For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அத்தானை காதலிச்ச பூர்ணாவுக்கு அவரது தம்பி மேல் எப்படி காதல் வரும்?

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவில பரபரன்னு பட்டையை கிளப்பற சீரியல் அழகு. ஓ.என்.ரத்தினம் இயக்குநர். காட்சிகளும், காலங்களும் நல்ல வேகத்துல நகருது.

குடும்ப சீரியலான இதுல வன்முறைக் காட்சிகள் இல்லை... ஆனா அழகம்மையின் பெரிய மருமகள் சுதாவை வீட்டை விட்டு வெளியேத்தணும்னு சின்ன மருமகள் பூர்ணா கங்கணம் கட்டிக்கிட்டு காய் நகர்த்துறாங்க.

ஆனால் எல்லாத்துலயும் தோல்விதான்... ஆனாலும், பூர்ணா மனசை ஏன் யாருமே புரிஞ்சுக்கலைன்னு பல பேருக்கு கேள்வி எழும்.

அத்தான்...

அத்தான்...

சின்ன வயசுலேர்ந்தே பூர்ணா ரவி அத்தானுக்குத்தான்னு சொல்லியே வளர்க்கப்படறா. திடீர்னு ரவி கூட வேலை செய்த சுதாவின் கணவன் விபத்தில் இறந்துவிட நண்பனின் மனைவி சுதாவுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக தாலி கட்டி விடுகிறான் ரவி.

மாயையான திருமணம்

மாயையான திருமணம்

இப்போதான் பூர்ணான்ற பொண்ணை அவ நிலையில இருந்து பார்க்கணும். மணமேடை வரைக்கும் ரவி அத்தான்தான் கணவன்னு நினைச்சு உட்கார்ந்து இருக்கும் பூர்ணாவுக்கு, ரவியின் தம்பி மகேஷைத் திருமணம் செய்து வைக்கறாங்க.

தம்பியோட?

தம்பியோட?

இங்கதான் ஆரம்பிக்குது அப்பாவிப் பெண் பூர்ணாவோட ஏமாற்றம், அவநம்பிக்கை இதனால அப்பப்போ வரும் வெறித்தனமான கோபம் எல்லாம்... அண்ணனை நினைச்சுட்டு அதே வீட்டுல தம்பியோட எப்படி வாழ முடியும்?

சுதா டார்கெட்...

சுதா டார்கெட்...

பல கோபம் இருந்தாலும், எல்லாத்துக்கும் காரணம் மூத்த மருமக சுதாதான்னும்,, அவளை வீட்டை விட்டு வெளியேத்தணும்னு வெறித்தனமான கோபத்துல பூர்ணா ஏதேதோ செய்ய, கடைசியில அனாதை பொண்ணுன்னு வேற தெரிய வருது. அழகம்மையின் நாத்தனார் வசந்தா குழந்தை இல்லாம குப்பைத் தொட்டியில கிடந்த பூர்ணாவை எடுத்து வளர்த்துருக்கறாங்க.

எத்தனை துன்பம்...

எத்தனை துன்பம்...

சின்னப் பொண்ணு மனசுல ஆசைய வளர்த்தாச்சு.அதையும் நிறைவேத்த முடியலை...அனாதைன்னு வேற சொல்லியாச்சு...எவ்ளோ ஏமாற்றத்தைத்தான் தாங்குவா? அண்ணனை நினைச்சுகிட்டு தம்பி கூட எப்படி வாழ்க்கை நடத்த முடியும்னு அந்த பொண்ணு கோணத்துல நாம சிந்திச்சா கூட டைரக்டர் ஒரு டிவிஸ்ட் இங்கதான் வைக்கறார். பூர்ணா அனாதைன்னு தெரிஞ்ச உடனே புருஷன் மகேஷுக்கு ஏற்கனவே பூர்ணா மேல இருந்த அன்பு மேலும் பெருக்கெடுக்குது.

பூர்ணாவுக்கு சப்போர்ட்

பூர்ணாவுக்கு சப்போர்ட்

அதுவரைக்கும் பூர்ணா மட்டுமே தனக்காக போராடிக்கொண்டு இருக்க, இப்போது கணவன் மகேஷும் ஆதரவாகப் பேசி கைக்கொடுக்கிறார். பூர்ணாவுக்கு மகேஷ் மீது காதல் துளிர் விடுகிறது. இப்போதான் உன்னை ரொம்ப புடிச்சு இருக்கு மகேஷ்.. இப்போ எல்லாம் நீ ஏன் மல்லி பூ அல்வா எல்லாம் வாங்கிட்டு வரதில்லைன்னும் கேட்கறா.இங்கதான் டைரக்டர் நிக்கறார்... அண்ணனை காதலனா நினைத்தவள் மனசு மாற இப்படிப்பட்ட சீன்கள் தேவைப்படுகின்றன.

நோ அழுகை...

நோ அழுகை...

எத்தனை கஷ்டம்.. பார்ப்பவர்களுக்கு பூர்ணாதான் எல்லாருக்கும் துன்பம் கொடுப்பது அவ பொல்லாதவன்னு தோணும்.ஆனா, அவ இடத்தில் இருந்து எல்லாத்தையும் பார்க்கும்போது, அவ வயசுக்கு அவ கோபம் நியாயமானதே... மனசுக்குள்ள சுதாவை வீட்டை விட்டு வெளியேத்தணும்னு எவ்வளவு கோபத்துல செயல்பட்டாலும், தோல்வியை கண்டு துவளவில்லை, அனாதைன்னு தெரிஞ்ச்சப்பவும் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை. நிஜமா பெண்கள் இப்படித்தான் இருக்கணும்...எதுக்கெடுத்தாலும் அழுதுகிட்டு...நாட் குட்.

காதுல பூ

காதுல பூ

குடும்பமே சொல்லுது... நாங்க எல்லாருமே உன் மேல அளவு கடந்த பாசம் வச்சு இருக்கோம். அப்புறம் எப்படி உனக்கு அனாதைன்னு ஃபீல் வரும்னு... என்னங்க காதுல பூ சுத்துறீங்க? கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல தம்மாத்தூண்டு பொண்ணு, அம்மா, அப்பா, தாத்தா, தம்பிகள்னு எல்லாரும் அன்பு ஆசை காட்டி வளர்த்த பொண்ணு பெத்தவங்க சிம்ரன் இல்லேன்னு தெரிஞ்சதும் அம்மாவைப் பார்க்கணும்னு அடம் புடிக்கலை?

மணி ரத்னம் சொன்னா ஓகே.. பூர்ணா சொன்னா கோர்ட்டா?.. என்னங்கப்பா இந்த நியாயம்.

English summary
There is no violent scenes in the family, but the little daughter-in-law is trying to get out of the house with the big daughter-in-law of Sudha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X