• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலைப்பாம்பை அந்த இடத்தில் நெளிய விட்டபடி.. பதற வைத்த கேப்ரியெல்லா செல்லஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: என்னதான் சீரியலில் பல பேருக்கு முன் மாதிரியாக இருந்தாலும் தற்போது நான் செய்யும் செயல் எல்லாமே வித்தியாசம்தான்.

உடலில் அங்குமிங்குமாக மலைப்பாம்பை நெளிய விட்டபடி அனைவரையும் மலைக்க வைத்த கேப்ரியெல்லா செல்லஸின் லேட்டஸ்ட் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் படுஷாக்காக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புது சீரியல்களில் புதுமுகத்தை களம் இறக்க போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சுந்தரி என பெயருக்கு ஏற்ப சுந்தரமாக ஜொலித்து வருகிறார் கேப்ரியெல்லா செல்லஸ்.

இடுப்பை அப்படி ஆட்டி.. வெறித்தனமான ஆட்டம்.. வியர்க்க வைத்த கேபி இடுப்பை அப்படி ஆட்டி.. வெறித்தனமான ஆட்டம்.. வியர்க்க வைத்த கேபி

டிக்டாக் பிரபலம்

டிக்டாக் பிரபலம்

ஏற்கனவே விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்தவர் .அதுவும் அல்லாமல் டிக்டாக்கில் இவரை தெரியாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய கவிதைகளாலும் நடிப்பாலும் அனைவரையும் ரசிக்க வைத்தவர் .இவர் கிராமத்து மணம் மாறாத கிராமத்து சீட்டாக தனது சொந்த திறமையினால் முன்னேறி உள்ளார்.

எஞ்சாய்

எஞ்சாய்

தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கலக்கி கொண்டிருக்கும் என்ஞாமி என்னும் பாட்டுக்கு நானும் வித்தியாசமாக கலங்குகிறேன் என முகத்தில் வண்ணங்களை பூசியபடி உடம்பில் மலைப்பாம்பை நெளிய விட்டு பூர்வ குடியினர் கெட்டப்பில் பட்டைய கிளப்பியிருக்கிறார் .

பக்கா பொருத்தம்

பக்கா பொருத்தம்

சிலருக்கு தான் பத்து பொருத்தமும் சரியாக அமைந்துவிடும் என சொல்லுவார்கள் .ஆனால் இவரது நடிப்பிற்கு முன்னால் இவரது திறமைக்கு இவர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அது இவருக்கு பக்காவாக பொருந்தி விடுகிறது .தற்போது சுந்தரி சீரியலிலும் இவரது நடிப்பை பார்த்து பல பெண்கள் தங்கள் வீட்டு பெண் போல இவரை நினைத்து வருகின்றனர் .

மக்கள் மனசில் சுந்தரி

மக்கள் மனசில் சுந்தரி

அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில் அனைவரின் மனதிலும் சுந்தரி ஆகவே இவர் வாழ்ந்து வருகிறார். அழகாக இருந்தால் மட்டும்தான் கதாநாயகியை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்னும் மாயையை உடைத்து தனது திறமை மட்டுமே போதும் அழகு தேவையில்லை என பலபேருக்கு உணர்த்தி வருகிறார். சுந்தரி சீரியலின் கதை பல திரைப் படங்களிலும் சீரியல்களிலும் வருவது போலவே இருந்தாலும் இவரது நடிப்பை பார்த்ததும் ரசிகர்கள் இந்த சீரியலை நன்றாகவே ரசித்து வருகிறார்கள் .

இன்ஸ்டாவில் அதகளம்

இன்ஸ்டாவில் அதகளம்

அதுவும் இவர் தற்போது டிக் டாக் இல்லாததால் அதற்கு நிகராக பெரும் ரசிகர்கள் இருக்கும் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இதற்கு முன்னர் டிக்டாக்கில் தினமும் போஸ்ட் போட்டு அதுவும் கருத்துள்ள கவிதைகளை அடிக்கடி பதிவிட்டு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் .அப்பா ,மகள், அக்கா, தங்கச்சி பாசம் ௭ன அனைத்து உறவுகளின் பாசங்களையும் தனது தூய தமிழில் தெளிவாக பேசி எடுத்துரைத்து குடும்ப சொந்தங்களின் பாசத்தையும் அனைவருக்கும் தெரியப்படுத்தி வந்தார் இவர்.

வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்

வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்

அதனாலேயே பல பேர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் இவருடைய வீடியோக்கள் அடிக்கடி வலம் வரும் இவர் ஒரு நடிகை மட்டும் அல்லாமல் மாடலாகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார் .2016ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படமான கபாலி மூலம் அறிமுகமாகியிருக்கிறார். தற்போது 25 வயது ஆகி இருந்தாலும் வயதுக்கு மீறிய திறமையோடு தனது காதல் கணவருடன் ஜொலித்து வருகிறார் .என்னதான் இவர் தனதுதிறமையினால் இவர் முன்னேறி வந்து கொண்டிருந்தாளும் கருப்பு அழகியாகவும் இவர் ஜொலித்து வருகிறார் .

கலக்கும் கருப்பு

கலக்கும் கருப்பு

கலராக இருந்தால் தான் அழகு என பல பெண்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் கருப்பாக இருந்தாலும் அனைவரும் ரசிப்பார்கள் என இவரைப் பார்த்த பின்புதன் பலருக்கு தெரிந்து இருக்கிறது .ஆனாலும் இவர் தற்போது வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் பயந்து போன ரசிகர்கள் மலைப்பாம்பை இப்படி உடம்பில் நெளிய விட்டிருக்கிறார் என அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் .அதுவும் சிலர் என்ன இப்படி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கீங்க என்று கேட்டுள்ளனராம்.

மலைப் பாம்புடன் போஸ்

மலைப் பாம்புடன் போஸ்

இதுக்கு ப்ளூ கிராஸ்ல இருந்து உங்க மேல ஆக்ஷன் எடுத்துட போறாங்க என இவருக்கு அறிவுரையும் கூறி வருகின்றனர் .சின்னபாம்பை பிடிச்ச சிம்புக்கே அந்த நிலைமை என்றால் நீங்க இவ்வளவு பெரிய மலைப் பாம்பை கையால் பிடித்து இருக்கீங்க என்ன ஆகப்போகிறதோ எனவும் சிலர் இவருக்காக அனுதாபப் பட்டும் வருகின்றனர்.

English summary
Gabrella Sellus rocks in Sundari serial in Sun TV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X