For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Chadralekkha Serial: சினிமாவை மிஞ்சும் சீரியல்கள்.. அச்சுறுத்தும் காட்சிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: காலையில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை டெலிவிஷன் சேனல்களில் சீரியல்கள், களைக்கட்டி வருகின்றன. ரேட்டிங் பிடிக்க என்னென்னவோ பிளான்கள் செய்தும் சன் டிவியை மிஞ்ச முடியவியல்லை என்பதை ரேட்டிங் காண்பிக்கிறது.

ஆனால், மற்ற சேனல்கள் தாங்கள் சன் டிவிக்கு போட்டியாக இருந்தால் மட்டுமே போதும் என்கிற நிலைமைக்கு வந்து, தங்களது பணிகளை செவ்வனே செய்து வருகினறன.

எந்த போட்டிகளை எந்த சேனல்கள் போட்டா போட்டிக் கொண்டு நிகழ்ச்சிகளை, சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் ,மக்களை பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

சன் டிவி சீரியல்

சன் டிவி சீரியல்

சன் டிவியில் சந்திரலேகா சீரியலில் சித்தார்த் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். இவருக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை சிறுமி பருவத்தில் இருக்கையில், குற்றவாளி ஒருவன் சித்தார்த்துக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கிறான். அவனை சித்தார்த் ஜெயிலில் பிடித்து போட நினைக்கையில் சித்தார்த்தின் மனைவியை கொலை செய்துடறான் அந்த குற்றவாளி.

மணி சார் பத்தின ரகசியம்... உடைத்தார் நடிகர் வேணு அரவிந்த்மணி சார் பத்தின ரகசியம்... உடைத்தார் நடிகர் வேணு அரவிந்த்

ஆர்டர் சித்தார்த்

ஆர்டர் சித்தார்த்

சித்தார்த் மேலிடத்தில் அந்த கொலைகாரனை கொல்ல எண் கவுண்டர் வாங்கி வைத்திருப்பது தெரிந்து, மேலும் மிரட்டுகிறான். பெண்ணை பள்ளிக்கு அனுப்பும்போது, அவர்களை கடத்தி வச்சு மிரட்டுகிறான். அப்போதும் இன்ஸ்பெக்டர் குடும்பத்தின் மீது கவனம் கொள்ளாமல் ,அப்போதும் கடமையே கண்ணாக இருக்கிறான் சித்தார்த்.

வேலை இரவில்

வேலை இரவில்

ஒரு நள்ளிரவில் அதிக வேலை இருக்கிறது என்று வெறும் டேபிளில் உட்கார்ந்து கொண்டு, வீட்டுக்கு போன் செய்கிறான்.. நான் வர லேட்டாகும் என்று. அப்போதாவது, பொண்டாட்டியிடம், நான் சொல்லமல் நீ கதவைத் திறக்க கூடாது. படுக்கை அறையை விட்டு வெளியில் வர கூடாது என்று சொல்லி எச்சரிக்கை செய்யாமல், வீட்டுக்கு ஒரு வயதான போலீசை மட்டும் காவலுக்கு வைக்கிறான். இவனும் வெளியில் எங்கும் போகவில்லை. ஸ்டேஷன் சேரில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான்.

கொலைகாரன் வீட்டுக்குள்

கொலைகாரன் வீட்டுக்குள்

கொலைகாரன் சுவர் எறிக் குதித்து வீட்டுக்குள் புகுந்துடறான். போலீஸ் இன்ஸ்பெக்டரின் பொண்டாட்டி போனை எடுத்து, அதில் அவனின் பொண்டாட்டி, பொண்ணை போட்டோ எடுத்து சித்தார்த்துக்கு அனுப்பி வைக்கிறான். அப்போதுதான் புரிகிறது, தனது வீட்டுக்கே கொலைகாரன் போயிட்டான்னு. போயிடு போயிடுன்னா அவன் போவானா? போண்டாட்டியை அடித்து துப்புறுத்தறான். வீட்டு காவலுக்கு இருந்த பி போலீசை கொலை செய்ய போறான். இதை பார்க்கும் குழந்தை ஆ என்று கத்தி மயங்கி விழுகிறது.

கவனம் வைங்கப்பா

கவனம் வைங்கப்பா

என்கவுண்டர் குற்றவாளியை ஒரே போலீஸ் இன்ஸ்பெக்டர் டீஸ் செய்வாரா? இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் போலீஸ்காரரின் கடமை குடும்பத்தை காப்பாற்றுவது என்பதில் இல்லையா? போலீஸ்காரனுக்கு பொண்டாட்டி ஆனவங்களுக்கு எல்லாம் இதே நிலமையா இருக்கும்? சினிமாவை மிஞ்சும் காட்சிகளாக .சீரியல் காட்சிகள் இருக்கின்றன. வீட்டில் குழந்தைகளும் இது மாதிரி சீரியல்களை பார்க்கிறார்கள் என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை!

English summary
Television channels are starting to get weedy in the morning and at night. The rating shows that Sun TV is outnumbered by whatever plan it takes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X