தர்ஷூ.. க்யூட்டி ப்யூட்டி ஸ்வீட்டி பெஸ்ட்டி.. பிறந்த நாளன்று .. கொஞ்சித் தீர்த்த ஃபேன்ஸ்!
சென்னை: பிறந்த நாளன்று தர்ஷா குப்தாவை அவரது குடும்பத்தினர் சர்ப்பிரைஸ் கொடுத்து கொண்டாடி விட்டனர்.
விடுவார்களா ரசிகர்கள்.. அவர்களும் தர்ஷூ, பெஸ்ட்டி, க்யூட்டி, ப்யூட்டி, பெஸ்ட்டி என்று கொஞ்சிக் கொண்டாடி விட்டனர்.
நள்ளிரவில் கேக் வெட்டி இரவு நேர தேவதையாக.. அந்த ஒளியில் ஜொலிக்கும் போட்டோவைப் போட்டு அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளார் தர்ஷா குப்தா.

பிறந்த நாள் ராத்திரியில்
பிறந்த நாள் அதுவுமாக இரவு நேரத்தில் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் உறவினர்கள் ரெடி பண்ணின பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் தர்ஷா குப்தா. ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலின் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்தார் .அதன் பிறகு பல சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார் .

நெகட்டிவ் ரோல்களில்
முதல் சீரியலில் இவருக்கு கிராமத்து தேவதையாக இருந்தாலும் இவருடைய கேரக்டர் ரசிகர்களிடம் நன்றாகவே ரீச் ஆகி இருந்தது .ஆனால் தற்போது வில்லி கேரக்டரில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதால் பலபேர் வயிற்று எரிச்சலை சம்பாதித்து வந்தாலும் இவருடைய ரோலில் இவர் நன்றாக நடித்துக்கொண்டு ஒவ்வொருநாளும் முன்னேறி வருகிறார் .

ரசிகர் பட்டாளம்
இதுவரைக்கும் இருந்ததற்கும் தற்போது இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர் .பொதுவாகவே தற்போது இருக்கும் சூழ்நிலையில் எந்த நடிகையாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்தால்தான் இளைஞர்களை கவர்ந்து இழுக்க முடியும்.

வசீகரிக்கும் அழகு
இதை நன்றாக அறிந்து அதற்கு தகுந்த மாதிரி தான் சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகின்றனர். அதுவும் தர்ஷா குப்தாவை கேட்கவே வேண்டாம் .இவர் எப்படி எல்லாம் இளைஞர்களை காந்தம் போல இழுத்து வசியப்படுத்தலாம் என்பதை தெரிந்து அதற்குத் தகுந்த மாதிரி போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார் .

பார்த்ததும் பிடிச்சுருமே
அவரது கிராமத்து பக்கத்து வீட்டு பெண் போன்ற பரிச்சயமான முகத்தை பார்த்தே பலருக்கும் பார்த்ததும் பிடித்துவிடுகிறது. இவர் தன்னுடைய பிறந்தநாளை இந்த ஊரடங்கு நேரத்தில் கொண்டாட வேண்டாம் என இரு தினங்களுக்கு முன்பு லைவில் தன்னுடைய ரசிகர்களிடம் கூறியிருந்தார். எல்லா பிறந்தநாளுக்கும் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் இவருக்காக பரிசுகளையும் கேக்களையும் அனுப்பி வைப்பர்.

அதெல்லாம் செய்ய வேண்டாம்
ஆனால் இந்த வருடம் அப்படி எல்லாம் எனக்கு செய்ய வேண்டாம் அந்த பரிசு வழங்குவதற்கு ஆகும் செலவு செய்யும் பணத்தை இல்லாதவர்களுக்கு ஒரு வேளை உணவு வாங்கி கொடுத்து விடுங்கள் அதுதான் என்னுடைய சந்தோஷம் நிறைந்து இருக்கிறது என கூறியிருந்தார் .அதுமட்டுமில்லாமல் தான் தன்னுடைய இந்த பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என கூறியிருந்தார்.

தேவதையின் போட்டோஷூட்
ஆனால் தற்போது அவரின் பிறந்த நாள் அதுவுமாக புடவையில் தேவதை போல ஒரு போட்டோ ஷூட்டை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் .இதனை பார்த்ததும் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் இரவு இவர் சொன்னதையும் கேட்காமல் இவருடைய ரசிகர்களும் உறவினர்களும் இவருடைய வீட்டிலேயே இவருக்கு பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து விட்டனர்.

புடவையில் கேக் வெட்டி
அதையும் சமத்தாக புடவையில் கேக் வெட்டி கொண்டாடி அந்த போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் .இதனை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தும் இவருடைய அழகை புகழ்ந்தும் கவிதைகளை அனுப்பி வருகின்றனர். இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவருடன் குக் வித் கோமாளி ஜோடியாக கலந்து கொண்ட புகழ் மற்றும் பல திரை நட்சத்திரங்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் .

புகழாரம் சூட்டிய புகழ்!
அதில் புகழ் பாசக்கார ராட்சசி பிறந்தநாள் வாழ்த்துக்கள் என இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைக்கிறார். இதனை பார்த்ததும் பலர் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறிவந்தனர் .குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தர்ஷாவும் புகழும் செய்யும் சேட்டைகள் பலருக்கு பிடித்ததாய் இருந்தாலும் தற்போது அந்த நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது என்பதால் பலர் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும் போது தர்ஷாவுக்காக புகழ் வாழ்த்து கூறியதும் இவர்களின் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.