For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

chithi 2 serial: நிம்மதியா சாகறதுக்கு ஒரு வீடு வேணும்...!

Google Oneindia Tamil News

Recommended Video

    Chithi 2 Today Promo | Radhika Sarathkumar | Venba Kavin

    சென்னை: சித்தி 2 சீரியலில் நல்ல மெசேஜ் இருக்கும்னு ராதிகா சரத்குமார் ஆரம்பத்தில் சொல்லி இருந்தார். அதன் படி பார்க்கையில், அவ்வப்போது வசனங்கள் மூலம் கூட ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மெசேஜ் பாஸாகித்தான் வருகிறது.

    சன் டிவி சாரதா டீச்சராக ராதிகாவை நேர்காணல் செய்கிறது. இதை நேர்காணல் செய்பவர் இயக்குநர் சமுத்திர கனி. அவர் கேள்விக்கு பதில் அளிக்கையில்தான் நிம்மதியா வாழறதுக்கு வீடு தேவையோ இல்லையோ, நிம்மதியா சாகறதுக்கு வீடு வேண்டும் என்று எமோஷனலாக சொல்கிறார்.

    வீடு இல்லாதவர்கள் இப்படித்தான் அவதிப்படுகிறார்கள். அதை ஒரு லைனில் சொல்லி இருந்தாலும், இன்னும் வீடு இல்லாதவர்கள் படும் அவலங்களை சொல்வதாக இந்த சித்தி 2 சீரியல் இருக்கும் என்று நம்பலாம் போலும்.

    சாரதா டீச்சர்

    சாரதா டீச்சர்

    சாரதா டீச்சர் பெஸ்ட் டீச்சர் அவார்ட் வாங்கியதை பாராட்டும் வகையில் சன் டிவி சாரதா டீச்சரை நேர்காணல் செய்து, விருது வழங்குகிறது. அப்போது பெஸ்ட் டீச்சராக அவார்ட் வாங்கி இருக்கிறீர்கள்,. அப்படியானால் நீங்க நன்றாக படித்து இருக்க வேண்டுமே என்று சமுத்திர கனி கேள்வி கேட்கிறார். இல்லை, நான் ஃபெயிலாயிட்டேன் என்று ஆரம்பிக்கிறார் சாரதா டீச்சர்.

    வலி தெரியும்

    வலி தெரியும்

    இழந்தவங்களுக்குத்தான் அந்த வலி தெரியும். நான் ஃபெயிலான உடனேதான் வைராக்கியம் வலியில் நல்லா படிக்க ஆரம்பிச்சேன். டீச்சராக்கணும்னு கனவோடு படிச்சேன் என்று சொல்கிறார். கனவு என்று சொன்னால் ஒரு வீடு கட்டணும்.. அதுதான் லட்சியம் என்று சொல்கிறார். டீச்சரானதுக்கு பின்னர் ஒரு வலி இருந்ததாக சொன்னீர்கள்.. வீடு கட்ட வேண்டும் என்கிற கனவுக்குப் பின்னும் எதாவது வலி இருக்கிறதா என்று கேட்டார்.

    இருக்கு வலி

    இருக்கு வலி

    வலி இருக்கு என்று சொன்னவர், சென்னைக்கு வந்தப்ப மாமனார் கூடவே வந்தார். ரொம்ப பாசமா இருப்பார். திடீர்னு அவர் எதிர்பார்க்காத விதமா இறந்துட்டார். அப்போ ஹவுஸ் ஓனர் வந்து பிணத்தை ரோட்டில் வச்சுருங்கன்னு சொல்லிட்டு போயிட்டார். அவரை ரோட்டில் வச்சுத்தான் செய்ய வேண்டிய கர்மா காரியங்களை செய்து அவரை வழி அனுப்பி வைத்தோம்.

    சாக வீடு வேணும்

    சாக வீடு வேணும்

    அப்போதுதான் நினைச்சேன்,. நிம்மதியா வாழ ஒரு வீடு வேண்டுமோ இல்லையோ.. நிம்மதியா சாக ஒரு வீடு வேணும்னு என்று கண்ணீர் விட்டபடி ராதிகா சாரதாவாக சொன்னது, பல லட்சக் கணக்கான மக்கள் மத்தியில் இருக்கும் எண்ணம்தான். வாடகை வீட்டில் இருக்கும்போது என்னென்னெ கொடுமைகள் நடக்குமோ..அதில் ஒன்றை காண்பித்து இருக்கிறார்கள் சித்தி 2 சீரியலில்.

    சாரதா டீச்சராக

    சாரதா டீச்சராக

    சாரதா டீச்சராக ராதிகாவை நடிக்க வைத்து, சீரியல் குழு நல்ல வசனங்களை எழுதி இருக்கிறார்கள். இன்னும் நிறைய இப்படி மாணவர்களுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும். மாணவர்கள் மார்க் கம்மியாகிவிட்டது என்றால் தவறான முடிவுக்கு போவதையும் சுட்டிக் காண்பித்து இருக்கிறார்கள். இது போல் இன்னுமின்னும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இது இன்னொரு சித்தியின் கதை

    இது இன்னொரு சித்தியின் கதை

    சித்தி 2 என்று டைட்டில் போடும்போதே இது இன்னொரு சித்தியின் கதை என்று போட வேண்டித்தான் இருக்கிறது. காரணம் திடீரென்று சீரியல் பாக்கத் தொடங்குபவர்கள் சித்தி 2 என்றவுடன், சித்தியின் தொடர்ச்சி என்று நினைத்து விடுவார்கள். எனவேதான் இதை டைட்டில் போடும்போதே சொல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறது சித்தி 2.

    English summary
    Radhika Sarathkumar was initially saying good news in the chithi 2 serial. According to it, every message is passed every time, even with the occasional verses.Sun TV Interviews Radhika as Sarada Teacher Director Samudra Kani is interviewing this. In answer to the question, he emotionally says that he does not need a house to live in peace, but a house for peace.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X