For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

kalyana veedu serial: டூ மச் எமோஷன்ஸ்.. பாவம் கோபி அம்மா சிவகாமி

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் ரொம்ப எமோஷனலா கடந்த இரண்டு நாட்கள் எபிஸோட்ஸ் ஒளிபரப்பாகி வருது. இவ்வளவு உணர்ச்சி பெருக்கா எனும்படி கோபியின் அம்மா சிவகாமி தொண்டை அடைக்க அனைத்து வசனமும் பேசுவது பார்க்கும் நமக்கே கொந்தளிப்பை தருது.

இவ்வளவு எமோஷன்ஸ் நிச்சயமாக பார்க்கும் மக்களுக்கும் தொத்திக்கும்படி இருப்பது, மக்களுக்கு நல்லதில்லை. நடிக்கறவங்க ஹெல்த்துக்கும் நல்லதில்லை.

கோபியின் அம்மா சிவகாமி ஒவ்வொரு வார்த்தையும் தொண்டை அடைக்க பேசி நடித்து இருக்கார். கதைக்கு இவ்வளவு எமோஷன்ஸ் தேவைதான்.. ஆனால், காட்சிக்கு கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

மக்கள் ஹெல்த்

மக்கள் ஹெல்த்

தொலைக்காட்சி சீரியல்களை மக்கள் டிவி முன் அமர்ந்து ஒன்றிப் போய் பார்க்கும் காலம். நாங்களும் அதில் ஒருவராகி விடுகிறோம் என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூட பேசி இருக்கிறார்கள். அவர்களின் ஹெல்த்தை மனசில் வைத்தாவது தொலைக்காட்சி சீரியல்களில் எமோஷன்ஸ் குறைத்துக் கொண்டால் இன்னும் இன்னும் என்று தொடர்ந்து மக்கள் சீரியல்களை பார்த்து உங்களுக்கு ஆதரவு அளித்து வருவார்கள்.

காமெடி சானல்கள்

காமெடி சானல்கள்

பல மருத்துவர்கள் இப்போது டிவி சீரியல்கள் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்தி வருகிறார்கள். காரணம் சீரியல் பார்த்து பார்த்து பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி விடுவதுதான். தாங்களும் எமோஷனாகி அதை பிரதிபலிப்பதாலும்தான். சும்மா நீங்கள் எதை காண்பித்தாலும் பார்த்துக்கொண்டு இருக்க அவர்கள் என்ன ஏமாந்தவர்களா? இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் எதுவும் தெரியாதவர்கள் அல்ல. அதனாலதான் காமெடி சானல்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

தப்பான அப்பா

தப்பான அப்பா

கோபியின் அப்பா தப்பானவர், அவர் கோபி சின்ன பையனாக இருக்கும்போது, குடும்பத்தை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டார் என்பது கதை. ஆனால், அதே அப்பா குடும்பத்துக்கு கோபி யாருக்கும் தெரியாமல் பணம் கொடுத்து உதவி செய்கிறார். இதை தெரிந்துக்கொண்ட அம்மா, ரொம்ப கோபம் கொண்டு படு எமோஷனில் தொண்டை அடைக்க பேசுகிறார். ஒவ்வொரு வார்த்தையும் தொண்டை அடைக்க அடைக்க கோபத்தில் வெளி வருகிறது.

தவறுகளை பூதக்கண்ணாடி

தவறுகளை பூதக்கண்ணாடி

கல்யாண வீடு சீரியலில் சமூகத்தில் நடக்கும் தவறுகளை மட்டும் பூதக்கண்ணாடி வச்சு பெரிதாக்கி காட்சி படுத்துவதால், என்ன பெரிதாக நிகழ்ந்துவிடப் போகிறது? எதை மனசில் வச்சு இப்படி காட்சிப்படுத்தி காண்பிக்கிறீர்கள்? ஏங்க வாழ்க்கையை டேக் இட் ஈஸியா நினைச்சு வாழ்ந்துக்கொண்டு இருக்கும் பல நிகழ்வுகளை சொல்ல உங்களுக்கு ஆயிரத்தெட்டு கதை தெரியுமே அதை வச்சு கதையை காண்பிக்க கூடாதா?

டிவி வெடிச்சுடும்

டிவி வெடிச்சுடும்

டிவியே வெடிச்சுடும் அளவுக்கு டூ மச் எமோஷன்ஸ்...இப்படி சொல்வது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்தால் திருமுருகன் சார்.. மக்கள் உங்களை புறக்கணிக்க போவது உறுதி. மெட்டி ஒலி, நாதஸ்வரம் சீரியல்கள் எல்லாம் இந்த அளவுக்கு இல்லையே..இதில் கதையும் கேவலமா இருக்கு. காட்சிகளும் ரொம்ப ரொம்ப...!

English summary
Sun TV's kalyana veedu has been airing episodes for the past two days. Kobi's mother Sivakami's throat is so touching that all the scriptures speak to us is so upsetting.Emotions are certainly good for the people who see them, and it is not good for the people. Acting is not good for health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X