For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிக் பாஸ் வீட்டில் வளைய வரும் போலீஸ்.. போட்டியாளர்களுக்கு மிரட்டலோ மிரட்டல்!

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கிடையே போலீஸ் - திருடன் டாஸ்க் தரப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை : பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே போலீஸ் - திருடன் டாஸ்க் தரப்பட்டுள்ளது.

பிக் பாஸ் முதல் சீசனில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது சீசனில் இல்லை. இதற்கு பிக் பாஸ் அளிக்கும் போரடிக்கும் டாஸ்க்குகளும் ஒரு காரணம் எனலாம். அந்தளவிற்கு அரைத்த மாவையே அரைக்கிறார்கள்.

இந்த வாரம் போட்டியாளர்களில் ஆறு பேர் மட்டும் போலீஸ் - திருடன் டாஸ்க்கில் பங்கேற்றுள்ளனர்.

புதிய டாஸ்க்:

புதிய டாஸ்க்:

சர்ச்சைகளுக்குப் பேர் போன மஹத், மும்தாஜ் மற்றும் சென்ட்ராயன் போலீஸ். இதேபோல், யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா மற்றும் டேனி ஆகியோர் திருடன். இவர்கள் ஆறு பேரும் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை.

சிம்பு மாதிரி:

சிம்பு மாதிரி:

சிரிப்பு போலீசாக வளிய வருகிறார் சென்றாயன். அவரது மேனரிஸம் வடிவேலுவை ஞாபகப் படுத்துவதைப் போல் உள்ளது. குஷ்பு படம் ஒன்றில் கோவை சரளா கதாபாத்திரத்தை ஞாபகப் படுத்துகிறார் மும்தாஜ். மஹத் இவர்களைவிட ஒரு படி மேலே போய் சிம்புவை பிரதிபலிக்கிறார்.

பெண் போலீஸ்:

பெண் போலீஸ்:

கிரீம் ஒன்றைத் திருடி போலீசில் சிக்கிக் கொள்கிறார் யாஷிகா. பெண் குற்றவாளியை பெண் போலீஸ் தான் கைது செய்ய வேண்டும் என ரூல்ஸ் பேசி, மும்தாஜ் வந்து யாஷிகாவைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

திருடன் செய்யும் சமாதானம்:

மற்றொரு காட்சியில் டேனி, ஐஸ்வர்யா, மஹத் மற்றும் யாஷிகா பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மஹத் பேசியது தொடர்பாக யாஷிகா எடுத்துச் சொல்கிறார். இதனால் ஆத்திரமடைகிறார் மஹத். அப்போது திருடன் டேனி, போலீஸ் மஹத்தைக் கண்ட்ரோல் செய்கிறார்.

இப்டி ஒரு ரூல்:

இப்டி ஒரு ரூல்:

ஆனாலும் கோபம் அடங்காத மஹத், கையில் இருந்த லத்தியை தூக்கி வீசி விட்டு ஆவேசமாகப் பேசிச் செல்கிறார். அதற்கு டேனி, ‘பிக் பாஸ் வீட்டில் நாம் உடைக்கும் பொருட்களுக்கு நாம் தான் பணம் தர வேண்டும்' இந்த ரூல் தெரியாதா எனக் கேட்கிறார். இப்படி ஒரு ரூல் இருப்பது இது மூலம் நமக்கும் தெரிய வருகிறது.

பாவப்பட்ட போலீஸ்:

பாவப்பட்ட போலீஸ்:

அதிகம் கலகலப்பில்லை என்றாலும், போரடிக்கவில்லை இந்த திருடன் போலீஸ் விளையாட்டு. திருடர்கள் போட்டியாளர்களின் மேக் அப் செட், கிரீம் என சில்லரைத்தனமாகத் திருடுகின்றனர். போலீசான மும்தாஜ் தன்னுடைய பொருட்களையும் காணவில்லை என பொதுமக்களைவிட பாவமாக திருடர்களிடமே முறையிடுகிறார்.

போலீஸ் அலப்பறை:

போலீஸ் அலப்பறை:

திருடர்களைத் தாண்டி மற்ற போட்டியாளர்களிடமும் தங்களது பவரைக் காட்ட முயற்சிக்கின்றனர் இந்த போலீசார். தங்களைப் பார்க்கும் போதெல்லாம் சல்யூட் வைக்க வேண்டும், இல்லையென்றால் 50 ரூபாய் அபராதம் என மிரட்டுகிறார்கள். இது நிஜ போலீசையே மிஞ்சுவதாக உள்ளது.

English summary
In Bigg Boss house, the contestants were given police and thief task for this week
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X