For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எழுந்துரலாம்னு பார்த்தேன்..பொங்கும் தங்கர் பச்சான்!

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் திருநாளை எப்படி கொண்டாடணும் என்று இளைஞர்கள் பேசப் பேச நான் எழுந்தரலாம்னு நினைச்சேன் என்று பொங்குகிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.

நீயா நானா பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த தங்கர் பச்சான் இளைஞர்களின் பேச்சை கேட்டுத்தான் இப்படி பொங்கி பேசியுள்ளார்.

பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்று கூறும் பெற்றோர், ஜாலியாக இருக்கும் இடத்தில் கொண்டாடலாம் என்று கூறும் பிள்ளைகள்.

Roja Serial: ரோஜா சீரியல்... சினிமாவை விஞ்சும் காட்சி!Roja Serial: ரோஜா சீரியல்... சினிமாவை விஞ்சும் காட்சி!

 படம் புதுசு

படம் புதுசு

உங்கள் பொங்கல் எப்படி என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் கேட்க, எதாவது புது சினிமா பார்த்து கொண்டாடுவோம் சார் என்று ஒரு பெண் சொல்கிறார். இங்கே எதாவது ஒரு பிளேஸ் போவோம் சார் என்று சொன்னார் ஒரு பெண்.

 பொங்கலோடு ஸ்டேட்டஸ்

பொங்கலோடு ஸ்டேட்டஸ்

பொங்கலோடு போட்டோ போட்டால்தான் சார் பொங்கலே நல்லாருக்கும் என்று ஒருவர் சொன்னார்.பொங்கல் யாருக்கானது என்று கேட்டார் தங்கர் பச்சான். உழவர்களுக்கானது என்று உரத்த குரலில் அனைவரும் சொன்னார்கள். அப்போ எதை வச்சது நீங்க நாலு நாள் மகிழ்ச்சியா இருக்கணும்னு நினைக்கறீங்க?

 கரும்பு வச்சுட்டா

கரும்பு வச்சுட்டா

கரும்பு வச்சுட்டா பொங்கலா என்று கேட்டார். தமிழர் திருநாள் அது என்று ஒருவர் சொல்ல, நீங்க தமிழனா.. எதை வச்சு நீங்க தமிழன் சொல்லுங்க என்றார். அவர் மதர் டாங் நாம யார்னு சொல்லிடும்ல சார் என்று சொல்ல . இப்போ நீங்க தமிழில் பேசுறீங்களா என்று கேட்டார்.

 போட்டோ ஸ்டேட்டஸ்

போட்டோ ஸ்டேட்டஸ்

போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போடறதுன்னு அவர் சொல்லறாருன்னு கோபிநாத் சொல்ல, நான் பார்த்தேனே.. அந்த பையன் சொன்னதை.. அதிகப்படியான பொறுமையில்லை இருந்தேன்.. எழுந்து போயிரலாம்னு பார்த்தேன் என்று பொங்கினார் தங்கர் பச்சான் நீயா நானா நிகழ்ச்சியில்.

முழு நிகழ்ச்சியையும் பார்க்க வரும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு விஜய் டிவியில் பாருங்கள்.

English summary
Thangar Bachchan, who had been a special guest at the Nia Pana Pongal special event, listened to the talk of the youth.Parents who want to celebrate Pongal in their hometown, children who say they can celebrate in a fun place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X