For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புள்ள பெத்துட்டியா? நான் பெத்துட்டேன்.. நீங்க?

Google Oneindia Tamil News

சென்னை: புள்ள பெத்துட்டியான்னு அறந்தாங்கி நிஷாவைப் பார்த்து செஃப் தாமோதரன் கேட்பதும், நான் பெத்துட்டேன்.. நீங்கன்னு தாமோதரன் வயிற்றைப் பார்த்து நிஷா கேட்பதும் என்று விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி கலோக்கியலா ஒளிபரப்பாகிட்டு இருக்கு.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி நன்றாக இருந்தாலும் சில விஷயங்களைத் தவிர்த்தால் என்ன என்று பல முறை கேட்டும், செவி சாய்க்காத விஜய் டிவியில் இப்படித்தான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருது.

குக்கு வித் கோமாளி நிகழ்சசியின் தொகுப்பாளரில் ஒருவரான அறந்தாங்கி நிஷா, நிறை மாத கர்ப்பிணியாக இருந்தும், பிள்ளை பேறு நிகழ்வதற்கு சில நாட்கள் முன்பு வரை ஷோவைத் தொகுத்து வழங்கி வந்தார்.

 குழந்தை பிறந்ததும்

குழந்தை பிறந்ததும்

அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்கும் மேலான நிலையில், மீண்டும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியைத் தொகுத்து வாழங்க வந்து இருக்கிறார். இவருடன் இந்த நிகழ்ச்சியை சேர்ந்து தொகுத்து வழங்கி வருபவர் ரக்ஷன். இந்த வாரம் செமி பைனல் நடக்க உள்ள நிலையில், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அறந்தாங்கி நிஷா மீண்டும் இணைந்துள்ளார்.

 புள்ள பெத்துட்டியா

புள்ள பெத்துட்டியா

நிஷா ஓடிவந்து செஃப் தாமுவைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்கொள்கிறார். அப்போது தாமு கேட்கிறார், புள்ள பெத்துட்டியா என்று. உடனே நிஷா சொல்கிறார் நான் பெத்துட்டேன்.. நீங்க என்று அவரின் வயிற்றைப் பார்த்து கேட்கிறார். இவ்ளோ கலோக்கியலா நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறதாம். நிகழ்ச்சி இப்படி ஒளிபரப்பாவதைத்தான் பலரும் ரசிக்கிறார்கள் என்று விஜய் டிவி கணித்து இருக்கிறது.

 பேச்சு சுதந்திரம்

பேச்சு சுதந்திரம்

இதுவா பேச்சு சுதந்திரம் என்று பலரும் அங்கலாய்த்தாலும் விஜய் டிவி இதை காதில் போட்டுக்கொள்வதாக இல்லை.இதுதான் நிகழ்ச்சி, நீங்கள் பார்த்தாக வேண்டும் என்று விஜய் டிவி நிகழ்ச்சி பார்ப்பவர்கள் மீது திணிக்கிறது. வழக்கமான நிகழ்ச்சிகளில் இருந்து சற்றே வித்தியாசமாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை அதன் காமெடிக்காக பலரும் விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.

 கோமாளி எல்லை

கோமாளி எல்லை

விஜய் டிவி நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பவர்களை கருத்தில்க்கொண்டு, சில கட்டுப்பாடுகளை புகழ், ரக்ஷன் போன்றவர்களுக்கு விதிக்க வேண்டும். அதோடு, இவ்வளவு கலோக்கியலாக பேச வேண்டுமா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சும்மா நிகழ்ச்சி பற்றிய குறை இருந்தால் தெரிவியுங்கள் என்று ஸ்கொரோலிங் விடுவதைத் தவிர்த்து, இந்த மாதிரி குறை கூறுவதை காதில் போட்டுக்கொண்டால் நன்றாக இருக்கும்.

English summary
Though many people think that this is freedom of speech, Vijay TV is not giving ear to this. The show is a bit different from the usual ones, and many people are looking forward to its comedy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X