• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் கிட்ட மோதாதே.. கையை உசத்தி... கெத்து காட்டும் கேபி... செம!

|

சென்னை: இதுவரைக்கும் பல அவதாரத்தில் போட்டோ வெளியிட்டு போரடித்துவிட்டது என தற்போது ரவுடி பேபி ஆக அதுவும் அழகான ரவுடி பேபி யாக களமிறங்கியிருக்கும் கேப்ரில்லா வின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரொம்பவே மவுசு கூடிவிட்டது . அதனால் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கலக்குகிறார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு... இந்த நிபந்தனைகளை ஏற்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கறார்..!ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு... இந்த நிபந்தனைகளை ஏற்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கறார்..!

தான் இன்னமும் க்யூட்டான தேவதைதான் என வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

கேபி போட்டோஸ்

கேபி போட்டோஸ்

இவருடைய போட்டோக்களை பார்த்ததும் குஷியாகி போகும் ரசிகர்கள் இவருக்காக உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இவருடைய க்யூட்டான நடிப்பையும் அழகையும் பார்த்து அசந்துபோன ரசிகர்கள் அவருக்காக இன்ஸ்டாகிராமில் ஃபேன்ஸ் பேஜ்க்களையும் ஓபன் பண்ணி வைத்து வருகின்றனர். இவர் முதன் முதலில் விஜய் டிவியில் அறிமுகமாகி திரைப்படங்களில் வரைக்கும் கலக்கி இருந்தாலும் இவருக்கு பேரும் புகழும் வாங்கித் தந்தது டிக்டாக் தான்.

செம பாப்புலர்

செம பாப்புலர்

அதில் அவர் விதவிதமாக டான்ஸ் ஆடியும் கலக்கலாக தனது நடிப்பை வெளிக் காட்டியும் ஆக்டிவ் ஆக இருந்து வந்தார். திடீரென டிக் டாக் நிறுத்தப்பட்டதும் தற்போது அப்படியே இன்ஸ்டாகிராமில் தாவி அங்கு ரசிகர்களை வசியப்படுத்தி தன்னுடைய அழகான டான்ஸால் ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தற்போது என்னுடைய கலக்கலான லுக்கிலும் பலரைக் கவுத்துவிடுவேன் என புது வழியை கையாண்டிரக்கிறார்.

கெத்து போஸ்

கெத்து போஸ்

இது வரைக்கும் இல்லாத வகையில் கை நிறைய வளையலையும் காதில் பெரிய ஜிமிக்கி கம்மல், கண்ணில் பெரிய கண்ணாடியையும் மாட்டிக்கொண்டு பாவாடை தாவணியில் தாவாணியை நழுவவிட்டு இடுப்பு முழுக்க எடுப்பாய் தெரியும் வகையில் தாவாணியை எடுத்து சொருகிக்கொண்டு கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார் .இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் அசந்து போனா ரசிகர்கள் இவருக்கு ஹாட்டின் களையும் லைக்குகளையும் கொட்டி வருகின்றனர் .

பாபி டாப் டக்கரு

பாபி டாப் டக்கரு

அதிலேயும் அவருடைய தோழிகளான ரம்யா பாண்டியன் இவருடைய போட்டோவை பார்த்ததும் இவருக்கு அசந்து போகிற மாதிரி இமேஜை அனுப்பியிருக்கிறார் .அதற்கு கேப்ரில்லாவும் பிளாக் ஹாட்டின் பறக்க விட்டிருக்கிறார் .ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நிதியும் இவரைப் பார்த்து பேபி யூ ஆர் மை டாப்பு டக்கரு என தெரிவித்து சிம்பலை அனுப்பி இருக்கிறார்.

பறக்கும் இதயங்கள்

பறக்கும் இதயங்கள்

இவர்கள் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இவருக்கு ஹாட்டின்களை பறக்க விட்டிருக்கிறார்கள் .அதுவும் இவருடைய கெத்தான போஸ்ட் தான் வேற லெவல் இருக்கிறது .என்கிட்ட மோதாதே என இவர் வைத்திருக்கும் கேப்ஷனும் வேற லெவல் என கூறிவருகின்றனர் .இவர்கள் இப்படி என்றால் சில ரசிகர்கள் இவரை பார்த்ததும் நெஸ்ட் மினிஸ்டர் இனி நீதான் எனவும் கூறிவருகின்றனர் . இந்த மாதிரி இருந்தா என்ன வேணாலும் பண்ணுவீங்க போலவே எனவும் சிலர் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் .

குவியும் லைக்குகள்

குவியும் லைக்குகள்

ஆனால் இவர் போஸ்ட் போட்ட ஒரு மணி நேரத்திற்குள் 60 ஆயிரம் லைக்குகளை தொட்டுவிட்டது .கமெண்டுகளும் மலைபோல உயர்ந்து வருகிறது. இந்த மாதிரி போய்க் கொண்டிருந்தால் நாள்கணக்கில் மேக்கப் போட்டு போட்டோ ஷூட் நடத்தும் நடிகைகள் பொறாமைப்பட்டு கண்ணு வைத்து விடுவார்கள் அதனால் அம்மாவிடம் சொல்லி சுற்றி போட சொல்லிருங்க என அவருடைய ரசிகர்கள்கூறி வருகின்றனர்.

English summary
Gabriella Charlton rocks in new pose in her latest photoshoot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X