• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Bigg Boss 3 Tamil: அதை அவங்க சொல்லி அனுப்பலை... வனிதாவும் அதை கேட்கலை!

|
  Bigg Boss 3 Tamil : Highlights : அபியை சமாதானம் செய்யும் Mugen- வீடியோ

  சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வனிதா விஜயகுமார் மீண்டும் வந்துள்ளார். நிஜமாவே வனிதா கட்ஸ் லேடிதான். சத்தமான குரலில் சாந்தமாக சில விஷயங்கள், ஆவேசமாக சில விஷயங்கள் என்று பேசி, ஹவுஸ் மேட்ஸை அதிர வைத்துவிட்டார்.

  ஒரு பெரியவரா இந்த வீட்டில் நடந்த பல விஷயங்களை நீங்கள் தட்டிக் கேட்கவில்லை என்று சேரனிடம், ஒரு தங்கையாக கேட்கிறேன் என்று சொன்னார்.

  அதென்ன தர்ஷன் உனக்கு வின்னர் பட்டத்தை பிச்சை போட்டால் நீ ஏத்துக்குவியான்னு கேட்டு அவரை சற்று நேரம் திண்டாட வைத்தார். அபிராமியை தட்டிக் கொடுத்தார், லாஸ்லியாவை அடக்கி வைத்தார்.

  Nayagi Serial: இதுதான் தலையணை மந்திரம்னு சொல்வாங்களே.. அதுவா?

  பிக் பாஸ் ஹோட்டல்

  பிக் பாஸ் ஹோட்டல்

  பிக் பாஸ் வீடு சில நாட்களுக்கு லக்ஜூரி பட்ஜெட்டுக்காக பிக் பாஸ் ஹோட்டலாக மாறுகிறது. இந்த ஹோட்டலுக்கு விருந்தினர் ஒருவர் வரப்போகிறார் என்றும், அவரை மனம் கோணாமல் பார்த்து பார்த்து கவனிக்கும் படியும் பிக் பாஸ் அறிவிப்பு வந்தது.உடனே ஹவுஸ் மேட்ஸ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு தயாராகி ஆவலுடன் காத்து இருந்தார்கள்.

  கஸ்தூரி சேரன்

  கஸ்தூரி சேரன்

  பிக் பாஸ் ஹோட்டலுக்கு போயி யார் யாரை என்னென்ன கேட்கணும்னு சொல்லி அனுப்பி இருந்தார்களோ அதை அப்படியே கச்சிதமாக குரலை உயர்த்தி பேசினார் வனிதா. மறுபடியும் சேரனிடம் வந்து நீங்கள் தட்டிக் கேட்காதது எனக்கு வருத்தம் என்றார்.அதற்கு சேரன்,எந்த இடத்தில் என்று சொல்லுங்கள் மேடம் என்று கேட்க, உடனே தர்ஷன் விஷயம் பேசிகிட்டு இருந்தோம்ல என்று ஜம்ப்பாகி விட்டார். இதை இன்னொரு முறை கேட்க கஸ்தூரியும் துணியவில்லை,கேள்வி கேட்ட சேரன் கூட துணியவில்லை.

  ஜட்ஜ்மென்ட் கஸ்தூரி

  ஜட்ஜ்மென்ட் கஸ்தூரி

  கஸ்தூரியின் ஜட்ஜ்மென்ட் தவறு என்பதை சுட்டி காட்டினார்.உண்மையில் கஸ்தூரி ரொம்ப சாஃப்டா உட்கார்ந்து இருந்தார். கவினை ஒர்த் இல்லை என்றும், ஆனால், நான் பேசப்போவது உனக்கு ஒர்த்தா இருக்கும் என்றும் அதிகாரத் தோரணையில் பேசினார். உண்மையில் பிக்பாஸ் வீடு ஆடித்தான் போயிருக்கிறது. கஸ்தூரி ஜட்ஜ்மென்ட் தவறு என்பதோடு, ஜெயிக்கத்தான் வந்திருக்கிறீர்கள் ,இதில் எதை யாருக்கு யார் விட்டுக்கொடுப்பது என்கிற பாணியில் பேசி அனைவரையும் தலை குனிய வைத்தார்.

  சரணவன் மதுமிதா

  சரணவன் மதுமிதா

  மதுமிதாவைப் பற்றியும், அபிராமியைப் பற்றியும் புகழ்ந்து பேசினார்.அபிராமியால் முகேன் முன்னேறி செல்வதில் தடை ஏற்படும் என்று கமல் சார் சொன்னாரே.. முகேன் நீ யோசிச்சியா, உன்னால் அபிராமி வளர்ச்சி தடைப்பட்டு போகுதேன்னு என்று கேட்டு அதிர வைத்தார். கமல் சார் பேச்சுக்கே எதிர்வினை ஆற்றிய வனிதா உண்மையில் உண்மைடா... நீதிடா.. நேர்மைடா.. என்கிற அப்பாவின் நாட்டாமை மறுபதிப்பாய் தெரிந்தார்.

  இவங்க கேட்கலை

  இவங்க கேட்கலை

  அதே சமயம் சரவணன் சார் என்று மதுமிதா பேச வரும்போது பேச்சை திசை திருப்பி விட்டார். அவங்க என்ன பேசச்சொல்லி அனுப்பினாங்களோ, அதை தெள்ள தெளிவாக கொஞ்சமும் பயமின்றி பேசி, அனைவரின் நாடித் துடிப்பையும் எகிற வைத்த வனிதா உண்மையில் கட்ஸ் லேடிதான்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Vanitha Vijayakumar has returned to Vijay TV's Bigg Boss Show. The real lady is Vanitha Cut's Lady. Speaking of loud things, some of the loudest things in a loud voice, the house mates are stunned.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more