For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவைகள் 6...அதன் வகைகள் வேறு... செஃப் தாமு சமையல்!

Google Oneindia Tamil News

சென்னை: பாலிமர் தொலைக்காட்சியில் நம்ம ஊரு சமையல் என்கிற நிகழ்ச்சியில் செஃப் தாமு பல சமையல்களை சொல்லித் தருகிறார். ஞாயிறு தோறும் பகல் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி அவ்வப்போது மறு ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

கோவிட் 19 தொற்று லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்து விதம் விதமாக சமைத்துப் பார்ப்பவர்கள் பலர். அவர்களுக்கு பாலிமர் டிவியில் அவ்வப்போது ஒளிபரப்பாகி வரும் நம்ம ஊரு சமையல் நிகழ்ச்சி உதவியாக இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்று, பெண்கள் தங்களது சமையல் சந்தேகங்களை சமையல்கலை நிபுணர் தாமுவிடம் கேட்டு பதிலை பெறுகிறார்கள்,. நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது.

 சமையல் சந்தேகம்

சமையல் சந்தேகம்

தாமு சமைக்க, பெண்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். செஃப் தாமு ஒரு சமையல் செய்து காண்பிக்கிறார். அந்த சமையலை பெண்களிடம் தந்து ருசிக்க சொல்கிறார். பெண்களும் ருசித்துப் பார்த்து தங்களது கருத்தை சொல்கின்றனர். சைவம், அசைவம் இரண்டும் செய்து காண்பிக்கிறார்.

 புட்டுக்கு என்ன அரிசி

புட்டுக்கு என்ன அரிசி

புட்டு செய்ய எந்த அரிசி மாவு யூஸ் செய்ய வேண்டும் என்று ஒரு பெண் கேட்கிறார். புழுங்கலரிசி மாவு என்று கூறும் தாமு. புழுங்கல் அரிசியை அரைத்து குறிப்பிட்ட நாட்களுக்கு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது புட்டு செய்யலாம் என்றும் கூறினார்.

 மிருதுவான சப்பாத்தி

மிருதுவான சப்பாத்தி

நாங்க சப்பாத்தி செய்தால் நல்லாவே இல்லை சார்...வறட்டி மாதிரி இருக்கு.. மிருதுவான சப்பாத்தி எப்படி சார் செய்யறது என்று ஒரு பெண் சந்தேகம் கேட்டார். சப்பாத்தி மாவு எப்படி பிசைய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். ஒரு பெண் பாகற்காய் கார குழம்பு எப்படி செய்வது என்று கேட்டார். அதற்கான வழி முறைகளையும் கூறினார் தாமு.

 பிரியாணி ஒரிஜினல் டேஸ்ட்

பிரியாணி ஒரிஜினல் டேஸ்ட்

பிரியாணி ஒரிஜினல் டேஸ்டுடன் இருக்க வேண்டும் என்றால், கரம் மசாலா அதிகம் சேர்க்க கூடாது. தேவையான அளவில் மட்டுமே சேர்க்க வேண்டும். ஒரு சிலர் பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு இவைகளை வறுத்து பொடி செய்து போடலாமா என்று கேட்கிறார்கள். அப்படி செய்யக் கூடாது...எண்ணெயில் பொரித்து தாளித்து மட்டுமே சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

English summary
many people cook at home during the covid 19 epidemic lockdown. helping them is our hometown cooking show, which airs on polymer tv from time to time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X