• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஹா.. இடைவெளி குறைஞ்சு நெருங்க ஆரம்பிச்சிருச்சுகளே.. அப்ப அடுத்து "அது" தானா?

|

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ரொம்ப பழிவாங்கல், ஆனந்தியை சாகடிக்க பிளான், வீட்டை விட்டு துரத்த பிளான்னு சுவாரஸ்யமா இருக்கற மாதிரிதான் போயிகிட்டு இருக்கு.

அத்தனை சொத்துக்கும் வாரிசான ஆனந்தி, அவதான் வாரிசுன்னு தெரிஞ்சும், கலிவரதன் முழுசா நம்பி இருந்த அரசியல்வாதி நண்பன் மகளுடன் சேர்ந்து அந்த விஷயத்தை கலிவரதனிடமே மறைப்பதும், வில்லத்தனத்தில் தந்திரம்.

Gap between Chezhiyan and Kanmani comes down

திருவோட குழந்தையை சுமக்கறதை, திருகிட்ட சொல்ல முடியாத சூழ்நிலையில இருந்து தவிக்கறா ஆனந்தி. அத்தை குழந்தை குழந்தைன்னு கேட்டும், கணவன் தன்னை நெருங்காததுனால கர்ப்பம்னு நாடகமாடி தவிக்கறா கண்மணி.

கண்மணியை ரெகுலர் செக்கப் அழைச்சுட்டு போக தேதி வந்துருச்சுன்னு, கண்மணியையும், செழியனையும் பிரிச்சுட்டு, தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப்படற சுஹாசினி சொல்ல, சற்குணத்தம்மாவும் ஆஸ்பத்திரிக்கு மருமகளுடன் கிளம்புறாங்க.

அங்க கம்பெனியில ஒரு பொண்ணு தூக்கு போட்டுக்க முயற்சிக்கறா. செழியன் அவளை அழைச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போக, அங்கதன் தெரியுது, புருஷன் ஆண்மை இல்லாதவன், ஆனா, தன்னை மலடின்னு சொல்லிட்டு புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க மாமியார் ஏற்பாடு பண்றாங்கன்னு சொல்லி அந்த பொண்ணு அழறா.

Gap between Chezhiyan and Kanmani comes down

மனசு கஷ்டத்தோட செழியன் வெளியில வர, கண்மணி அங்க மாமியார் சற்குணத்துடன் பயத்தில் உட்கார்ந்து இருக்கா. அவனை யதார்த்தமா பார்த்துட்ட சற்குணம், பெரியவனேன்னு கூப்பிட, வர்றான் செழியன்.

நம்ம டிராமாவுக்கு இவ ஸ்கிரிப்ட் எழுதறாளே... விட்டா கிளைமேக்ஸும்...!

வாடா.. கண்மணிக்கு செக்கப் பண்ணத்தான் வந்தோம்.நீயும் டாக்டரை பார்த்துட்டு போன்னு சொல்றாங்க. டாக்டரைப் பார்தததும் ரெண்டு பேர்கிட்டயும் தனியா பேசணும்னு டாக்டர் சொல்லிட்டு, செழியனுக்கு அட்வைஸ் பண்றாங்க.

அவன் மனசு கொஞ்சம் கொஞ்சமா மாறுது. இனிமே கண்மணியை தண்டிக்க கூடாதுன்னு நினைக்கறான். மறுபடியும் ராத்திரி வாக்குவாதம் வந்துருது. ஆனா, இது ஆரோக்கியமான வாக்குவாதமாத்தான் இருக்குது.

மறுநாள் செழியனுக்கு கம்பெனிக்கு நேரமாச்சுன்னு சொல்ல, அவசரமா மாடிப்படியில் இறங்கி வந்த கண்மணி தடுமாறி விழப் போறா. அந்த சமயம் செழியன் ஒடி வந்து கண்மணியைத் தாங்கிப் பிடிக்க, முதல் ரொமான்ஸ் அப்போதுதான் நடக்குது.

Gap between Chezhiyan and Kanmani comes down

இப்படி அவசரமா ஒடி வராதேன்னு எத்தனை தடவை கண்மணி சொல்றதுன்னு செழியன் சொல்ல, தாங்கிப் புடிக்கத்தான் நீங்க இருக்கீங்களேன்னு சொல்றா கண்மணி. எல்லாரும் சந்தோஷமா பார்க்க, சுஹாசினிக்கு வயிறு எரியுது.

சற்குணம் நீ கூட தனியா மாடிப்படி ஏறாத, இறங்காத.. என்னை துணைக்கு கூப்பிடு.. நான் உன்னை தூக்கிக்கறேன்னு சற்குணம் புருஷன் சொல்ல, நீ என்னைத் தூக்க போறியா.. எங்கே அந்த சேரை நகர்த்தி வைன்னு சொல்ல, அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு போறார் அவர், எல்லாரும் சிரிக்கறாங்க.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sun TV's nayagi serial revenge, the plan to kill Anandhi, the plan to throw away from the house is just like being in the house.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more