முதல் வாரத்திலேயே பலருடைய வெறுப்பையும் சம்பாதித்த போட்டியாளர்...இதுதான் காரணமா
சென்னை:குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் முதல் வாரத்திலே நெட்டிசன்களால் கலாய்க்கபட்டு வருகிறது.
அறிமுகமானதும் பழைய போட்டியாளரை காப்பியடிக்கிறாரா?? என்று முதல்நாளில் நெகட்டிவ் கமெண்டுகளை ஒரே போட்டியாளர் பெற்று வருகிறார்.
எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. டாப் 10இல் 9 பேர் சிபிஎஸ்இ மாணவர்கள் தான்

மூன்றாவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒருசில ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடும். அந்த வகையில் வந்ததுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து 2வது சீசன் எடுக்கப்பட்டது. அதிலும் பெரிய அளவில் வெற்றி கிடைத்ததால் தற்போது மூன்றாவது சீஸனில் அடி எடுத்து வைத்துள்ளது. தொடர்ந்துவரும் இந்த மூன்றாவது சீசனில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ஆரம்பம் முதலே ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது இந்த சீசன் தொடங்கப்பட்டு விட்டது.

ரசிகர்களைக் காண்டாகிய போட்டியாளர்
சின்னத்திரையில் சீரியல்களுக்கு மாற்றாக இந்த நிகழ்ச்சி கலகலப்பாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அதிக அளவில் ரசிகர்களை பெற்று பெரிய அளவில் பாப்புலர் ஆகிவிடுகின்றனர். அதனாலேயே பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கடந்த ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கிய முதல் நாளே இதில் பஞ்சாயத்து வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை போல. ஆனால் ஒரு போட்டியாளர் மீது அனைத்து ரசிகர்களும் காண்ட்டிலிருந்து வருகின்றனர்.

புகழை காப்பியடிக்கிறாரா
இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன்களில் கலந்துகொண்ட ஒரு சில போட்டியாளர்கள் இந்த சீசனில் இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், புது போட்டியாளர்களும் தங்களுடைய திறமைகளை காட்டுவார்கள் என்று ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆனால் புதிதாக வந்தவர்கள் பழைய போட்டியாளர்களை காப்பி அடிக்கிறார் என்று தான் தற்போது குற்றச்சட்டுகள் வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் பரத், கடந்த சீசன்களில் கலந்துகொண்டிருந்த புகழை காப்பி செய்து அவரைப் போலவே ஆக்டிங் செய்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். புகழ் செய்யும்போது பார்க்க அழகாக இருந்தது ஆனால் இது ஓவராக இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து
முதல் நாளில் இவ்வளவு ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளை பெறுபவர் இவராகத்தான் இருக்க முடியும் அந்த அளவிற்கு கமெண்டுகள் குவிந்து வருகிறது. இவருக்கு பதிலாக மதுரை முத்து அல்லது வேறு யாரையாவது போட்டிருக்கலாம், நிகழ்ச்சிக்கு நன்றாக இருக்கும். இவர் ஏதோ பண்ணுகிறேன் என்று இருட்டேட் செய்து கொண்டிருக்கிறார் என்று பல்வேறு ரசிகர்களும் பலவிதமாக கலாய்த்து வருகிறார்கள். முதல் நாளிலேயே இப்படியா..!!?? என்று இவருடைய தீவிரமான ரசிகர்களும் மனக் கவலையில் இருந்து வருகிறார்கள்.