For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

kalyana veedu serial: கோபியிடம் இனி பணம் இல்லையாம்...அவரே சொல்லிட்டார்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் வேலைக்கே போகாத கோபி யார் கேட்டாலும் பணத்தை எடுத்து நீட்டறாரே... இவருக்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது என்று சீரியலைப் பார்த்து பலரும் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

சிங்கப்பூர் போய் சம்பாதிச்சுக்கிட்டு வந்த பணம்தான் இதுவரைக்கும் வச்சு செலவு பண்ணிக்கிட்டு இருந்தேன். இனிமே என் பிழைப்பை பார்க்கவே என்கிட்டே பணம் இல்லைன்னு அவரே ஒரு சீனில் வாக்கு மூலம் மாதிரி கொடுத்து இருக்கார்.

சிங்கப்பூரில் ஆர்கெஸ்டரா குழுவில் பாடி சம்பாதிச்ச பணத்தில் கடைசி தங்கச்சிக்கு கல்யாணம் செய்துட்டு. இத்தனை மாசம் செலவுக்கும் வச்சு இருந்திருப்பார் போல. நிறைய பேர் கேட்ட டவுட்டை கிளியர் பண்ணி வச்சுட்டார் கோபி.

 பிழைப்பை பார்க்க

பிழைப்பை பார்க்க

அப்பாவுக்கு கொள்ளி வச்சு ஈம காரியங்களை முடிச்சுட்ட கோபி, அப்பாவின் ரெண்டாவது சம்சாரத்துக்கு பொறந்த தங்கச்சிகிட்டே இனி உங்க பிழைப்பை நீங்க பார்த்துக்கோங்கன்னு சொல்றார். அப்போதும் அந்த அம்மா, அப்போ இனிமே நீ எங்களுக்கு எதுவும் காசு தர மாட்டியான்னு ஆங்காரமா கேட்குது. என் பிழைப்பை பார்க்கவே எனக்கு பணம் இல்லேன்னு சொல்றேன்னு சொல்றார் கோபி.

Azhagu Serial: பூர்ணா நெஞ்சுல உப்பை வச்சு சுடணும்...எவ்ளோ நெஞ்சழுத்தம்!Azhagu Serial: பூர்ணா நெஞ்சுல உப்பை வச்சு சுடணும்...எவ்ளோ நெஞ்சழுத்தம்!

 இடம் வேலை

இடம் வேலை

நான் முதல்ல எனக்கு ஒரு வேலை பார்க்கணும். பொண்ணை குடுக்கறேன்னு சொன்ன சூர்யா அப்பா, குறிச்ச நாளில் கல்யாணம் நடக்கணும்னு சொல்லிட்டார். நான் முடியாது.. எங்க வீட்டு ஆளுங்க இல்லாம இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டேன். அதனால அவர் எனக்கு பார்த்து வச்ச வேலையிலயும் சேர முடியாது. புதுசா வேலை பார்க்கணும்.. தங்கறதுக்கு இடம் பார்க்கணும்..

 எப்படி சமாளிச்சீங்க

எப்படி சமாளிச்சீங்க

நான் பணம் தராதப்போ நீங்க எப்படி சமாளிச்சீங்கன்னு கோபி கேட்க, அம்மா வீட்டு வேலைக்கு போவும்.. நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தேன்.. புளி பொறுக்கி பாக்கெட்டில் அடைச்சு சூப்பர் மார்க்கெட்டுக்கு குடுக்கற வேலைன்னு அப்படி இப்படி சம்பாதிச்சுதாண்ணே சமாளிச்சோம்னு தங்கச்சி சொல்லுது.

 தப்பு இல்லையே

தப்பு இல்லையே

இது ஒண்ணும் தப்பு இல்லையே.. அதே மாதிரி வேலை செய்து சமாளிங்க. முதலில் சொந்த காலில் நிற்கணும்... இவ்ளோ பெரிய பெண்ணாகி ஒவ்வொண்ணுக்கும் அடுத்தவங்களை எதிர்பார்த்து நிற்க கூடாது. சொந்த காலில் நிக்க கத்துக்கணும். என்னைய விட்ருங்க.. நான் என் குடும்பத்து ஆட்களோட எப்படி சேரணும்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு அழறார்.

நிறைய பேருக்கு கோபிக்கு மட்டும் வேலைக்கு போகாம எப்படி பணம் வருதுன்னு சந்தேகம் இருந்துச்சு. அதை தீர்த்து வச்சுட்டார் கோபி.

English summary
This is not the same way .. First stand on your own feet ... This is the big woman and not looking forward to the next. Nikka screams at her own feet. How do I tell my family, I know how to join the whole family and cries and cry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X