For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் ரொம்ப பந்தாவா நாம் பார்த்த சின்னவருக்கு ஆரம்ப காலத்தில் இவ்ளோ மவுசு இல்லை போலிருக்கேன்னு சொல்ற அளவுக்கு கதையின் ஆரம்ப எபிசோட் இருக்கிறது.

கண்ணன்தான் சின்னவர்..கண்ணனாக நடித்து இருக்கும் சஞ்சீவ் அப்போதில் இருந்தே நடிப்பு என்று வரும்போது முழு அர்ப்பணிப்பு என்று காண்பித்து பார்ப்பவரையும் அசர வைத்து வருபவர்.

முத்துச்செல்வி என்ட்ரிக்குப் பிறகுதான் சின்னவருக்கு கதையில் மவுசு கூடி இருக்கிறது போலும். ஆரம்பத்தில் அப்பாவியாக இருந்த கண்ணன், பின்னர் எல்லாரையும் மிரட்டி பணிய வைக்கும் அளவுக்கு எப்படி குடும்பத்தில் வலுவானார் என்று எந்த காரணத்தையும் சீரியல் குழு காண்பிக்கவில்லை என்பது சீரியலின் மறு ஒளிபரப்பில் தெரிகிறது.

கண்ணன் விஜயலட்சுமி

கண்ணன் விஜயலட்சுமி

வீட்டில் விஜயலட்சுமியின் தம்பியாக இருக்கும் கண்ணனையும் சரி, விஜயலட்சுமியையும் சரி குடும்பத்தினர் அதாவது தர்மதுரை குடும்பத்தினர் யாருக்கும் பிடிக்கவில்லை. ஒண்ட வந்த பிடாரின்னு கண்ணனை தர்மதுரையின் தங்கைகள்.. மற்றும் இருவரது கணவன்கள் கிண்டல் கேலி பண்ணுவதோடு, அடிக்கடி வீட்டை விட்டும் போகவும் சொல்கிறார்கள்.

பூர்ணிமா பாக்கியராஜ்

பூர்ணிமா பாக்கியராஜ்

நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் முதன் முதலாக சின்னத்திரைக்கு இந்த சீரியல் மூலம் வந்து இருக்கிறார். ஆரம்பத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்து வந்தவர், காலப்போக்கில் டப்பிங் குரலில் நடித்து வருகிறார். இவரின் தம்பி கண்ணனாகத்தான் நடிகர் சிரஞ்சீவ் நடித்து வருகிறார். திருமதி செல்வம் சீரியலுக்கு பிறகு சன் டிவியில் இவர் நடிக்கும் சீரியல் இது.

சின்னவர் சின்ன கவுண்டர்

சின்னவர் சின்ன கவுண்டர்

சின்னவர் என்பதோ, சின்ன கவுண்டர் பாணி நடிப்பு என்பதோ சீரியலின் ஆரம்பத்தில் காண்பிக்கவில்லை. கொஞ்சம் அடக்கித்தான் வாசித்து இருக்கிறார்கள். குடும்பத்தில் கூட எல்லாரும் வெறுக்கும்படியாக இருக்கும் கண்ணன் கொஞ்ச காலத்திற்குப் பிறகு சின்னவர் சின்னவர் என்று கோலோச்சும்படி திடீரென எப்படி மாறினார் என்பது தெரியவில்லை.

மெகா சீரியல்

மெகா சீரியல்

மெகா சீரியல் என்று இருந்தாலே லாஜிக் பார்க்க கூடாது என்கிற அளவுக்கு சீரியல் காலம் மாறிவிட்டது. ஆரம்பிக்கும்போது ஒரு கதை...மக்கள் ஆதரவு தந்து சூடு பிடித்தவுடன் ஒரு கதை என்று பயணிக்க ஆரம்பித்து விட்டன சீரியல்கள். ஆனால், இது மக்களை முட்டாளாக்கி பார்க்கும் செயல்.. இந்த நிலை கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும்.

English summary
serialization has changed so much that logic should not be viewed as mega serial. a story to begin with ... once the people started supporting it, the story began to travel as a story. But, this is the act of fooling people .. This situation must be reversed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X