• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜுவின் காதலைப் பார்த்து கலங்கிய பாவனி..பிரியங்காவின் ஆறுதல்..கலங்க வைத்த தருணம்

Google Oneindia Tamil News

சென்னை: தன்னுடைய காதல் பிரிவை நினைத்து பாவனி வருந்தியுள்ளார்.

ஆறுதல் சொன்ன பிரியங்காவின் முகம் வெளிப்படுத்திய சோகம் அத்தனை உண்மையான அர்த்தங்களை கொண்டதாக இருந்துள்ளது.

வாழ்க்கை துணையை இழந்தவர்களுக்கு தான் அதன் அருமை புரியும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. 5 எம்.பி.க்கள் டாப்.. அன்புமணி, வைகோ, ஜி.கே.வாசன் ஏகப்பட்ட ஆப்சென்ட்! நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. 5 எம்.பி.க்கள் டாப்.. அன்புமணி, வைகோ, ஜி.கே.வாசன் ஏகப்பட்ட ஆப்சென்ட்!

சின்னத்தம்பியில் நந்தினி

சின்னத்தம்பியில் நந்தினி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் பாவனி ரெட்டி ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான். இவர் சின்னத்தம்பி என்னும் சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியில் நந்தினி கேரக்டரில் நன்கு பரிச்சயமானவர். இவருடைய ஒரிஜினல் பெயர் கூட யாருக்கும் தெரியாவிட்டாலும் இவரை பலரும் இப்ப வரைக்கும் நந்தினி என்றுதான் அழைத்து வருகின்றனர். சின்னதம்பி சீரியலின் வெற்றி இவருடைய நடிப்புக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு கிடைத்த ஒரு மாற்றமாக தான் இருந்ததாம்.

காயின் டாஸ்க்கில் அதிருப்தி

காயின் டாஸ்க்கில் அதிருப்தி

சின்னத்தம்பி சீரியலுக்கு பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்து இருந்தாலும் தற்போது கொஞ்ச நாட்களாகவே எந்த சீரியலிலும் திரைப் படங்களிலும் நடிக்காமல் தான் இருந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் இது தன்னுடைய திறமையையும், தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்ட வெற்றிக்கும் வழிவகுக்கும் என்று இவர் இதில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் எதிர்பார்த்தது போலவே ஆரம்பத்தில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் சப்போர்ட் கொடுத்து கொண்டிருந்தனர். ஆனால் காயின் டாஸ்க்கில் இவருடைய செயல்பாடுகள் ரசிகர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்திவிட்டது.

அன்பால் ஏற்படும் பிரச்சனை

அன்பால் ஏற்படும் பிரச்சனை

அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்திலிருந்து அபிநய் இவரிடம் அதிகமாக நட்பாக இருப்பதாகவும், அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் நட்பைத் தாண்டி தன்னிடம் அவர் பழகுகிறார் என்றும் பாவனி அபிநய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒரு சில வாரங்கள் பெரிய பிரச்சினைகளை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தியிருந்தது. இந்த பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும்போது அடுத்ததாக அமீர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு பாவனியிடம் அதிக நெருக்கம் காட்டி வருவதைப் பார்த்து பல ரசிகர்கள் காலாய்த்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை பாவனிடம் தெரிவித்து விட்டேன் என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

  Bigg Boss Tamil Season 5 | 22nd December 2021 - Promo 2 | அம்மாவை பார்த்து கதறி அழுத Raju
  மனம் உருகிய தருணம்

  மனம் உருகிய தருணம்

  நேற்றைய எபிசோடில் ராஜுவின் மனைவி மற்றும் ராஜுவின் அம்மா சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். இவர்களில் ராஜூ மற்றும் அவருடைய மனைவியின் நெருக்கமான அன்பை பார்த்து தன்னுடைய கடந்த கால நினைவுகளை நினைத்து கண்கலங்கியபடி பேசிக்கொண்டிருந்தார். இவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பிரியங்கா, எல்லாமே சீக்கிரமாய் மாறும் கண்டிப்பா உன்னுடைய சந்தோஷம் திரும்ப கிடைக்கும் என்று கூறியிருந்தார். இவர்கள் இருவரின் முகத்தை பார்க்கும் ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள். என்ன தான் வெளியே சந்தோஷமாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் அனைவரையும் மீறி இந்த மாதிரி சிந்தனைகள் ஏற்பட்டு விடுகிறது என்று பலர் கூறிவருகிறார்கள்.

  English summary
  Bhavani regrets thinking of her love affair.The sadness on Priyanka's face that consoled her has always had real meanings.Fans have been commenting that only those who have lost a life partner will understand its awesomeness.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X