For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகம் இருக்கும் வரை புது வருஷம் என்றால் அந்த பாடல்தான்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகை அம்பிகா, சகலகலா வல்லவன் படத்தில் வரும் ஹேப்பி நியூ இயர் பாடல் பற்றி பேசும்போது, உலகம் இருக்கும் வரைக்கும், தமிழர்கள் வாழும் வரைக்கும் புது வருஷம் எல்லாம் இந்த பாடல்தான் ஒலிக்கும் என்று கூறினார்.

நடிகை அம்பிகா 200க்கும் மேற்பட்ட படங்களில் 5 மொழிகளில் நடித்து இருக்கார். மிகக் குறுகிய காலத்தில் நிறைய படங்களில் நடித்தவர் என்ற புகழுக்கும் சொந்தமானவர். இப்போது சன் டிவியின் நாயகி சீரியலில் சற்குணமாக நடித்து வருகிறார்.

சற்குணம் கதாபாத்திரமாக இப்போது வாழ்கிறேன் என்றும் கூறி இருக்கார் அம்பிகா. கமல்ஹாசன், ரஜினி இருவருடனும் நிறைய படங்களில் ஜோடி சேர்ந்தவர் என்கிற பெருமையும் உண்டு அம்பிகாவுக்கு.

எது குறுக்கிட்டாலும்.. நேர்மையாக இருங்கள்.. நிச்சயம் வெல்வீர்கள்எது குறுக்கிட்டாலும்.. நேர்மையாக இருங்கள்.. நிச்சயம் வெல்வீர்கள்

 கமல்ஹாசன்தான் அழைத்தார்

கமல்ஹாசன்தான் அழைத்தார்

எனக்கு சின்ன வயசில் இருந்தே நடிகையாகணும்னு ஆசை. அப்போ எங்க ஊரில் படப்பிடிப்பு நடந்துக்கொண்டு இருந்தது. ஷூட்டிங் பார்க்க போகணும்னு அம்மாவை நச்சரிச்சு அழைச்சுக்கிட்டு போனேன். அப்போ கமல்ஹாசன் சாரை பார்த்தேன். அவர்தான் உனக்கு நடிக்க விருப்பம்னா வரலாமேன்னு கூப்பிட்டார் என்று சொன்னார்.

 மலையாள படம்

மலையாள படம்

சோட்டாணி அம்மன் மலையாள படத்தில் முதன் முதலில் நடிச்சேன். அப்போ எனக்கு முதல் சம்பளமா 500 ரூபாய் கிடைச்சது. அப்போதிலிருந்து எனக்கு சோட்டாணி அம்மன்னா இஷ்டம் என்று சொன்னார். அப்பா, அம்மா அரசியல்வாதி என்றாலும், அவங்களுக்கு பிறந்த நாங்க ஐந்து பேரும் குடும்பத்தை கலைக் குடும்பமா மாத்திட்டோம்.

 தங்கை ராதா

தங்கை ராதா

தங்கை ராதா, தம்பி ரெண்டு பேர், நான் ஆகிய நாலு பேரும் நடிச்சோம். ஒரு தங்கை மல்லிகா டிவி சீரியல் புரடக்ஷன் இதெல்லாம் பார்த்துக்கிட்டாங்க. ஆக, நாங்க இப்போ கலைக்குடும்பம் என்று சொன்னார் அம்பிகா. தங்கை ராதா நடித்த முதல் மரியாதை, காதல் ஓவியம் இதெல்லாம் நாம் நடிக்கலையேன்னு பொறாமையா இருக்கும்.

 அந்த 7 நாட்கள் சகலகலா வல்லவன்

அந்த 7 நாட்கள் சகலகலா வல்லவன்

என்னை முன்னேற்றிய படங்களில் அந்த 7 நாட்கள், சகலகலா வல்லவன் இரண்டு படத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. இதற்காக பாக்கியராஜ் சாருக்கும், எஸ்.பி. முத்துராமன் சாருக்கும் ரொம்ப நன்றி சொல்வேன். இந்த உலகம் உள்ள வரைக்கும், தமிழர்கள் வாழும் வரைக்கும் புத்தான்டு என்றால், ஹேப்பி நியூ இயர் பாடல்தான் ஒலிக்கும். அதில் கமல்ஹாசன், அம்பிகா எப்போதும் உண்டு என்று பெருமையாக கூறினார்.

English summary
actress ambika, who took part in sun tv's vanakkam thamizha program, spoke about happy new year song in sahakalala vallavan and said that the new year will be as long as the world exists and tamils ​​live.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X