For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Chithi 2 Serial: சித்தி 2 வின் டைட்டில் சாங்கில் வந்தாச்சு யானை...!

Google Oneindia Tamil News

சென்னை: சித்தி முதல் சீசன் டைட்டில் சாங்கில் முதன் முதலாக யானை வருவது போல, இப்போது இரண்டாவது சீசன் டைட்டில் சாங்கிலும் முதன் முதலில் யானை நடப்பதை காண்பித்து இருக்கிறார்கள்.

பாடல் அதே கண்ணின் மணி பாடல்தான் ஒலிக்கிறது. பின்னணியில் பாடல் ஒலிக்க யானை நடந்து வருகிறது.

இதே சென்டிமென்டை அண்ணாமலை சீரியலிலும் கடைப்பிடித்து வந்தார் ராதிகா.

நித்யஸ்ரீ குரல்

நித்யஸ்ரீ குரல்

பாடகி நித்யஸ்ரீ ஜீன்ஸ் படத்தில் கண்ணோடு காண்பதெல்லாம் பாடல், படையப்பா படத்தின் மின்சார கண்ணா பாடல் என்று பாடி புகழ் பெற்ற நேரத்தில் அவர் இந்த சித்தி சீரியலுக்கான கண்ணின் மணி பாடலையும் பாடி இருந்தார். அப்போது இந்த பாடலும் மற்ற இரு சினிமா பாடலுக்கு நிகராக மக்கள் மத்தியில் புகழ் அடைந்து இருந்தது.

திரும்ப திரும்ப

திரும்ப திரும்ப

மக்கள் கண்ணின் மணி கண்ணின் மணி என்கிற சித்தி சீரியலின் பாடலை திரும்ப திரும்ப கேட்க விரும்பினர். இப்போது போன்று அப்போது இன்டெர்நெட் வசதி, சீரியலின் பாடல்களை திரும்ப திரும்ப கேட்கும் வசதி எல்லாம் இல்லை என்பதால், ரெகார்ட் செய்து தர சொல்லி கேட்டு மகிழ்ந்த காலம் எல்லாம் உண்டு.

அதே பாடல்

அதே பாடல்

சித்தி 2 டைட்டில் சாங்கில் இப்போது அதே பாடல் ஒலிக்கிறது. அது மாதிரி ஒரு யானையும் நடந்து வருகிறது. ராதிகாவின் சென்டிமென்ட் படி எல்லாம் சரியாக அமைந்து இருக்கிறது. சன் டிவியும் ரடான் டிவிக்கு சரியான நேரத்தை ஒதுக்கியும் தந்து இருக்கிறது.

சித்தி 2 வெற்றி

சித்தி 2 வெற்றி

சித்தி 2 சீரியல் வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து சன் டிவியில் பயணிக்கத் துவங்கி உள்ளது. இதன் மூலம் ராதிகா சரத்குமாரின் கனவு நிறைவேறுமா? சன் டிவி என்ன நினைத்து ராதிகாவின் ராடான் டிவிக்கு இரவு 9 மணி நேரத்தை ஒதுக்கித் தந்ததோ அது நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
While singing the song Nithyasree Jeans and padaiyappa films..she was singing the song "Kanni mani" for the song 'chithi Serial'. At the time, the song was as popular as the other two.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X