For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிடி நேஷனல் சானலில் எவர் க்ரீன் சந்தமாமா!

Google Oneindia Tamil News

டெல்லி: டிடி நேஷனல் சானலில் எவர் க்ரீன் ஸ்டோரி என்று சொல்லக் கூடிய சந்தமாமா கதையின் சீரியல் தினமும் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சந்தமாமா கதை இன்றைக்கு நேற்றைய காலத்து கதையல்ல...இன்று வயோதிகத்தில் இருப்பவர் கூட குழந்தைகளாக இருக்கும்போது படித்து ரசித்த கதைகள்.

சந்திரன் அதாவது நிலவை மாமா என்று வர்ணித்து, பெரியவர்கள் சொல்லித் தரும் கதை போல இருக்கும் சந்தமாமா. 90ஸ் களில் டிவியில் கார்ட்டூன் கதையாக வடிவமைப்பு பெற்றது.

ஜெயா டிவியில் ஜாக்பாட்..குஷ்பூ செம சீன்!ஜெயா டிவியில் ஜாக்பாட்..குஷ்பூ செம சீன்!

சந்த மாமா காமிக்ஸ்

சந்த மாமா காமிக்ஸ்

சந்த மாமா காமிக்ஸ் புத்தகங்களாக அப்போது பெரும் விற்பனையில் இருந்தது. மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் கிடைக்கும். மாதாமாதம் வெளியாகும் இந்த இதழ் குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிக்கும் கதைகளைக் கொண்டு இருக்கும்.

பிள்ளைகளும் வளரும்

பிள்ளைகளும் வளரும்

நிலாவைக் காட்டி அம்மா குழந்தைக்கு சோறு ஊட்டியபடியே சொல்லும் கதைதான் சந்தமாமா கதை. நிலவும் வளர்ந்துக்கொண்டே இருக்கும், கதையை கேட்கும் பிள்ளைகளும் வளர்ந்துக்கொண்டே இருப்பார்கள். இந்த கான்செப்டில் உருவான கதை சந்த மாமா.

நாளடைவில் காணாமல்

நாளடைவில் காணாமல்

சந்தமாமா புத்தகத்தை படிப்போர் குறைந்துவிட நாளடைவில் புத்தகமும் வெளிவருவது நின்று போனது. ஆனால், கார்ட்டூன் கதைகள் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை கண்ட நாட்களில் சந்தமாமாவும் கார்ட்டூன் கதையாக சானல்களில் ஒளிபரப்பாகியது.

இந்தியில் சந்தமாமா

இந்தியில் சந்தமாமா

இப்போது, பழைய கதைகளுக்கும், குழந்தைகள் கதைகளுக்கும் மவுசு கூடி இருக்க, இந்த நேரத்தை டிடி நேஷனல் நன்றாக பயன்படுத்திக்கொண்டு, சந்தமாமா கார்ட்டூன் சீரியலை இந்தியில் ஒளிபரப்பு செய்து வருகிறது.குழந்தைகள் மிக ஆர்வமாக பார்க்கிறார்கள்.. இல்லாவிட்டாலும் பெற்றோர் குழந்தைகளை பார்க்க வைக்கிறார்கள்.

English summary
the serial of the chantamama story, called ever Green Story on DD National Channel, is airing daily at 1 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X