ப்ரீனாவுக்கு ஆண் குழந்தை, வாழ்த்தும் ரசிகர்கள்.
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலின் வெண்பாவிற்கு குழந்தை பிறந்த தகவல் கேட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
என்ன குழந்தை என்று ரசிகர்களின் கேள்விக்கு ஃபரீனாவின் புதுமாதிரியான பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
புதுவையில் சுவாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு
குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லையே என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

வில்லியாக அவதாரம்
ஜீ தமிழில் தொகுப்பாளராக அறிமுகமாகி சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலமடைந்த ஃபரீனா விஜய் டிவியின் மூலமாக வில்லியாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவருடைய சீரியல் அவதாரத்தை பார்த்ததும் ரசிகர்கள் இவர்தான் ஹீரோயினாக இருப்பார் என்று முதலில் நினைத்தார்கள். ஆனால் நாட்கள் போக போகத்தான் இவர்தான் வில்லி என்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

சின்னத்திரை நீலாம்பரி
சின்னத்திரையில் ஒரு நீலாம்பரி என்று சொல்வது போலத்தான் இவர் நடந்து கொண்டு வருகிறார் என்று பலர் இவரை பார்த்து கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவருடைய கேரக்டரை பிடிக்கவில்லை என்று பலர் கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர். என்னதான் ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும் அது தன்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரமாக தான் என்று இவர் கூறிவருகிறார். ஹீரோயினுக்கு இணையாக வில்லிக்கும் ரசிகர்கள் இருப்பதில் இவரும் ஒருவர்.

தொடரும் நடிப்பு
இவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் பாரதிகண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர் இந்த சீரியலில் இருந்து விலகி விடுவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவர் கர்ப்ப காலத்திலும் தொடர்ந்து சூட்டிங்கில் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். தற்போது கதைப்படி இவர் சிறையில் இருப்பது போல இருந்தாலும் ஒரு சில மாதங்களில் மீண்டும் சீரியலில் இவரே தொடர்ந்து விடுவார் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

குழந்தை பிறந்தாச்சி
இந்த நிலையில் இவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று ரசிகர்கள் பலர் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தன்னுடைய சந்தோஷமான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் It's a மகன் என்று போட்டு போட்டு உள்ளார்.இதை பார்த்ததும் அவருடன் நடிக்கும் நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.சீக்கிரத்தில் எப்படியும் பையனை போட்டோ சூட்டுக்கு கொண்டு வந்துவிடுவார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் ஃபரீனாவிற்க்கும் அவருடைய மகனுக்கும் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் குவிந்து வருகிறது.