பிக் பாஸ் தமிழ் 5:கோபமா..எனக்கா..ராஜு மேலேயா.. இது மட்டும்தான் காரணம்.. பாவனியின் புது விளக்கம்
சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ராஜூ பற்றி தன்னிடம் கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு பாவனி விளக்கம் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்ததற்கும் வெளியே வந்ததற்கும் அதிக அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாவனியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 5: பல நேரங்களில் அமைதியாக இருப்பதற்கு காரணம் இதுதானா??ராஜுவின் கண்ணீர் கதை

முதல் முறையாக ரசிகர்களுடன் லைவில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி தற்போது ஐந்தாவது சீசனில் முடிவடைந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட பாவனி இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இன்ஸ்டாகிராம் லைவ் மூலமாக ரசிகர்களிடம் பேசியுள்ளார். முதல்முறையாக சமூக வலைத்தளத்தில் இவரிடம் ரசிகர்கள் பலர் கேள்விகளை கேட்டு வந்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பாவனி பதிலளித்துள்ளார் . பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியின் ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வந்தனர்.

இது தான் ஆசை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவால் தான் பாவனி 11 முறை காப்பாற்றப்பட்டுள்ளார். போட்டியாளர்கள் இவரை ஒவ்வொரு முறையும் எலிமினேஷனில் நாமினேட் செய்யும்போதும் ரசிகர்கள் பாதுகாக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் தேர்வாகியுள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்த தன்னுடைய ரசிகர்களை நேரடியாக மீட் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருக்கிறாராம். அது முடியாததால் தற்போது லைவ்வில் பேசியுள்ளார்.

ரசிகரின் கேள்வி
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு போட்டியாளர்கள் பலரும் தன்னுடைய ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் பாவனியும் தன்னுடைய ரசிகர்களிடம் மீண்டும் நெருக்கமாக மாறத் தொடங்கி இருக்கிறார். நேற்று இன்ஸ்டாகிராமில் 5 மணியளவில் இவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது ஒரு ரசிகர் ராஜுவின் மீது நீங்கள் இன்னும் கோபத்தில் தான் இருக்கிறீர்களா??என்று கேட்டிருக்கிறார். அதற்கு நானா..??கோபமா??? என்று குழந்தை போல எதிர் கேள்வி கேட்டிருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே நாங்கள் இருவரும் சில நேரங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் பல நேரங்களில் ஒற்றுமையாக இருந்தோம் என்று கூறியுள்ளார்.

பாவனியின் விளக்கம்
பிக்பாஸ் வீட்டிற்குள் நாங்கள் செய்ததில் பல விஷயங்களை வெளியே காட்டப்படவில்லை. சில நேரங்களில் நாங்கள் செய்யும் ஒருசில செயல்கள் மட்டும்தான் இங்கே பூதாகரமாக காட்டப்பட்டது. அந்த மாதிரி ஒரு சில நேரங்களில் மட்டும் தான் நாங்கள் சண்டை போட்டுள்ளோம். பிறகு பிக்பாஸ் வீட்டுக்குள்ளே நாங்க ஒற்றுமையாக இருந்த வெளியே வந்த பிறகும் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தான் இப்போது கர்நாடகாவில் இருப்பதால் யாரையும் மீட் பண்ண முடியவில்லை. விரைவில் அனைவரையும் சந்திப்பதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.