• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதுக்கு இதெல்லம்.. உண்மையே இல்லாத ரியாலிட்டி ஷோக்கள்!

By Staff
|

- எழுத்தாளர் எஸ்.சுசரிதா

எந்தத் தமிழ்த் தொலைக் காட்சிச் சேனலை மாற்றினாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் ரியாலிட்டி ஷோ ஓடிக்கொண்டிருக்கிறது. பாடல், நடனம், கோரியோகிராபி, காமெடி, சமையல், பேச்சு, பொது அறிவு, பங்குச்சந்தை பற்றிய அறிவு - இப்படி என்ன திறமையிருந்தாலும் அவற்றை வெளிப்படுத்த ரியாலிட்டி ஷோக்கள் தளம் அமைத்துக் கொடுக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதுவே வாழ்வில் திருப்புமுனையாய் அமைந்து, சின்னத் திரையிலிருந்து சினிமாத்துறைக்கு நகர்ந்தவர்களை நாம் அறிவோம்.

சில நிகழ்ச்சிகள், சமூகப் பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குக் கொடுத்து சமுதாய மாற்றத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கின்றன. சீரியலும் சினிமாவும் அலுத்துப் போகும் போது சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பக்கமே மக்கள் சாய்கிறார்கள்.

Bigg Boss: What actually the reality shows are trying to convey?

இந்த நிகழ்ச்சிகளையெல்லாம், மூளையைக் கசக்கிப் பிழிந்து யார் உருவாகுகிறார்கள் என்றால், அனேகமானவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதிகளே! உதாரணமாய் Big brother, American idol, Who wants to be a millionaire, America's got talent, US fear factor, British master chef, Cheaters போன்ற உலக நிகழ்ச்சிகளின் பிரதியாகவே பல நிகழ்ச்சிகள் இங்கே இருக்கின்றன.

சரி, இந்த நிகழ்ச்சிகளில் காண்பிக்கப்படுபவை எல்லாமே நிஜங்களா? அல்லது நிஜமாக்கப்படுகிறதா? திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது?

பல நிகழ்ச்சிகளில், பார்வையாளர்களை கைதட்டி சிரிக்கச் சொல்லி தனியே படம் பிடிப்பது, நடுவர்க்களின் முகபாவனைகளை, கமெண்டுகளை தனியே படம் பிடிப்பது, பிட்டு பிட்டாக பலவற்றை எடுத்து, எடிட்டிங் வித்தையில் இது போன்றவற்றை இணைத்து முழுமைப்படுத்துவது சாதாரணமாய் நடக்கின்றது.

Bigg Boss: What actually the reality shows are trying to convey?

திட்டமிடப்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, பல முறை ஒத்திகை பார்க்கப்பட்டு, நிகழ்ச்சிக்கு ஒரு உருவம் கொடுத்து வழங்கப்படுகிறது. சரி, பரவாயில்லை! பார்ப்பவருக்கு சலித்துப் போகாமலிருக்க, சுவாரசியமாக்க, சில உத்திகளைக் கையாள வேண்டியதுதான்! ஆனால் அதற்காகச் செய்யப்படும் அடுத்த படி என்ன தெரியுமா?

மசாலா சேர்ப்பது!

பங்கேற்பாளரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சோகத்தை இட்டுக்கட்டி, மிகைப்படுத்தி அதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவது! பங்கேற்பாளரை, அவரின் குடும்பத்தை, நட்பை கண்ணீர் விட வைத்துக் காட்சிப் படுத்துவது!

Bigg Boss: What actually the reality shows are trying to convey?

நல்ல பங்கேற்பாளரை ஏதாவது காரணம் காட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியே அனுப்புவதாக சீன் போடுவது!

இப்படி நிகழ்ச்சிக்கு உணர்ச்சியூட்ட வழியாயில்லை?

அதன்பிறகென்ன?

