• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் வழிய விட்டு.. ரிஸ்க் எடுக்கிறதெல்லாம்.. ஜூலிக்கு ரஸ்க் சாப்பிடுவது போல!

|

சென்னை: போட்டோ ஷூட் மோகத்தில் பல கதாநாயகிகளும் போட்டி போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமில் கலக்கிக் கொண்டிருக்கும் போது பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலியும் நானும் சளைத்தவரல்ல என்று எல்லோருக்கும் சவால் விடும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி கலக்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அனல் தெறிக்கும் அளவிற்கு போட்டோஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் ஜூலி. எப்பவுமே வித்தியாசமாக பண்ணும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோசூட் வேற லெவலில் உருவாகியுள்ளது.

இவர் ஒரு செவிலியராக இருந்தாலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று தனக்கென்று ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

ப்ளூ கலர் சட்டை போட்டு வந்தாரா.. டக்குன்னு எழுந்துட்டேன்.. சிலிர்த்துப் போன ரம்யா

 ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி

ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமானதை தொடர்ந்து தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வீட்டிற்குள் சென்ற புதிதில் அவருக்கு பெரும் ஆதரவும் இவர் குழந்தைத்தனமான பேச்சை ரசிகர்கள் ரொம்பவே ரசித்து வந்தார்கள். ஆனால் இடையில் இவர் ஓவியாவை பற்றி தவறாக பேசிய வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நெகட்டிவ் கேரக்டரை உருவாக்கி விட்டது .

 முழு நேர மாடலிங்

முழு நேர மாடலிங்

அதன் பிறகு இந்த வீட்டிற்குள் கடைசிவரை இவரால் நிலைத்து இருக்க முடியவில்லை. ஆனால் வெளியே வந்த பிறகு இவர் மாடலிங்கில் கலக்க ஆரம்பித்து விட்டார். அதன்பிறகு இவர் செவிலியர் பணியை விட்டுவிட்டு முழு நேரமாக மாடலிங்கில் தனது கவனத்தை செலுத்தி விட்டார். தற்போது அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த அளவிற்கு பல ரசிகர்களை தன் அழகால் இழுத்துவிட்டார். ஆனாலும் எதிர்பார்த்த அளவில் படவாய்ப்புகள் அவ்வளவாக இவருக்கு இன்னும் வரவில்லை.

 வடிய வடிய போஸ்

வடிய வடிய போஸ்

இதனால் போட்டோஷூட்டில் குதித்து விட்டார். விதம் விதமாக அவர் எடுத்துப் போடும் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. எவ்வளவு கஷ்டமான வலியாக இருந்தாலும் தன்னால் தாங்கிக்கொள்ள முடியும் என்றும் என் அழகை மட்டுமே காட்டி ரசிகர்களை சம்பாதிக்கவில்லை எனக்கு திறமையும் இருக்கிறது என்று நிரூபிக்கும் வகையாக கொஞ்ச நாளைக்கு முன்னாடி மெழுகுவர்த்தியை எல்லாம் தன் மேல் ஏற்றி மெழுகு வடிய வடிய போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 இப்படி ரிஸ்க் எடுக்கணுமா

இப்படி ரிஸ்க் எடுக்கணுமா

இவருடைய இந்த போஸ்டரை பார்த்து பலரும் ஆதரித்தாலும் சிலர் திட்டி தீர்த்தார்கள் .இந்த அளவிற்கு உடம்பில் தீயை ஏற்றி வைத்து ஒரு போட்டோக்கு இப்படியெல்லாம் எடுக்கணுமா என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள். ஆனால் இவர் அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. அதற்குப்பிறகு விதவிதமாக மேக்கப் போட்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார் .சில விளம்பரப் படங்களிலும் நடிப்பதற்கு இவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 ஹீரோயினாகணும்

ஹீரோயினாகணும்

ஆனாலும் தன்னுடைய ஆசையை இன்னும் நிறைவேறவில்லை என்று கதாநாயகி வாய்ப்பு தான் தனக்கு வேண்டுமென்று அதற்காக கலக்கல் போட்டோஸ் நடத்திக் கொண்டிருக்கிறார். பலர் இவரது அழகை புகழ்ந்து தள்ளினாலும் இன்னமும் டைரக்டர்களும் சினிமா வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் கொஞ்சம் கூட சளைக்காமல் அவர் மீண்டும் இப்போது ஒரு வைரல் போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார். முகமெல்லாம் கருப்பு பூசி வித்தியாசமான ஒரு போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார்.

 ஜூலியிடம் குவியும் வாழ்த்துகள்

ஜூலியிடம் குவியும் வாழ்த்துகள்

இந்த போட்டோக்களை பார்க்கும் பல ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் .பலர் இவரது கடின உழைப்பைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு சிலர் இதிலேயும் அவரை கலாய்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் . அவரை கலாய்த்து வார்த்தை விளையாட்டும் ஜாலியாக நடந்து கொண்டுதான் உள்ளது. சிலர் மீரா மிதுனையும் இதில் கோர்த்து விடுகின்றனர். ஏற்கனே வாய்க்கா சண்டை இருக்கிறது.. இதில் இவர்கள் வேறயா.!

 ஜூலியோட நல்ல மனசு

ஜூலியோட நல்ல மனசு

அதேசமயம் ஜூலிக்குள் புதைந்திருக்கும் நல்ல மனசு சமீபத்தில் வெளிப்பட்டது. மாங்காட்டில் இருக்கும் ஆதரவற்றோர் முகாமுக்குச் சென்று அங்கு உதவிகளைச் செய்து வந்துள்ளார். அதுகுறித்து போஸ்ட்டும் போட்டுள்ளார். அவரது இந்த நல்ல மனசை பலரும் பாராட்டி வாழ்த்திக் கொண்டுள்ளனர். என்னதான் யார் கலாய்த்தாலும் தன் பாதையில் ஜம்மென்று நடைபோடும் ஜூலியை பாராட்டித்தாங்க ஆகணும்.

 
 
 
English summary
Bigg Boss Julie new get up for photoshoot is rocking in instagram.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X