
குக் வித் கோமாளியை விட்டு வெளியேறிய செஃப்..காலில் விழுந்து கெஞ்சிய புகழ்..இதுதான் பிரச்சனையா?
சென்னை: குக் வித் கோமாளியின் இந்த வார நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
புகழ் செய்த செய்கையால் நிகழ்ச்சியை விட்டு கோபத்தோடு செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் வெளியேறி இருக்கின்றனர்.
குக் வித் கோமாளி சந்தோஷோடு காதல் சர்வைவர் காயத்ரியின் விளக்கம்.. இது என்ன புது ட்விஸ்ட்

சுவாரஸ்யம் அதிகரிப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு வாரமும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து வருகிறது. கோமாளிகள் மற்றும் குக்குகள் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு நடுவே நடுவர்களாக இருக்கும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று செஃப்களும் பல நேரங்களில் நிரூபித்து வருகின்றனர். கோமாளிகளுக்குள் நடக்கும் சுவாரசியங்கள் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்து வருகிறது.

கலக்கும் ப்ரோமோ
அழுகாச்சி சீரியலுக்கு மாற்றாக இந்த ரியாலிட்டி ஷோ ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு அடிமைகளாக இருந்து வருகின்றனர். அதனால்தான் இந்த நிகழ்ச்சி தற்போது 3வது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூட்டுவதற்காக நிகழ்ச்சி அணியினர் அதிகமாக மெனக்கெட்டு வருவதில்லை. எதார்த்தமாக அங்கே நடக்கும் நிகழ்வுகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விடுகிறது. அந்த மாதிரி தான் தற்போதைய இந்த வார நிகழ்ச்சியில் மூன்றாவது ப்ரோமோ ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.

செலிப்ரேஷன் ரவுண்டு
சனி மற்றும் ஞாயிறு மட்டும் ஒலிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் அதில் மூன்றாவது ப்ரோமோவில் புகழ் செய்த குறும்பு தனத்தால் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் கோபித்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இதை பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் வழக்கமாக நடைபெறும் செயல்கள் தான். யாரும் அச்சப்பட தேவையில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். குக் வித் கோமாளியில் இந்த வாரம் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த செலிப்ரேஷன் ரவுண்டு தொடங்கியிருக்கிறது.

கோபத்தில் செஃப் செய்த செயல்
செலிப்ரேஷன் ரவுண்டில் வித்யூலேகா தான் செய்த சமையல் பற்றி விளக்கியுள்ளார். அதில் சேப்பங்கிழங்கு வறுவல் மற்றும் பாம்பே வடா பாவ் என்று கூறியிருக்கிறார். அதற்கு புகழ் வழக்கம் போல நீங்க என்ன பாம்பே போறீங்களா அப்ப ஓகே என்று கலாய்த்துக் கொண்டு இருக்கிறார். அப்போது செஃப் வெங்கடேஷ் பட் சேப்பங்கிழங்கு ஏன் வேகவில்லை என்று கேட்கிறார். அதற்கு வடிவேலு பாணியை கையிலெடுத்த புகழ் ஏன் வேகவில்லை என்று எதிர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் கோபித்துக்கொண்டு வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியை விட்டு கிளம்பிவிட்டார். அவர் மட்டுமல்லாமல் தாமுவும் இதே கேள்வியை புகழிடம் கேட்கும்போது புகழ் வழக்கம்போல ஏன் வேகவில்லை என்று எதிர்க கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் அவரும் கோபித்துக் கொண்டு கிளம்பி விட இவர்களின் காலில் விழுந்து கெஞ்சி புகழ் அழைத்து வருகிறார். இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சியையும், கலகலப்பு ஏற்படுத்தியிருக்கிறது.