சர்சையைச் சேர்த்து நாடகத்தை ஏற்றுவது தான்!

Bigg Boss: What actually the reality shows are trying to convey?

வடிவமைக்கப்படும் பங்கேற்பாளர்களுக்கு இடையேயான காரசார வாக்குவாதங்களால் விறுவிறுப்பாகும் எபிசோடு! பங்கேற்பாளர்களின் செயல்திறம் (performance) சரியில்லை என்று நடுவர் கோபித்துக் கொண்டு வெளியேறி பரபரப்பைக் கிளப்புவது நிகழ்ச்சியைப் பிரபலமாக்கத் தோல்வியே இல்லாத பார்முலா!

அதிலும் பிரபலங்களுக்குள் தகராறு என்று ஸ்க்ரிப்ட் எழுதினால், வாவ்! தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியே அது தான்! எதற்கு இந்தப் போலித்தனத்தை எல்லாம் செய்ய வேண்டும்?

TRP என்ற மூன்றெழுத்தை ஏற்றுவதற்குத் தான்! TRP(Television rating point) என்பது எந்தெந்த நிகழ்ச்சிகள் அதிகமாகப் பார்க்கப்படுகிறது என்னும் கணக்கீடு. TRPயை ஏற்றும் மந்திரக்கோலே, "திரைக்குப் பின்னால் நடக்கும் சீன்"களை (Behind the scene footage) வெளிப்படுத்தும் காட்சிகள் தானாம்!

மனித மனதின் பயத்தை மையப்படுத்தி நடத்தப்படும் நிகழ்ச்சிகள் உண்டு. பங்கேற்பாளரைப் படுக்க வைத்து மேலே நூற்றுகணக்கில் எலிகளை விடுவது, ஆயிரக்கணக்கில் புழுக்களைக் கொட்டுவது, தவளை, பச்சோந்தி, பாம்பு என்று எல்லாத் தோழர்களையும் விளையாட விடுவது! பணமுடிப்பை நினைத்தபடி, நொடிகளைக் கடத்திக் கொண்டு, பங்கேற்பாளர் பயத்தில் அலறிக் கொண்டிருக்க, அதைப் பார்த்து பார்வையாளர் கைதட்டிச் சிரித்துக் கொண்டிருக்க, இதை யாரோ பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!

சாமானியர்களை வச்சு பிக் பாஸ் நடத்தலாமே.. மக்களுக்கு கத்துக்க நிறைய கிடைக்குமே!

பார்ப்பவர்க்கே குமட்டிக் கொண்டு வரும்படி புழுக்கள், கரப்பான், சிலந்தி போன்றவற்றை திண்ணச் சொல்லுவது. இதென்ன வேகனுக்கு (Vegan) போட்டியா? வேகன் என்பது பால் சம்மந்தப்பட்ட பொருட்களைக் கூட சாப்பிடாத தீவிர சைவம்.

இன்னும் ஆக்ஷன் திரைப்படம் போல, அந்தரத்தில் தொங்கும் காரிலிருக்கும் சாவியையெடுக்க ஹெலிகாப்டரிலிருந்து பங்கேற்பாளரை இறக்குவது..இப்படி வீரத்தை வளர்க்கும் வினோத வழிகளும் பல உண்டு.

பிரச்சனைகளுக்குப் பஞ்சாயத்துப் பண்ணுவது, வாழ்க்கைத் துணையையோ, காதலிப்பவரையோ ஏமாற்றிக் கொண்டு வேறொருவரோடு உறவிலிருக்கும் "மகான்"களைப் உளவு பார்த்து கையும் களவுமாய் பிடித்துக் கொடுப்பது போன்ற ஷோக்களும் உண்டு.

Bigg Boss: What actually the reality shows are trying to convey?

