For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Eeramana Rojave Serial: மருமகள்களை தொடப்ப கட்டையால் அடிக்கறதா?

Google Oneindia Tamil News

சென்னை: இந்த 20ம் நூற்றாண்டில் கூட வாழ்க்கை முறைகளில் பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்தும் சீரியல்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதை கண்டிக்கத்தான் வேண்டும்.

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் அன்றாடம் நடப்பதை சீரியலாகத் தருகிறார்கள். நம் வீட்டில் நடப்பதை பார்ப்பது போல இருக்கிறது என்று சொன்னாலும், மாமியார் மருமகள்களை சீர் வரிசைக்காக கொடுமைப் படுத்துவது என்பது வேற லெவலில் இருக்கிறது.

இப்படி எல்லாம் இன்னமும் காட்சிகளை அமைத்து பெண்களின் வாழ்க்கை முறையை பின்னோக்கித் தள்ளாதீர்கள்.

புகழ் அகிலா

புகழ் அகிலா

வெற்றியும், புகழும் அண்ணன் தம்பிகள். இவர்கள் இருவரும் அக்கா தங்கைகளான மலர், அகிலாவை கல்யாணம் செய்துக்கற சூழ்நிலை அமைஞ்சுருது. ஆனால், இரு தம்பதிகளும் வீட்டில் மாமியார், நாத்தனார் பேசும் கொடுமையான பேச்சுக்களால் நார்மல் வாழ்க்கைக்கு திரும்பாமல் புருஷன் மீது கூட ஆசைப்படாமல் இருக்கின்றனர்.

சீர் வரிசை பிரச்சனை

சீர் வரிசை பிரச்சனை

இந்த நேரத்தில்சீர் வரிசை சரியாக செய்யலை, வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்று மருமகள்களை மாமியார் மட்டுமே முடிவெடுத்து வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.வீட்டில் எத்தனையோ பெரியவர்கள் புருஷன்,புருஷனோட அப்பா அதாவது மாமியாரின் மாமனார் என்று இருந்தும் யாருக்கும் இதை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை.

புருஷன் பொண்டாட்டி

புருஷன் பொண்டாட்டி

புருஷன் பொண்டாட்டி தனித் தனியாக இருந்தும் பேசிக்கறாங்க. ஒரு வாய்ப்பு வந்து வீட்டுக்குத் தெரியாம ஏற்காட்டுக்கு ஒரு ஜாலி ட்ரிப் போறாங்க. அங்கு போயி ரொம்ப ஜாலியாக இருக்கறாங்க. வெற்றியின் அக்காக்கள் பவுனு, ஈசு என்று ரெண்டு பேரும், தம்பிங்க பொண்டாட்டிங்க கூட ஏற்காடு டூர் போயிருக்காங்கன்னு போட்டுக் குடுத்துட மாமியார் உச்ச கட்ட கோவத்தில் இருக்காங்க.

பெரியவர்கள் பேசலை

பெரியவர்கள் பேசலை

வரட்டும் அவளுங்க ரெண்டு பேரும் இன்னிக்கு வச்சுக்கறேன் கச்சேரியை அவளுங்களுக்கு அவ்ளோ திமிர் ஆயிருச்சானு அப்போதும் மருமகள்களை மட்டும் தொடப்பக்கட்டையை வச்சுக்கிட்டு, அடிக்கப் போறேன்னு நிக்கறாங்க. அப்போதும் வீட்டுப் பெரியவர்கள் பேசாமல் இருக்கிறார்கள்.

English summary
Even in the 20th century, serials that emphasize female slavery in life should be condemned on television. Vijay TV's eeramana rojave are serialized daily. Even though it sounds like we are going to see it happening in our home, there is another level of intimidation of mother-in-law and daughter-in-law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X