன்பு
சீரியலில் கதாநாயகியாக நடித்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான பாவனி சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் போட்டோ சூட் மூலம் பிஸியாக இருந்தார். தற்போது மீண்டும் தன்னுடைய பழைய இடத்திற்கு வந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் 3-வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய வெற்றிக்கு காரணமாக அபரிமிதமான ரசிகர்களின் அன்பு தான். இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று தெரிந்ததும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆர்மி அமைத்து ஆதரவு கொடுத்த தொடங்கிவிட்டனர்.

திருப்புமுனை தந்த நிகழ்ச்சி
பிக்பாஸ் வீட்டிற்குள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் மனம் தளராமல் தன்னுடைய விளையாட்டில் கவனமாகவும் சிறப்பாகவும் இருந்து வந்த பாவனி, வெளியே வந்த பிறகும் அந்த வீட்டிற்குள் நடந்தது தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவு என்றும், தனக்கு ஒரு திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். தன்னுடைய ரசிகர்கள் தன் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களா?? என்று புரிந்து கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி தனக்கு உதவியதாகவும் கூறியிருக்கிறார்.

அவர்தான் அந்த ஜென்டில்மேன்
பிக் பாஸ் வீட்டிற்குள் ஜென்டில்மேன் என்றால் அது சஞ்சீவ் மற்றும் இமான் அண்ணாச்சி தான் என்று கூறியிருக்கிறார். சஞ்சீவ் எல்லா நேரங்களிலும் நியாயமாகவும், பொறுப்பாகவும் நடந்து இருந்தார். அவருடைய விளையாட்டு ரொம்பவும் நேர்மையாக இருந்தது என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். அதுபோல இமான் அண்ணாச்சி என்னதான் விளையாட்டில் கவனமாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் மனக்கசப்பு ஏற்பட்டால் கூட அனைவரிடமும் சாப்பிட்டாச்சா?? என்று பாசத்தோடும் உண்மையாகவும் கேட்டு ஒரு நல்ல கேரக்டராக தான் இந்த வீட்டிற்குள் இருந்தார் என்று தன்னுடைய மனதில் இருக்கும் கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார்.