மற்றவர் விஷயங்களை ஒட்டுக் கேட்பதும், அந்நியரின் தனிப்பட்ட விவகாரங்களில் ஆர்வமாய் இருப்பதும், அடுத்தவர் படுக்கையறைக்குள் எட்டிப் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் இது போன்ற ஷோக்கள் மனித மனதின் சில வக்ரத்தை திருப்திப்படுத்துவதாகவே (voyeurism) இருக்கின்றன.

தம்பதியராகவோ காதல் உறவிலோ இருக்கும் ஜோடிப் பிரபலங்களை வைத்து டான்ஸ் ஷோ ஒன்று பல சீசன்களாக வடஇந்திய சேனல் ஒன்று நடத்துகிறது. திரையில் கெமிஸ்ட்ரி வழிந்தோட உருகி உருகி காதல் மழை பொழிபவர்கள் ஷோ முடிந்ததும் தான், கனவு கலைந்து விழிக்கிறார்கள் போலும்! அடுத்த சீசனுக்குள் வேறு துணை தேடிக் கொண்டவர்களும், விவாகரத்து செய்து கொண்டவர்களும் ஏராளம்! இந்த நடிப்பை நம்பி வோட்டு போட்ட ரசிகர்களுக்கு செம பல்பு!

காதல், கண்ணீர், பயம், மகிழ்ச்சி போன்ற இயற்கையான உணர்வுகள் இங்கே கூவி கூவி விற்கப்படுகின்றன!

டேட்டிங் போன்ற மேற்கத்திய கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளைக் கடத்தி வந்து அதில் கொஞ்சம் இந்தியச் சாற்றை ஊற்றி விற்கப்படும் நிகழ்ச்சிகள் உண்டு.

டேட்டிங் அடிப்படையில் பல வருடங்களாக (The Bachelor, The Bachelorette) ஷோக்கள் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. திருமணத்திற்கு பெண் தேடுகிறான் ஒரு ஆண். சுமார் இருபத்தைந்து பெண்களோடு துவங்கும் நிகழ்ச்சியில் டேட்டிங் செய்து ஒவ்வொரு பெண்ணாய் அவன் எலிமினேட் செய்து கொண்டே வர, கடைசியாக மிஞ்சியுள்ள மூன்று பெண்களுடன் ஒரு நட்சத்திர விடுதியில், அவன் தினம் ஒருவருடன் இரவைக் கழிக்கவும் ஏற்பாடு செய்து தரப்படும். அதிர்ந்து போகாதீர்கள்! "பழகிப் பார்த்துவிட்டு" அவன் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பான்! இப்படி திருமணத்திற்கு, பெண் ஆணைத் தேடும் ஷோக்களும் உண்டு!

இதை இந்தியமயமாக்கி, ஜோராய் விளம்பரப்படுத்தி, பிரபலங்களை வைத்து சில சேனல்கள் நடத்துகின்றன. TRP என்னவோ பிரமாதம் தான், தன்மானம் மட்டும் தான் ஏலம் போகிறது! சரி, இப்படி வலைபோட்டுத் தேடி வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தவர்கள் ஷோ முடிந்ததும் என்ன செய்கிறார்கள்?

Bigg Boss: What actually the reality shows are trying to convey?

சிலரே உறவைத் தொடர்கிறார்கள்!

அதிலும் மிகச் சிலரே மணமுடித்துக் கொள்கிறார்கள்!

அதிலும் மிகமிகச் சிலரே இன்றும் சேர்ந்து வாழ்கிறார்கள்!

மற்றவர்கள் "எல்லாம் பணத்துக்கான நாடகம்" என்று அவரவர் வழியில் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

பார்க்கும் ரசிகர்களோ, இதெல்லாம் தெரிந்தாலும் "உலகமே நாடகம்" என்று ஆறுதல்பட்டுக் கொண்டு அடுத்த சீசனைத் தவறாமல் பார்க்கிறார்கள்!

 
 
 
English summary
What actually the reality shows are trying to convey?, this is a million dollor question.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X