For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘பாலாஜி வைரஸ் மாதிரி.. க்ளீன் செஞ்சே ஆகணும்'.. மும்தாஜிடம் கூறிய டேனி!

பாலாஜியை வைரஸ் என மும்தாஜிடம் தெரிவித்தார் டேனி.

Google Oneindia Tamil News

சென்னை: பிக் பாஸ் வீட்டில் பாலாஜி வைரஸ் மாதிரி என்றும், உடனே இதை க்ளீன் செஞ்சே ஆகணும்’ என்றும் தெரிவித்துள்ளார் டேனி.

பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்குகளில் அதிகம் ஆர்வம் காட்டாவிட்டாலும், புறணி பேசுவதற்கென்றே இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர். சகபோட்டியாளர்களிடம் பேசும்போதும், பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிய புறணியாகத் தான் இருக்கிறது பாலாஜியின் பேச்சு.

கமல் கண்டித்த பிறகும் தொடர்ந்து பீப் வரும் வண்ணம் பேசி வருகிறார் என்ற அதிருப்தியும் அவர் மீது உள்ளது.

பொங்கியெழுந்த மஹத்:

பொங்கியெழுந்த மஹத்:

இந்நிலையில், வழக்கம்போல் நேற்றும் மஹத்திடம் டேனி குறித்துப் புறணி பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி. அப்போது, ‘மஹத்தைப் பார்த்து டேனி ஏதோ சமிக்சை செய்ததாக' அவர் குறிப்பிட்டார். சட்டென கோபப்படும் மஹத் சும்மா இருப்பாரா, உடனடியாக பொங்கியெழுந்தார்.

விளக்கம்:

விளக்கம்:

அப்போது எனப் பார்த்து சரியாக அவர்கள் பேசிக் கொண்டிருந்த படுக்கை பகுதிக்கு வந்தார் டேனி. அங்கு தன்னைப் பற்றி பேச்சு நடந்து கொண்டிருப்பதை, அவர்களது நடவடிக்கை மூலம் தெரிந்து கொண்ட அவர், தன்னால் இயன்ற விளக்கத்தை அளித்து விட்டு நகர்ந்தார்.

பாலாஜி ஒரு வைரஸ்:

பாலாஜி ஒரு வைரஸ்:

பின் கார்டன் பகுதிக்கு வந்த டேனி, இது குறித்து மும்தாஜிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது, "பாலாஜி வைரஸ் மாதிரி. நல்ல வைரஸ் இல்ல. இதை க்ளீன் செஞ்சே ஆகணும்" என்றார் டேனி. மும்தாஜும் இதனை ஆமோதிப்பது போல் பேசினார்.

போலி:

போலி:

பாலாஜியின் தூண்டுதலால் டேனி, மஹத் நட்பில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து சில நாட்களாக டேனி போலியாக நடிக்கிறார் என்ற பேச்சு பிக் பாஸ் வீட்டில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் எதிரொலியாகவே மற்ற போட்டியாளர்கள் அவரைத் தனிமைப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In Bigg boss 2 Tamil house, Deni said that Balaji is like a virus and should be cleaned off.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X