• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிக் பாஸ் 3: எதிர்பாராத டிவிஸ்ட் வைத்த சாண்டி.. கதறி அழுத லாஸ்லியா, முகென்.. ஏமாற்றம் தந்த கமல்!

|
  Bigg Boss 3 Tamil: Day 6: Promo 1: Losliya: இந்த அழகிய சிரிப்புக்குள் இத்தனை கஷ்டமா?- வீடியோ

  சென்னை: வழக்கம் போல், கமல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள, நேற்றைய எபிசோட்டில் லாஸ்லியா மற்றும் முகென் தங்களது சோக அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டாம் நாளே அதிரடியாக புதிய போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார் மீரா மிதுன். அதுவரை சுமூகமாக போய்க் கொண்டிருந்த பிக் பாஸ் வீடு அதன் பிறகு ரணகளமானது. மீரா மிதுனால் வீட்டுக்குள் பல்வேறு குரூப்புகளாக போட்டியாளர்கள் பிரியத் தொடங்கியுள்ளனர்.

  நேற்று சனிக்கிழமை என்பதால், கமல் வருவார் நிச்சயம் மீராவுக்கு குட்டு வைப்பார் என்பது தான் பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. வழக்கம் போல், நிகழ்ச்சி தொடங்கியதும் அகம் டிவி வழியாக வீட்டிற்குள் செல்லாமல், முந்தைய நாள் வீட்டில் நடந்த சம்பவங்களின் தொகுப்பைக் காண்பித்தனர்.

  bigg boss 3 tamil day 6 episode attracts the viewers

  முந்தைய நாள் பிரச்சினை இன்னமும் ஓயவில்லை போல, சரவணன் மீரா மிதுனுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தார். ஆனால் மற்ற எல்லோரையும் போல், அவரையும் மீரா சட்டை செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்தார் சரவணன்.

  பிறகு சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் அனைவரும். அப்போது எதையோ மசிக்க வேண்டும் என தர்ஷன், கவின், லாஸ்லியா, சாண்டி மற்றும் மோகன் வைத்யா வேலையை ஆரம்பித்தனர். என்ன காரணம் எனத் தெரியவில்லை திடீரென கோபப்பட்டார் மோகன். சமாதானம் செய்ய முயன்ற தர்ஷனை அவர் காயப்படுத்தினார். 'இனி என்னை அப்பானு கூப்பிடாதே' என்ற அவரது வார்த்தையால், தர்ஷன் அழுதார். பிறகு மோகனை ஆசுவாசப்படுத்தும் பணியில் ஒரு குரூப்பும், தர்ஷனை ஆறுதல் படுத்தும் பணியில் ஒரு குரூப்பும் ஈடுபட்டது.

  பின்னர் ஒரு வழியாக சமாதானம் ஆனார் மோகன். தர்ஷன் வந்து கட்டிப் பிடித்து தன் பாசத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வனிதா, சைடு கேப்பில், 'டாடினாலே லூசு தான்' என தன் தந்தையை குத்திக் காண்பித்தார்.

  bigg boss 3 tamil day 6 episode attracts the viewers

  அந்தநாள் இனிமையாக முடிய, அடுத்த நாள் காலை, 'ஒத்தையடி பாதையிலே' என்ற பாடலுடன் சுகமாக விடிந்தது. ஆண்கள் எல்லாம் படுக்கையில் படுத்திருக்க, நேற்று பெண்கள் அணி தான் போட்டி போட்டு டான்ஸ் ஆடியது. அதிலும், லாஸ்லியா ஆசம். அவரது டான்சைப் பார்ப்பதற்காகவே ஆண்கள் படுக்கையறையை விட்டு வெளியில் செல்லவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அந்தளவிற்கு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் வளைந்து நெளிந்து அழகாக ஆடிக் கொண்டிருந்தார் லாஸ்லியா.

  பிறகு என்ன டாஸ்க் என்றே தெரியவில்லை, அனைவரையும் அழைத்து கார்டன் ஏரியாவில் அமர்ந்து பாட்டும், டான்ஸும் சொல்லிக் கொண்டிருந்தார் லாஸ்லியா. அவர் அமர்ந்த இடத்திலேயே வசீகரா பாடலுக்கு டான்ஸ் ஆடி இளைஞர்களின் மனதை வசீகரித்தார். பிக் பாஸ் குசும்புக்காரர், ரொமாண்டிக்கான அந்தப் பாடலுக்கு கவின், முகென் என இளசுகளின் ரியாக்சாக குளோசப் வைத்து அசத்தினார்.

