திருச்செந்தூரில் திக்குமுக்காடிப் போன தாமரைச்செல்வி... அலைகடலென அன்பு காட்டிய ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தாமரைச்செல்வி முதல்முறையாக திருச்செந்தூர் சென்றுள்ளார்.
குடும்பத்தோடு கோவிலுக்கு சென்ற தாமரை செல்வி ரசிகர்களின் அன்பை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு உள்ளார்.
பிக் பாஸ் தமிழ் 5:கோபமா..எனக்கா..ராஜு மேலேயா.. இது மட்டும்தான் காரணம்.. பாவனியின் புது விளக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமான தாமரைச்செல்வி இந்நிகழ்ச்சியில் வருவதற்கு முன்பு ஒரு நாடக கலைஞராக இருந்துள்ளார் .ஒரு நாடக கலைஞராக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக பலருடைய வாழ்க்கை மாறி உள்ளது. அந்த வகையில் தாமரைச் செல்வியின் வாழ்க்கையும் அவர் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று அவரே கூறியுள்ளார்.

திருச்செந்தூரில் தரிசனம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம்தான் முடிவடைந்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய வழக்கமான பணிகளை செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை இது வரைக்கும் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது அவர்களை பார்க்க முடியவில்லையே என்று ஏங்கி போயிருக்கின்றனர். இந்த நிலையில் தான் இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததற்கு திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தாமரைச்செல்வி திருச்செந்தூர் சென்றுள்ளார் .

திணற வைத்த அன்பு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் தாமரைச்செல்வி இருக்கும்போது அவருக்கு அதிகமான ஆதரவு கிடைத்தது. இதை அவர் வெளியே வந்த பிறகுதான் தெரிந்து கொண்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார். தற்போது வெளியே சென்ற இடத்தில் தங்களக்கு கிடைத்த ஆதரவை பார்த்து அவரும் அவருடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதில் தாமரைச்செல்வி உணர்ச்சிவசப்பட்டு பேச வார்த்தையின்றி ரசிகர்களுக்கு நன்றி கூறி அவர்களோடு செல்பி எடுத்து விட்டு வந்து இருக்கிறார்.

ரசிகர்களின் அறிவுரை
தாமரைச்செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக வெளியே சென்ற இந்த வீடியோ தற்போது அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலர் தாமரைச்செல்விக்கு அறிவுரைகளையும் கூறி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறும், ரசிகர்களுடன் இருக்கும் போதும் மாஸ்க்கை கழற்றமல் இருந்தால் நல்லது என்றும் பலர் இவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். பல ரசிகர்கள் இவர் இன்னும் அதிக தூரம் வெற்றி பெற வேண்டும் என்று இவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.