குக் வித் கோமாளியில் பட் முதல் பாலா வரை குமுறி அழும் காட்சி.. இது அதுவா?.. என்னவாக இருக்கும்?
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் புரோமோவில் வெங்கடேஷ் பட் முதல் குக்குகளும் கோமாளிகளும் அழும் காட்சிகளால் ரசிகர்களும் என்னாச்சோ ஏதாச்சோ என தவித்து வருகிறார்கள்.
குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி சமையல் கலையில் சிறந்து விளங்குவோரின் திறமைகளை வெளியே கொண்டு வரும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இரு சீசன்களை கடந்துள்ளது.
3 மாணவர்கள்.. வாட்ஸ்ஆப்பில் லீக்கான “அந்த” வீடியோ.. அரசு பள்ளி ஆசிரியை செய்யும் வேலையா இது..? ஷாக்!
தற்போது மூன்றாவது சீசன் நடைபெறுகிறது. இந்த ஷோவின் ஜட்ஜ்களாக செஃப்கள் தாமோதரனும், வெங்கடேஷ் பட்டும் உள்ளனர். கோமாளிகளுடன் இவர்கள் அடிக்கும் லூட்டி இருக்கே அப்பப்பா!

மக்கள் காத்திருப்பு
சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் எப்பதான் வரும் என மக்கள் காத்திருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து வயிறு குலுங்க சிரிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்த உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் பூரண குணமடைந்ததாக அவரது மகன் தெரிவித்திருந்தார். இந்த தகவலால் குக் வித் கோமாளி அரங்கமே பூரித்து போனது.

ரசிக்கும்படியாக உள்ளது
இந்த நிகழ்ச்சியில் பாலா, புகழ், மணிமேகலை, சிவாங்கி ஆகியோரின் குறும்புத்தனம் அனைவராலும் ரசிக்கும்படியாக இருக்கிறது. இவர்களோடு சேர்ந்து செஃப்களும் குழந்தைகளாகவே மாறி காமெடி செய்கிறார்கள். தற்போதைய மூன்றாவது சீசனில் ஒரு புரோமோ வெளியாகியுள்ளது.

குக்குகள் கோமாளிகள்
அதில் குக்குகளும் கோமாளிகளும் பச்சை கிளிகள் தோளோடு பாடலுக்கு நடனமாடுகிறார்கள். அப்போது ஆங்கர் ரக்ஷன், சாரி இங்கு ஒரு தப்பு நடந்து போச்சு என்கிறார். அப்போது குக்குகளும் கோமாளிகளும் அழுகிறார்கள். வெங்கடேஷ் பட்டும் அழுகிறார். அந்த அரங்கமே சோகமயமாகிறது.

சாரி கேட்கும் தாமோதரன்
அப்போது செஃப் தாமோதரன், "ஐ ஃபீல் வெரி பேட், சோ சாரி, ஐ லவ் யூ சோ மச் ஆல் ஆஃப் யூ" என்கிறார். இதை பார்க்கும் நெட்டிசன்கள் என்னாது செஃப் தாமோதரன் நிகழ்ச்சியை விட்டு விலகுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார்கள். யாரையும் எலிமினேட் செய்யாமல் செஃப் தாமுவே தன்னை எலிமினேட் செய்துக் கொள்கிறார் என்கிறார்கள்.

புரோமோ
இன்னும் சிலர் நிச்சயம் இருக்காது. இது அநேகமாக ஏப்ரல் ஃபூல்லாக இருக்கும் என்கிறார்கள். ஏனென்றால் இந்த புரோமோ ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியானது. சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் எல்லாமும் சந்தோஷமாகத்தான் போகிறது. அநேகமாக இதை இன்று வெளியிடுவார்கள் என தெரிகிறது. செஃப் தாமோதரன் வெளியேறுகிறாரா இல்லை நெட்டிசன்கள் சொல்வது போல் ஏப்ரல் ஃபூல்லா என்பது தெரிந்துவிடும்.