அடுத்த திருமணம்..இனி தன்னுடைய கவனம் ..பாவனியின் முடிவு.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
சென்னை: தன்னுடைய திருமணம் பற்றி கேட்ட ரசிகர்களுக்கு பாவனியின் பதில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இனி தன்னுடைய கவனம் இதில் தான் என்று இறுதியான முடிவை உறுதியாக கூறியுள்ளார்.
பாமக கொடி பறக்கட்டும்.. அதனால்தான் நாம் பாட்டாளிகள்.. என்ன சொல்ல வருகிறார் டாக்டர் ராமதாஸ்..!

பாவனியின் உறுதியான முடிவு
தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மூன்றாவதாக வெற்றி பெற்ற பாவனி ரெட்டியிடம் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி கேள்வி கேட்டா ரசிகர்களுக்கு உருக்கமாக பதிலளித்துள்ளார். இவருடைய இந்த பதிலை எதிர்பார்க்காத ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வருகின்றனர் என்றும், ஒரு சிலர் இதுவும் நல்லதுதான் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஏற்கனவே அவருடைய கடந்த கால வாழ்க்கையை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் உருக்கமாக கூறி இருந்ததால் முடிவு சரி என்றும் பலர் கூறி வருகின்றனர்.

வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் முடிவுகள்
தன்னோடு ஒன்றாக நடித்த சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பவானி ரெட்டி அந்த காதல் திருமணம் அதிக நாட்கள் நிலைக்காமல் பாதியிலேயே முடிந்து விட்டது. தன்னுடைய கணவரின் தற்கொலையால் அந்த கவலையில் இருந்து மீண்டு வரமுடியாமல் தான் இருந்து வருகிறார். ஏற்கனவே இவருடைய கணவர் இறந்த கொஞ்ச நாளுக்குள்ளே இவரைப் பற்றி புரிந்து கொண்டதாக ஒருவர் இவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். அப்போது வீட்டில் உள்ளவர்களும் இவர்களது இரண்டாவது திருமணத்திற்கு சரி என்று சொன்னதும், திருமணம் செய்து கொள்ளலாம் என்று இவரும் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவர் இவர் மீது பல குற்றங்களை சுமத்தி இருக்கிறார். அதனால் அவரையும் பாவனி பிரிந்து விட்டாராம்.

கசப்பான அனுபவங்கள்
காதல் வாழ்க்கையில் தனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களால் இனி அந்த மாதிரி ஒரு வாழ்க்கையே தனக்கு தேவையில்லை என்று உறுதியாகவும் விடாப்பிடியாக இருக்கும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் தன்னிடம் அதிகமாக அபிநய் கேரிங்க் எடுத்துக் கொண்டது பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் யார் தன்னிடம் நெருங்கி பழகினாலும் தனக்கு பயமாகத்தான் இருக்கிறது என்று கூறிவந்தார். அதற்கு பிறகு அவருடன் அமீர் நட்பாக பழகிக் கொண்டது அவருக்கு ஆறுதலாக இருந்தாலும், அமீர் பாவனியிடம் காதலை தெரிவிக்கும் போதெல்லாம் நீ எனக்கு தம்பி, அந்த மாதிரி எனக்கு ஒரு ஐடியா இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

ரசிகரின் கேள்வி
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு இவர் வெளியே வந்த பிறகு தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக லைவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர் அடுத்த திருமணத்தை பற்றி நீங்கள் என்ன முடிவு எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்த மாதிரி இனி என் வாழ்க்கையில் ஒரு ஐடியா இல்லை. இனி என்னுடைய கவனம் கேரியரில் மட்டும்தான் என்று கூறியிருக்கிறார். வாழ்க்கையில் அதிகமாக சாதிக்க வேண்டும் என்பதும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முடிவாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.