• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாவணியை எடுத்து சொருகிய தர்ஷா...மனதையும் அங்கேயே மாட்டிக் கொண்ட ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை : ஏங்க வைக்கும் பார்வையால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் தர்ஷா குப்தாவை பார்த்து அசந்து போன ரசிகர்கள் அவருடைய போட்டோவை மீண்டும் மீண்டும் ரசித்து வருகிறார்கள்.

அன்னநடையா? சின்ன இடையா? என்று ரசிகர்கள் கவிதை பேச அலட்டிக்கொள்ளாமல் தர்ஷா சிரிப்பை உதிர்த்து இருக்கிறார்.

அதிமுக ஆட்சி மரபை மாற்றிய ஸ்டாலின்:10 வருடத்தில் முதல் முறை.. கேள்வி நேரத்தில் பதில் சொன்ன முதல்வர் அதிமுக ஆட்சி மரபை மாற்றிய ஸ்டாலின்:10 வருடத்தில் முதல் முறை.. கேள்வி நேரத்தில் பதில் சொன்ன முதல்வர்

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேரழகோடு இவர் வலம் வருவதை பார்ப்பதற்காகவே பலர் இன்ஸ்டாகிராமில் தவம் கிடக்கிறார்கள்.

பூ பிரஸ்ஸாவே இருக்கு

பூ பிரஸ்ஸாவே இருக்கு

ரொம்ப நேரம் அங்கேயே வச்சி இருக்காதீங்க...இடுப்பு வலிக்க போகுது என்று ரசிகர்களை கொஞ்சலாக கெஞ்ச விட்டு பூ கூடையுடன் கிளம்பிவிட்டார் தர்ஷா குப்தா. இது பழைய போட்டோதாங்கன்னு தர்ஷா குப்தா கூறியிருந்தாலும், அட பூ இன்னும் ஃப்ரஸ்ஸா தான இருக்கு...சோ... நாங்க மார்க்கெட்டிங் பண்றோம் என்று தர்ஷா குப்தாவின் பூக்காரம்மா போட்டோக்களை திரும்பவும் வைரலாக்கி வருகின்றனர் தர்ஷாவின் ரசிகர்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை

இன்றைய இணைய இளைஞர்களின் மனங்களை தரிசாகாமல் பார்த்துக் கொள்வதில் தர்ஷாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.அவ்வப்போது தன்னுடைய போட்டோக்களையும் வீடியோக்களையும் போட்டு அவர்களது மனங்களை பூத்துக்குலுங்க வைத்துவிடுவார். சில நாட்களுக்கு முன்பு பாவாடை தாவணியில் சாதாரணமாக இவர் கொடுத்த போட்டோ ஸ்டில்களும், அதே உடையுடன் பூக்காரம்மா கெட்டப்பில் பூ கூடையுடன் இவர் போட்ட வீடியோக்களும் செம வைரலானது, விஜய் டிவியின் முள்ளும் மலரும் சீரியல் மூலம் பிரபலமானதால் என்னவோ! மலரை இவர் விடுவதாக தெரியவில்லை, திரும்பவும் பூக்களுடன் போட்டோக்களை அப்லோட் செய்துள்ளார்.நீங்க எத்தனை தடவை போஸ்ட் பண்ணாலும் நாங்க பெஸ்ட்டா அத ட்ரெண்ட பண்ணுவோம்,என்று

அந்த போட்டோகளையும் இவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

வெள்ளித்திரையில் அறிமுகம்

வெள்ளித்திரையில் அறிமுகம்

சின்னத்திரையும், சமூக வலைத்தளங்களிலும், இளைஞர்களின் மனதை புரட்டி எடுத்து வந்த தர்ஷா புயல் வெள்ளித்திரையில் மையம் கொண்டதன் விளைவாக இன்னும் சிறிது நாட்களில் இவர் நடிப்பில் ருத்ர தாண்டவம் படம் வெளிவர இருக்கிறது.சிறிது நாட்களுக்கு முன்பு தான் திரவுபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் உடன் இணைந்து நடித்துள்ள ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல்வேறு வகையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. ஊரடங்கிற்கு பிறகு வெகு நாட்கள் கழித்து திரையரங்குகளை திறப்பதால் பெரிய திரையில் தங்களது தலைவியின் ருத்ர தாண்டவத்தை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் செம வெயிட்டிங் உள்ளனர்.

வெள்ளித்திரையில் தொடரும் வாய்ப்புகள்

வெள்ளித்திரையில் தொடரும் வாய்ப்புகள்


ருத்ர தாண்டவம் படத்தை அடுத்து தனது இரண்டாவது படம் குறித்து இவர் கொடுத்த அப்டேட்டால் இமேஜினேசன் உயரத்திற்கேற்ற சென்ற இவரது ரசிகர்கள் இன்னும் அதிலிருந்து இறங்காமல் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். அதற்குக் காரணம் அடுத்த படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்கப் போவது சன்னி லியோன் என்று இவர் கொடுத்த மாஸ் அப்டேட் தான். இந்தப் படத்தில்தான் ஜி.பி.முத்துவும் நடிக்க இருக்கிறார். சன்னிலியோன்,ஜி.பி.முத்து மற்றும் காமெடி நடிகர் சதீஷ், ஆகியோருடன் இணைந்து தர்ஷா குப்தா நடிக்கவிருக்கும் இந்தப் படம் எப்படியும் கொஞ்ச நாட்களுக்கு அவரது ரசிகர்களை உறங்க விடுவதில்லை என்பது மட்டும் உறுதி.

சுட்ட கவிதையா இருக்குது

சுட்ட கவிதையா இருக்குது

சாதாரண போட்டோக்களையே 'மானே,தேனே' என்று புகழ்ந்து தள்ளும் இவரது ரசிகர்கள், பூக்கூடை யுடன் தங்கள் தலைவியை பார்த்தால் கவிதை மழை பொழிவார்கள் என்று பார்த்தால்,பழைய ஃபோட்டோ தானே என்று நினைத்து விட்டார்களோ என்னவோ! பழைய சினிமா பாடல் வரிகளையே காப்பி பேஸ்ட் பண்னி கமெண்ட் செய்து வருகிறார்கள். எது எப்படியோ!நம்ம தர்ஷா அவர்களின் பூ வியாபாரம் இணையமே மணக்க மணக்க சிறப்பாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

English summary
Darsha Gupta's Latest Photos On Viral On Instagram.,Darsha Gupta has stepped from the small screen on to the bigg screen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X