முட்டையை உடை..டிக்கெட்டை எடு.. ஜெயிக்கப்போவது யாரு.. கதறி அழும் பாவனி
சென்னை: ஒரு டிக்கெட் எடுப்பதற்காக முட்டையை உடைத்து போட்டியாளர்கள் செய்யும் அலப்பறை வேற லெவல் இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ராஜூ செய்த செயலால் பாவனி கதறி அழுதுள்ளார்.
ராஜேந்திர பாலாஜி எங்கே?.. அதிமுக நிர்வாகிகளிடம் தொடங்கிய அதிரடி விசாரணை
ராஜுவின் வித்தியாசமான விளையாட்டை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பிக் பாஸின் புதுமுயற்சி
இந்த சீசனில் நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியாளரை தேர்ந்தெடுப்பதற்காக டிக்கெட் டூ பினாலே டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த போட்டியாளர் டிக்கெட்டை ஜெயித்து கொள்கிறாரோ அவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் தகுதியுடையவர் என்று அறிவித்துள்ளது. இதற்காக போட்டியாளர்களுக்குள் நேற்றைய எபிசோடில் இருந்து பிரச்சனைகள் ஏற்பட தொடங்கி விட்டது. விதவிதமான சாப்பாடு போட்டு வில்லங்கத்தை அனுப்பியிருக்கும் பிக் பாஸ் இன் புதுமுயற்சி அனைவரையும் மிரட்டி இருக்கிறது.

நிரூபிக்கும் வைத்த செக்
நேற்றைய எபிசோட்டில் விதவிதமான சாப்பாடு பார்ட்டி எல்லாம் வெகு ஜோராக இருந்தாலும் டாஸ்க்கு விஷயத்தில் பிக் பாஸ் கண்டிஷன் அனைவரையும் வியப்படைய செய்துவிட்டது. இந்தப் போட்டியில் தொடர விரும்பாத ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் சொன்னதை கேட்டு போட்டியாளர்கள் ஆளாளுக்கு குறைகளை பேசத் தொடங்கிவிட்டார்கள். இதனால் நிரூப்பை விளையாட்டில் தொடர முடியாமல் ஆரம்பத்தில் தடை செய்துவிட்டனர். இது ரசிகர்கள் பலருக்கும் எரிச்சலை கொடுத்திருக்கிறது.

இது தான் ரூல்ஸ்
டாஸ்க் என்றால் அதில் திறமையை காட்டி ஜெயிக்க வேண்டும் குறைகூறி ஜெயிக்க கூடாது என்று நேற்றைய எபிசோடு களுக்கு ரசிகர்கள் அதிகமாக கமெண்ட் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று முட்டை உடைத்து பிக் பாஸ் புது முயற்சியை தொடங்கி இருக்கிறது. 7 போட்டியாளர்களும் தங்களுக்கு கொடுத்த முட்டைகளை பாதுகாக்க வேண்டும் அதே நேரத்தில் அடுத்த போட்டியாளர்கள் முட்டைகளையும் உடைக்க வேண்டுமென்று விளையாட்டு ரூல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது விளையாட்டை திறமையை நிரூபிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எல்லா பக்கமும் சண்டைக்களம்
பிசிக்கல் டாஸ்க் வந்தால் ராஜு அதில் சிறப்பாக விளையாடவில்லை என்று பலர் குறை கூறிக் கொண்டிருந்த நேரத்தில், இன்று என்னுடைய விளையாட்டு வேற லெவல் இருக்கப்போகிறது என்று நிரூபிக்க வேண்டும் என நினைத்திருந்த ராஜூ, பாவனியின் முட்டைகளை தலையால் மோதி வித்தியாசமாக உடைத்திருக்கிறார். பாவனி ஒரு பக்கமாக சஞ்சீவ் முட்டைகளை உடைத்து கொண்டிருக்கிறார். இவர்களுக்குள் ஒரு பிரச்சனை என்றால் பிரியங்காவும் ,தாமரையும் கொண்டைமுடி சண்டையில் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

இது முடிவு அல்ல. ..
கயிறு டாஸ்க்கில் அமீர் தாமரைக்கு விட்டுக் கொடுத்ததால் இந்த டாஸ்க்கில் எப்படியும் அவரை ஜெயித்து விட வேண்டும் என்று நினைத்துவிட்டார் போல. அதனால் தான் தாமரையின் முட்டைகளை சல்லிசல்லியாக அமீர் நொறுக்கி விட்டார். இந்த முட்டையை உடைத்து டிக்கெட்டை தூக்குவது யார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கும் நேரத்தில், இந்த விளையாட்டில் குறைவான முட்டைகள் வைத்திருக்கும் போட்டியாளர்கள் அடுத்த டாஸ்க்கில் தொடர முடியாது என்று பிக்பாஸ் கூறி இருக்கிறது. அப்படி என்றால் இன்னும் டாஸ்க் இருக்கப் போகறதா??என ரசிகர்கள் ஆர்வத்தோடு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். தன்னுடைய முட்டைகளை உடைத்து விட்டதால் பாவனி கதறி அழுது கொண்டிருக்கிறார். பாவனியின் அழுகையை பார்த்து பதறிப்போன நிரூப் என்னாச்சி என்று ஆறுதல் கூறி வருகிறார்.