பிக் பாஸ் தமிழ்5: முதல் முறையாக யாரும் செய்யாத சாதனையை செய்து அசத்திய பாவனி..வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இதுவரைக்கும் யாரும் செய்யாத சாதனையை பாவனி செய்து காட்டியுள்ளார்.
பாவனியின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பாசத்தை தற்போது நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
பிக் பாஸ் தமிழ் 5: முதல்முறையாக பினாலே மேடையில் நடந்த அதிசயம்.. வாழ்த்தும் ரசிகர்கள்

3வது இடத்தில் வெற்றி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்பு ஒளிபரப்பான 4 சீசன்களில் யாரும் செய்து காட்டாத அதிசயத்தை பாவனி முதல் முறையாக தன்னுடைய ரசிகர்களால் செய்துள்ளார். அவருடைய ரசிகர்களின் சப்போர்ட் அவருக்கு பெரிய அளவில் இருந்ததன் காரணமாக தான் அவரால் இந்த சீசனின் மூன்றாவது இடத்தில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரே எதிர்பார்க்காத இந்த வெற்றி சமூக வலைத்தளத்தில் அவருடைய ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சின்னத்தம்பி நந்தினியாக அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியல் மூலமாக நந்தினி கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த பாவனி அதற்குப் பிறகு பல வருடங்களாக இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த சீரியல் முடிவடைந்ததும் பல ரசிகர்கள் இவரை மிஸ் பண்ணி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் சன் டிவியில் ராசாத்தி சீரியலில் கலக்கிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த சீரியல் எதிர்பார்த்த அளவிற்கு அதிக நாட்கள் ஒளிபரப்பவில்லை .இதனால் இந்த சீரியல் விரைவில் முடிக்கப்பட்டு விட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பு
அதற்கு பிறகு எந்த சீரியல்களிலும் தலையை காட்ட வில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வந்தார். போட்டோஷூட்டில் அதிகமாக கலக்கிக் கொண்டிருந்த இவர் மாடர்ன் உடை முதல் ட்ரெடிஷனல் உடை வரை விதவிதமான போட்டோக்களை எடுத்து தன்னுடைய ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுத்து என்டர்டைன்மென்ட் கொடுத்துக்கொண்டிருந்தார் . இந்த நிலையில் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி விட்டார்.

புதிய சாதனை
இந்த ஐந்தாவது சீசனில் அதிகமான போட்டியாளர்கள் புதுமுகமாக இருந்தாலும், இவர் ரசிகர்களுக்கு பரிச்சயமாக இருந்ததால் இவருக்கு தான் முதல் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் இவர் எலிமினேஷனில் போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும் ரசிகர்களால் காப்பாற்றப்பட்டு வந்தார். தொடர்ந்து 11 வாரங்கள் இவர் எலிமினேஷனில் வந்துள்ளார். ஆனால் ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் இவரை காப்பாற்றி விட்டனர். இதை இவரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்கு அவர் நன்றிகளை கூறியிருக்கிறார். இதற்கு முந்தைய சீசன்களில் இந்த மாதிரி யாருக்கும் நடைபெற்றது இல்லை என்று கூறி வருகின்றனர்.