  பிறகு படுக்கையறையில் மாஸ்க் ஒன்றை முகத்தில் வைத்துக் கொண்டு பயமுறுத்தினார் வனிதா. அடுத்த காட்சியில் அனைவரும் டாஸ்க் ரூமில் இருக்க, மீரா குளிக்கப் போய் விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் வனிதா, அவரைத் திட்டிக் கொண்டிருந்தார். பின்னர் மீரா வந்து விட அந்த டாஸ்க் ஆரம்பித்தது. சாண்டி பேச வந்தார். அய்யோ இவர் என்ன பேசி அழ வைக்கப் போகிறாரோ என போட்டியாளர்கள் கிளிசரின் மொமண்டுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

  ஆனால் எதிர்பாராத டிவிஸ்டுகளை வைத்து சூழ்நிலையை கலகலப்பாக்கினார் சாண்டி. பீச்சில் குளித்து விட்டு உள்ளாடையும் வீடு திரும்பியது, அம்மா கொடுத்த தண்டனை என பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கின் டோனையே மாற்றினார். இதனால் அழத் தயாராக வந்தவர்கள் சிரித்தபடி அமர்ந்திருந்தனர். அதெப்படி நீங்கலாம் சிரிக்கலாம் என அடுத்து லாஸ்லியாவை களமிறக்கினார் பிக் பாஸ்.

  அவர் தன் சகோதரியின் தற்கொலை, அப்பாவின் பிரிவு என உருக்கமாகப் பேசி அனைவரையும் கலங்க வைத்தார். தன் அப்பா சேரன் மாதிரியே இருப்பார் என லாஸ்லியா கூறவும் உணர்ச்சி வசப்பட்டார் சேரன். பிறகு பினிசிங் டச்சாக யாரும் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என நல்லதொரு அட்வைஸ் கூறி அப்ளாஸ் வாங்கினார் லாஸ்லியா. கடைசியாக, 'நான் யாருக்கும் தெரியாமல் சைட் அடிப்பேனாக்கும்' என ரகசியம் கூறி, இளைஞர்களின் மனம் கவர்ந்தார். ஆனால், சட்டென்று அதில் மண்ணை வாரிப் போட்டு, 'அந்த எண்ணத்தை எல்லாம் இப்டியே விட்ரு' என கேப்டன் பேசி, பிக் பாஸின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார்.

  அடுத்து பேச வந்த முகெனும் அப்படித்தான். பெற்றோர்கள் சண்டையால் குழந்தைகளின் மனநிலை, வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பதை தெளிவாக, தன் வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் உருக்கமாக தெரிவித்தார். அவரும் கடைசியில் நல்ல மெசேஜ் கூறியது வரவேற்கும்படி இருந்தது.

  எனன் காரணமோ தெரியவில்லை மீராவின் ஸ்டோரியை எடிட் செய்து விட்டார்கள். பின் படுக்கையறைக்குத் திரும்பியதும், மீராவிற்கு அப்பா இல்லை எனத் தெரிந்து கொண்டதால் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார் வனிதா. அதன் மூலம், மீராவும் தனது கதையைச் சொல்லி விட்டார் என்பது தெரிந்தது.

  பிறகு கவினின் அட்ராசிட்டியைக் காண்பித்தார்கள். சத்தமில்லாமல் வீட்டிலுள்ள இளம் பெண்களை எல்லாம் தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறார் கவின். அதை ஜாலியாக அவரே அடிக்கடி நிகச்சியில் உறுதி செய்தும் வருகிறார். நேற்றும் லாஸ்லியாவுடன் ஏதோ ரகளை செய்து கொண்டிருந்தார். அவரது வாட்டர் பாட்டிலை எடுத்து வைத்துக் கொண்டு, 'நான் உன் அண்ணன் இல்லை' என்று சொல் என வம்பிழுத்தார். ஆனால் லாஸ்லியாவும் சளைக்கவில்லை. சாண்டி உதவியுடன் அந்த வாட்டர் பாட்டிலை கையில் கட்டிக் கொண்டு தூங்கினார் கவின். பிறகு நள்ளிரவு ஒரு மணி வரை இந்தப் பிரச்சினை நீடித்தது. கடைசியில் 'நீ என் அண்ணன் இல்லை. எனக்கு யாருமில்ல' என எக்ஸ்ட்ரா சில வார்த்தைகளைச் சேர்ந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டார் லாஸ்லியா.

  பின் அகம் டிவி வழியே வீட்டிற்குள் சென்றார் கமல். அங்கிருந்தவர்களிடம் ஜாலியாகப் பேசினார். தான் தர வேண்டிய மெடலை தர்ஷன் மூலம் மீராவிற்கு தர வைத்தார். அதன் பிறகு, போட்டியாளர்கள் கமலிடம் கேள்விகள் கேட்க, 'எக்குத்தப்பான கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன். அது எனக்கு பழகிவிட்டது, எல்லா விமர்சனத்துக்கும் நான் பதிலளிக்க மாட்டேன். நல்லவிதமான விமர்சனத்திற்கு மட்டும் நான் பதிலளிப்பேன். அதனை மட்டுமே நான் ஏற்றுக்கொள்வேன்' தனக்கான மேடையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் கமல்.

  கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பாத்திரம் கழுவுவது, காம் டவுண் என பலப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில், அவை எதைப் பற்றியுமே பேசாமல், குறும்படம் எதுவும் காட்டாமல் கமல் நிகழ்ச்சியை முடித்தது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

  எதிர்பார்க்காததைச் செய்பவர் தான் பிக் பாஸ். எனவே இன்று அதைப் பற்றி கமல் ஏதாவது பேசலாம் எனத் தெரிகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  The sixth day episode of bigg boss 3 tamil attracted the viewers very much.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more