• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பைக்கில் ரொமான்ஸுக்குப் பிளான் செய்த ஆர்த்தி.. டிராப் செய்து ஜூட் விட்ட சந்தோஷ்!

|

சென்னை: கலர்ஸ் தமிழ் திருமணம் சீரியல் ஜனனி அம்மா வீட்டுக்கு போனவுடனே ஸ்லோவாத்தான் போகுது. கணவன், மனைவி மனசுல என்ன நினைக்கறாங்களோ அதை உடனடியா பேசிடணும்.

மவுனம், நற்செயல்கள் எல்லாமே வெளிப்படையான பேச்சுக்கு முன்னால தோத்து போகும். அதனால் நல்லதோ, கெட்டதோ பேசிடுங்கன்னு நாம சீரியல்காரங்களுக்கு அட்வைஸ் பண்ற மாதிரிதான் இருக்கு திருமணம் சீரியலில் ஜனனி-சந்தோஷ் ஜோடியை பொறுத்தவரைக்கும்.

ஜனனிக்கு ஒரு தங்கச்சி அவ பேரு அனிதா. ஜனனி புருஷன் சந்தோஷுக்கு ஒரு தம்பி இருக்கான் அவன் பேர் நவீன். சந்தோஷ் அண்ணி மாயா இருக்காங்களே அவங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்கா அவ பேர் ஆர்த்தி.

ரோஜாவைக் கொடுக்க.. அது தவறி விழ.. குனிந்து எடுக்கப் போக.. கன்னத்தில் பதிந்த முத்தம்!

மேக்-அப்

மேக்-அப்

ஆர்த்தி அறையில் மேக்-அப் போட்டுக்கிட்டு இருக்க, அக்கா மாயா அங்க வராங்க.. என்னடீ காலங்கார்த்தால மேக்-அப் பலமா இருக்குன்னு கேட்கறாங்க. அக்கா நேத்து நவீன் காலையில சீக்கிரம் போகணும்னு மாமா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தான். அதனால, அவன் கூடவே நானும் முக்கிய வேலையா போறேன்.. என்னை டிராப் பண்ணுன்னு சொல்லுவேன்னு சொல்றா.

போனா?

போனா?

வண்டியில போனா என்னாகும்னு அக்கா கேட்க, தங்கச்சி.. என்னக்கா நீ புரியாம பேசறே.. வண்டியில நவீன் இடுப்பை கட்டிக்குவேன். ஸ்பீட் பிரேக் அடிக்கடி வரும்.. அப்போ நவீன் மேல வேணும்னே மோதின்னு அவ முடிப்பதற்குள், பேசாத செய்து காமின்னு சொல்றா அக்கா. பசங்க வீக் பாயின்ட் எனக்கு தெரியும்க்கான்னு சொல்றா.

வரான்

வரான்

நவீன் வந்து வண்டியை ஸ்டார்ட் பண்ண, நவீன் என்னை போற வழியில கொஞ்சம் டிராப் பண்ணிடேன்னு சொல்றான். இல்லை, ஆர்த்தி நான் அவசரமா போறேன்னு சொல்றான்.. இல்லை என் ஃபிரண்டோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம், ஆஸ்பத்தியில சேர்த்து இருக்காங்க, அவ மட்டும்தான் அழுதுகிட்டே அம்மாகிட்ட இருக்கா. நான் ஹெல்ப் பண்ணலாம்னுதான்னு சொல்ல, நவீன் சரி ஏறுன்னு சொல்றான்.

தங்கையும்

தங்கையும்

வண்டியில் ஏறி உட்கார்ந்து நவீனின் தோள்களில் ஆர்த்தி கை வைக்க கூசி போகிறான் நவீன்.. கையை வைக்காதீங்கன்னு சொல்றான். இல்லை நவீன் எனக்கு பிடிக்காம உட்கார்ந்தா பயம்னு சொல்றா. அவன் கிளம்புகிறான். அப்போது வாசலில் நின்று அக்கா மாயாவும், தங்கை ஆர்த்தியும் சிரிச்சுக்கறதை பார்க்கறான்.

இறங்கேன்

இறங்கேன்

ஆர்த்தி கொஞ்சம் இறங்கேன்னு சொல்றான்.. எதுக்கு நவீன்.. போலாமேன்னு சொல்றா ஆர்த்தி. இல்லை இறங்கு கொஞ்சம் வண்டியைத் திரும்பிக்கறேன்னு சொல்றான் ஆர்த்தியும் நம்பி இறங்க, நவீன் விட்டான் ஜூட்.

அனிதா

அனிதா

நவீனை, அனிதா அனாமிகான்னு பொய் பேர் சொல்லி முகம் காட்டாமல் காதலிக்கறா. அவளுக்கு அத்தானின் தம்பி நவீன் மேல் ஆசை வந்துருது. இதனாலதான் உண்மை பேரை சொல்லாம காதலிக்கற.இப்படி ஒரு காதல் வேற இடையில போகுது.

சந்தோஷ், ஜனனி

சந்தோஷ், ஜனனி

திருமணம் முடிச்ச தம்பதி சந்தோஷ், ஜனனி காதல் பேசாத காதல்னு சொல்லலாம். ரெண்டு பேரும் எப்படா பேசிக்குவாங்கன்னு பார்க்கறவங்க தவம் கிடக்க ரெண்டு பேரும் உள்ளுக்குள்ள ஆசையை ஒளிச்சு வச்சுக்கிட்டு, கண்ணாமூச்சி விளையாடறாங்க.

ஒண்ணுமில்லை..

ஒண்ணுமில்லை..

புருஷனுக்கு போன் பண்றா ஜனனி.. ஒண்ணுமில்லை சும்மாதான் கூப்பிட்டேன்னு சொல்றா. நான் மீட்டிங்கில் இருந்தேங்க.. அதனாலதான் போன் எடுக்க முடியலைன்னு சொல்றான் சந்தோஷ். பரவால்லை வச்சுடவான்னு கேட்கறா.. என்ன விஷயம் சொல்லுங்கன்னு சொல்றான். ஒண்ணுமில்லை.. சாப்பிட்டீங்களான்னு கேட்கறா...ம்ம் நீங்கன்னு கேட்கறான் சந்தோஷ்.. ம்ம் ஆச்சு.. ஏதோ பேசணும்னு பேசறோம் இல்லேன்னு அவன் சொல்ல இவள் சிரிக்கறா..

சந்தோஷமா

சந்தோஷமா

காரைக்குடியில் கேட்ட அதே சிரிப்புங்கன்னு சொல்றான் சந்தோஷ். ஆமாங்க காரைக்குடியில் இருந்தப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்னு சொல்றா ஜனனி. மனசுக்குள்ள சந்தோஷ் எப்பவும் என் சந்தோஷா இருப்பாரா என்னனு பேசிக்கறா.

இப்படி ஒரு குடும்பத்துல மூணு வித காதல் பாருங்க..

 
 
 
English summary
Colors Tamil TVIs thirumanam serial heroine Janani goes mother home. The story in it is slowly moving.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X