வேற மாதிரி கலக்கும் பாலா..பிக் பாஸ் கொடுத்த சிறப்பு பட்டம்.. இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைத்துள்ளது.
அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்றைய 4ஆவது ப்ரோமோவில் பாலா வேற லெவலில் கலக்கி வருகிறார்.
கண்ணை கட்டி கதறவிட்ட பிக் பாஸ்...தலைவர் பதவிக்கு தொடங்கிய தில்லாலங்கடி வேலைகள்

ட்ரெண்ட்டாகும் ப்ரோமோ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியது தான் தொடங்கியது சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு தினமும் அதிகமான மீம்ஸ்களும் வீடியோக்களும் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்போது இருந்த ஆதரவை விடவும் தற்போது இந்த நிகழ்ச்சியில் ஆதரவு குறைவாகத்தான் இருந்து வருகிறது. ஆனாலும் இன்றைய நிகழ்ச்சிக்கானா ப்ரோமோ வேற லெவல் வைரலாகி வருகிறது.

யார் அந்த நபர்
பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது நான்கு போட்டியாளர்கள் வெளியாகிய நிலையில் உள்ளே இருக்கும் 10 போட்டியாளர்களில் யார் வெற்றி கோப்பையை தட்டுவது என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உள்ளே இருப்பவர்களுக்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பாக தான் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு விளையாட்டை தொடங்கினால் அவர்கள் அடுத்த நாளே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ப்ராங்க் செய்த கமல்ஹாசன்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை விடவும் வேற லெவலில் இருந்து வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளிலிருந்தே வனிதாவின் அட்ராசிட்டி தாங்க முடியவில்லை என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் போது அவருக்கு டப் கொடுக்கும் போட்டியாளராக பாலாதான் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் கமல் பாலாவின் பெயரை வெளியேற்றம் என்று கூறி பாலாவுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பிராங்க் செய்து விட்டார். பாலா வெளியேற போகிறார் என்று தெரிந்ததும் வனிதாவின் நடவடிக்கைகள் வித்தியாசமாக மாறிவிட்டது. ஆனால் கடைசியில் எல்லாம் பொய் என்று தெரிந்ததும் வனிதா செம அதிர்ச்சியில் உறைந்துள்ளார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஆட்டம் ஆரம்பம்
இந்த நிலையில் வனிதாவுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பாலா இந்த வார டிரெண்டிங் பிளேயர் பட்டம் கொடுக்கப்பட்டது. பட்டம் கொடுத்ததும் சலுகைகள் அள்ளி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலமாக பாலா தன்னோடு போட்டிபோடும் போட்டியாளர்களை வச்சு செய்ய தொடங்கியிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இந்த வாரம் வேற லெவல் இருக்கப்போகிறது. சும்மாவே வனிதாவின் கண்களுக்குள் விரலைவிட்டு ஆட்டும் பாலா இனி பதவியில் இருக்கும் நிலையில் விட்டு வைக்க மாட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.