
மனிதம் செத்துருச்சா? கடவுள் இருக்கான் குமாரு.. மீம்ஸ்களுக்கு குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் பதில்
சென்னை: மீம் கிரியேட்டர்கள் குழந்தை இல்லாதவர்களின் நிலையை யோசித்து பார்க்க வேண்டும் என்றும், தன்னை கேலி செய்வதாக நினைத்து தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம் எனவும் குக் வித் கோமாளி நடுவர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது. இதன் இரண்டு சீசன்கள் முடிந்து, தற்போது மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று விரைவில் நடைபெற உள்ளது.
ஒரு காலத்தில் சமையல் நிகழ்ச்சிகள் என்றாலே அதை பெண்கள் மட்டும் பார்ப்பார்கள் என்ற நிலையை மாற்றி நகைச்சுவையை உள்ளே சொருகி அனைத்து வயதினரும் பார்க்கும் நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது குக் வித் கோமாளி.
EXCLUSIVE: குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்குமா? என்ன சொல்கிறார் மருத்துவர்

வெங்கடேஷ் பட்
விஜய் டிவியின் பிரபல நகைச்சுவை கலைஞர்கள், நடிகர், நடிகைகள், பாடகர்கள் என பல தரப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களாக சமையல் கலைஞர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்து வந்தனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து தாமு விலகியதால் வெங்கடேஷ் பட் மட்டும் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தையா?
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், "குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறினார். குழந்தை பிறப்பதற்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அந்த பெண்ணிடம், குழந்தையுடன் வந்திருந்த மற்றொரு பெண், "குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார். மனஅழுத்தம் குறைந்து, சந்தோஷமாக இருப்பாய். விரைவில் குழந்தை பிறக்கும்." என சொல்லி உள்ளார்.

அணிவகுக்கும் மீம்கள்
vஅதைக் கேட்டு அந்த பெண்ணும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்க்க துவங்கி உள்ளார். தற்போது அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றார். இதைக் கேட்டு போட்டியாளர்களும் மெய் சிலிர்ப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால் அந்த அளவிற்கு மன அழுத்தம் குறைவதாகவும் கூறினார்கள். இந்த வீடியோவை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர். குக் வித் கோமாளி பார்த்தால் எப்படி குழந்தை பிறக்கும், எனக்கேட்டு பலர் மீம்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

வெங்கடேஷ் பட் வேதனை
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வெங்கடேஷ் பட், "கடந்த 2 நாட்களாக நொறுங்கிப்போனேன். என்னை ட்ரோல் செய்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல. மனிதம் செத்துவிட்டதோ என்று எண்ணி வருந்துகிறேன். எதுவேண்டுமானாலும் சாகும், ஆனால் மனிதம் சாகாது. ஆனால், கடவுள் இருக்கான் குமாரு. சந்திரமுகி படம் மாதிரி 2 நாள் ஆட்டம் இருந்தது. நல்லவர்கள் இன்னும் இவ்வுலகில் உள்ளார்கள்.

குழந்தை செல்வம்
குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். அது எவ்வளவு பெரிய கொடை என்று. குழந்தை இல்லாதவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மீம் கிரியேட்டர்கள் தயவு செய்து என்னை கேலி செய்வதாக நினைத்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்!" எனக் குறிப்பிட்டு உள்ளார். எனக்கு திருமணம் முடித்து 7 ஆண்டுகள் கழித்து கிடைத்த செல்வம் என் குழந்தை." எனக் குறிப்பிட்டுள்ளார்.