For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிக்பாஸ் 2: சேரே உடையும் அளவுக்கு தலைவர் பதவிக்கு அடித்துக் கொள்ளும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டின் தலைவர் ஆவது தொடர்பாக போட்டியாளர்கள் இடையே பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைவர் பதவிக்கு அடித்துக் கொள்ளும் போட்டியாளர்கள்!- வீடியோ

    சென்னை : பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் பதவிக்கு போட்டியாளர்கள் பலரும் போட்டியிடுகின்றனர்.

    பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. முதல் வாரம் டாஸ்க் ஒன்றின் மூலம் ஜனனி தலைவியானார். அதனைத் தொடர்ந்து அடுத்தவாரம் வித்தியாசமான முறையில் நித்யா தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், மூன்றாவது வாரத்தின் தலைவரை இன்று போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

    பதவிக்கு போட்டி ;

    பதவிக்கு போட்டி ;

    இதற்காக வித்தியாசமான முறையில் பிக்பாஸ் போட்டியொன்றை அறிவிக்கிறார். அதன்படி கன்ப்பெக்ஷன் ரூமில் உள்ள நாற்காலியில் முதலில் யார் உட்கார்கிறார்களோ அவர்களே இந்தவாரத் தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க முடியும்.

    புதிய ப்ரோமோ:

    புதிய ப்ரோமோ:

    இதற்கான அறிவுப்பு வந்த உடனே போட்டியாளர் முண்டியடித்துக்கொண்டு கன்ப்பெக்ஷன் ரூமுக்குள் ஓடினர். அனைவரும் ஒரே நேரத்தில் நாற்காலியில் அமர முயன்றதால், அந்த நாற்காலி உடையும் நிலை ஏற்பட்டது. இந்தக் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் உள்ளது.

    தலைவர் ஆசை :

    தலைவர் ஆசை :

    ஏற்கனவே, ஜனனி, நித்யா ஆகியோர் தலைவிகளாக இருந்து விட்டதால், அவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. மற்றவர்கள் தான் எப்படியும் இந்த வாரத் தலைவர் ஆகிவிட வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

     எலிமினேசன்:

    எலிமினேசன்:

    பிக்பாஸ் வீட்டின் தலைவராகி விட்டால், மற்றவர்களை அதிகாரம் செய்ய முடிகிறதோ இல்லையோ, ஆனால், நிச்சயம் தலைவரை எலிமினேசனுக்கு நாமினேட் செய்ய இயலாது. எஜமானி, உதவியாளர் டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே டேனி மற்றும் ரித்விகாவை இந்தவாரம் யாரும் எலிமினேசனுக்கு நாமினேட் செய்ய இயலாது. எனவே, மற்றவர்களுக்குத் தான் இந்த பயம் அதிகமாக உள்ளது.

    English summary
    In Bigboss 2 Tamil the contestants fights for this week captain post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X