அனிதாவை பங்கமாய் கலாய்த்து தள்ளிய பாலா..என்ன இப்படி டபுள் மீனிங் வார்த்தைகள் விளையாடுது!!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நான்காவது ப்ரோமோவில் அனிதாவை பாலா பங்கமாக கலாய்த்து உள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் அதிகமான இரட்டை மீனிங் வார்த்தைகள் விளையாடுகிறது என்று ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர்.

ரசிகர்களின் வருத்தம்
ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி 17 வது நாளில் ஒளிபரப்பாகி வந்தாலும் இவ்வளவு நாட்கள் தான் போய் இருக்கிறதா?? என்று சில நேரங்களில் என்ன தோன்றுகிறது. அந்த அளவிற்கு இதில் சுவாரசியம் குறைவாக இருக்கிறது என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக வில்லை என்பது பலருடைய வருத்தமாகவும் இருந்து வருகிறது. இது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருவதால் பலரால் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லையாம்.

அதிகரிக்கும் இரட்டை அர்த்த வார்த்தைகள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று இல்லாமல் இணையதளத்தில் ஒளிபரப்பாகி வருவதால் இதனை 24 மணி நேரமும் ரசிகர்கள் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்பாகி வருகின்றது. இதனால் இங்கே பல கட்டிங் எடிட்டிங் வேலைகள் நடைபெறுவது இல்லை என்பதால் உள்ளே நடக்கும் செயல்கள் அனைத்தும் அப்படியே ஒளிபரப்பாகி விடுகின்றனர். அந்த அளவுக்கு அதிகமாக இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் பேசப்படுவதை பார்த்ததும் ரசிகர்கள் பதறி இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த மாதிரி எல்லாம் காட்டவில்லையே இது மட்டும் என்ன இப்படி இருக்கிறது என்று பலர் புலம்பி வருகின்றனர்.

மீண்டும் வந்த போட்டியாளர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் அறிமுகமாகி தற்போது இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போட்டியாளர்கள் தான் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். இதனால் ஏற்கனவே இவர்கள் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமாகி இருப்பதால் இவர்கள் செய்யும் சிறு சிறு செயல்களும் ரசிகர்களுக்கு தற்போது வித்தியாசமாக இருந்து வருகிறது. அந்த மாதிரி தான் இந்த சீசனில் மீண்டும் கலந்துகொண்ட பாலா பல நேரங்களில் பேசும் வார்த்தைகள் டபுள் மீனிங்கில் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இப்படி எல்லாமா பேசுவாங்க
இன்றைய பதினைந்தாவது நாளில் பிக்பாஸ் 1980 கல்லூரி காதல் கதையை மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறது. அதில் தமிழ் டீச்சராக அனிதா கலந்து கொண்டிருக்கிறார். அவர் தற்போதைய நான்காவது ப்ரோமோவில் யாரோ ஒருவர் லவ் லெட்டர் கொடுத்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டதும் பாலா, உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா என்று நக்கலடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் யார் கொடுத்தாலும் நீங்க இப்போ அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று அனிதாவிற்கு அறிவுரையும் கூறி இருக்கிறார். அதை கேட்ட அனிதா நிரூப்பின் உயரத்தில் நான் பாதி கூட இருக்க மாட்டேன். அவன் எனக்கு லவ் லெட்டர் கொடுத்து என் பின்னாடி சுத்தி கொண்டிருக்கிறான் என்று கூறியிருக்கிறார். அதற்கு பாலா வேனும் என்றால் நிரூப் உங்களுக்காக முட்டி போட்டுக் கொள்வான் என்று கூறியிருக்கிறார். இதை வைத்து தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.