For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்லம்மாள் மண்பானை சமையல்... உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப!

Google Oneindia Tamil News

சென்னை: மெட்ராஸ் ஸ்ட்ரீட் ஃபுட் என்று ஒரு யூடியூப் சானல். இந்த சானல் வித்தியாச உணவு வகைகள், ஆரோக்கிய உணவு வகைகளை செய்து விற்பனை செய்வோர்களை தேடி கண்டுபிடித்து தனது யூடியூப் சானல் மூலம் அறிமுகப்படுத்தி வருகிறது.

இதில் செல்லம்மாள் மண்பானை சமையல் உணவுக்கடை திருச்சிராப்பள்ளியில் மிகவும் பிரபலம். இதன் ஸ்பெஷல் மண்பானை சமையல்தான்.

அதைவிட இன்னும் ஒரு ஸ்பெஷல் உணவு மொத்தமாக அப்படியே யாருக்கும் .பரிமாறப் படுவதில்லை. வேண்டியதை வேண்டிய பணம் கொடுத்து எடுத்துக்கலாம்.இன்றைய காலக் கட்டத்தில் உணவு வீணாவதை தடுக்க வேண்டிய தலையாய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

வாழைத்தண்டு தயிர் பச்சடி

வாழைத்தண்டு தயிர் பச்சடி

என்னடா இது எடுத்த உடனே கம்பு பாயசம்.. வாழைத்தண்டு பச்சடின்னு சொல்றாங்களேன்னு நினைக்காதீங்க. உங்களுக்கு பிடித்த புழுங்கலரிசி சாதமோ, பச்சரிசி சாதமோ..வெண்டைக்காய் பச்சடி, பருப்பு, முள்ளங்கி சாம்பார், தக்காளி ரசம்.. சேனைக்கிழங்கு வறுவல்,உருளைக்கிழங்கு மசாலா என்று அத்தனை அயிட்டமும் உண்டு.

வகை வகையாய் கீரை

வகை வகையாய் கீரை

கீரை வகைகளாலும், முளைக்கட்டிய தானிய வகைகளில் செய்த சைட் டிஷ் என்று அத்தனையும் உண்டு.என்ன, எல்லாமே மண் சட்டியில் சமைத்தது, மண்சட்டியில் வைத்து அவைகளை சாப்பிட வருபவர்களுக்கு வைப்பது என்று எல்லாமே பார்க்க சாப்பிட நன்றாக இருக்கிறது. ஒரு நாளைக்கு சாம்பார், வத்த குழம்பு, மோர் குழம்பு பொரியல் கூட்டு, பாயச வகைகள் என்று எத்தனை செய்து இருந்தாலும் அத்தனையையும் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி விட மாட்டார்கள்.

Ayudha Ezhuthu Serial: வருங்கால மாமியார்னு தெரியாம இவரும்.... மருமகள்னு தெரியாம அவரும்!Ayudha Ezhuthu Serial: வருங்கால மாமியார்னு தெரியாம இவரும்.... மருமகள்னு தெரியாம அவரும்!

உங்களுக்கு எது?

உங்களுக்கு எது?

செல்லம்மாள் மண்பானை சமையல் உணவகத்தில் உணவு வகைகள் எல்லாமே டிஸ்ப்பிளே காண்பிப்பார்கள்.எது வேணுமோ அதை நீங்கள் கேட்டு வாங்கிக்கலாம். அதுக்கு ஏற்ப காசு கொடுக்கலாம்.சாதம் 350 கிராம் 20 ரூபாய்.எந்த சாம்பார் வேணுமோ அது 15 ரூபாய், ரசம் வேணும் என்றால் அதற்கு உரிய காசு கொடுத்து வாங்கலாம். அதே போலத்தான் எல்லாமே.

எதுவும் வீணாகாது

எதுவும் வீணாகாது

காசுக்கு ஏற்ப நீங்களே அதற்குரிய காசைக் குடுத்து வாங்கிக்கலாம்.எதுவும் வீணாகாது. உங்கள் காசும் நஷ்டமாகாது.வயிறு நிறைந்து இருக்கும். வித்தியாசம் வித்தியாசமான ஆரோக்கிய சாப்பாடு சாப்பிட்ட திருப்தியும் இருக்கும். மர செக்கில் ஆட்டி எடுத்த எண்ணெய்கள், கடைந்து எடுத்து மோர், நாட்டு மாட்டு பாலைத் தயிராக்கிய லஸ்ஸி என்று அசத்துகிறார்கள்.

English summary
A YouTube channel called Madras Street Food. The channel has launched its YouTube channel to find and sell vendors who are trying different foods and health foods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X