For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

24 வயசில் கூட ஹார்ட் அட்டாக்கா?.. என்னங்க சொல்றீங்க.. டாக்டர் சொல்றார் நம்புங்க!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் இதயம் தொடர்பான மருத்துவ பிரச்சனைகள் பற்றி கூறி இருக்கிறார் இதய நல மருத்துவ நிபுணர் டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன். .அவர் பேசுகையில் அண்மையில் 24 வயதில் இருக்கும் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவம் பார்த்ததாக கூறி இருக்கிறார்.

கடந்த 15 வருடங்களுக்கு முன் 35 வயதில் ஹார்ட் அட்டாக் வருவதுதான் மருத்துவமனையில் டாக்டர்கள் பலரும் வியப்புடன் விவாதிக்கும் விஷயமாக இருந்தது என்றும், ஆனால், அண்மைய காலங்களில் வயது குறைந்துகொண்டே போவதாகவும் கூறி இருக்கிறார் கார்த்திக் ஆஞ்சநேயன்.

இதற்கு காரணம் என்று பார்க்கையில், இன்றைய உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாறிப்போனது, தூக்கமின்மை ஆகியவை முக்கிய காரணம் என்று சொன்னார். வணக்கம் தமிழா நிகழ்ச்சியை பார்வதியும், அஸாரும் தொகுத்து வழங்கினார்.

ஒரு காரணம் என்ன டாக்டர்?

ஒரு காரணம் என்ன டாக்டர்?

இன்றைய சூழலில் 24 வயது என்றும் அதற்கு மேற்பட்ட 30 வயதுக்குள் என்றும் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று சொல்கிறீர்களே டாக்டர்.. இத்தகு முக்கிய காரணம் என்று ஒன்றை சொல்ல வேண்டுமானால் எதை சொல்வீர்கள் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு முக்கிய முதல் காரணம் என்று பார்த்தால் புகைப் பிடித்தல்தான் என்று டாக்டர் கார்த்திக் கூறினார். வயதாகி ஸ்மோக்கிங்கில் ஹார்ட் அட்டாக் வருவதை விட்டுவிடுவோம். குறைந்த வயதில் ஹார்ட் அட்டாக் வருவதில் 70 சதவிகிதம் பேருக்கு புகைப்பிடிப்பதால்தான் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று கூறினார்.

புகை பிடிப்பதால் ஹார்ட் அட்டாக்

புகை பிடிப்பதால் ஹார்ட் அட்டாக்

சிகரெட் பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது, கேன்சரை வரவைக்கும் என்று திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன் காண்பிப்பது போல சிகரெட் பழக்கம் ஹார்ட் அட்டாக் வரவைக்கும் என்பதையும் கட்டாயம் போட வேண்டும் என்று சொன்னார் டாக்டர் கார்த்திக். இதை மருத்துவ குழு பல முறை பரிந்துரை செய்து இருக்கிறோம். இதை எடுத்துக்கொண்டு சிகரெட் பிடிப்பது ஹார்ட் அட்டாக் வரவைக்கும் என்பதை திரை அரங்குகளில் படம் திரையிடுவதற்கு முன்னர் கட்டாயம் போட வேண்டுமென்றும் கூறினார்.

மாரத்தான் ஓடுபவர்களுக்கு

மாரத்தான் ஓடுபவர்களுக்கு

நகரங்களில் வாக்கிங் போவது என்பது விழிப்புணர்வாக இருக்கிறது. கிராமங்களில் சாதாரணமாக நடப்பது என்பதுதான் வழக்கமாக இருக்கும். அவர்களுக்கு வாக்கிங் என்பது ஆடம்பரமாகத் தெரியும். மாரத்தான் ஓடுபவர்களுக்கு கூட ஹார்ட் அட்டாக் வருகிறது என்று பார்த்தால், அவர் திடீரென்று ஓட ஆரம்பித்து இருப்பார். தங்கள் இதயம் எந்த அளவுக்கு துடிப்பை தாங்கும் கெபாசிட்டி இருக்கிறது என்று தெரியாமல் அவர்கள் ஓடும்போது ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு

நார்மலாக எக்ஸர்ஸைஸ் செய்பவர்கள் நல்ல உணவுப் பழக்க வழக்கம் இருப்பவர் இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல கொலஸ்ட்ரால் தாமாகவே உண்டாகி இருக்கும். நல்ல ஆலோசகரின் உதவி இல்லாமல் தாங்களாக இஷ்டத்துக்கும் உடற்பயிற்சி செய்ப்பவர்களுக்கு இதயத்துக்கு ஓவர் லோடாகி அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகம். நல்ல உடற்பயிற்சி பயிற்சியாளரை வைத்தும், இதயத்தின் இயக்கம் தெரிந்துக்கொண்டும் உடற்பயிற்சி செய்வது நல்லது என்று டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன் கூறினார்.

பெண்களுக்கு ஹார்ட் அட்டாக்

பெண்களுக்கு ஹார்ட் அட்டாக்

விட்டமின் டி குறைபாடும் ஹார்ட் அட்டாக் வருவதற்கு ஒரு முக்கிய காரணம். வெயிலில் கிடைக்கும் விட்டமின் டி யை ஒவ்வொருவரும் அதன் மூலமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கும் என்றும், அதே சமயம் பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் அதை மருத்துவத்தில் சரி செய்வது என்பதும் ரிஸ்க் என்று கூறினார். ஆண்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆஞ்சியோ அல்லது வேறு மருத்துவம் செய்வது கொஞ்சம் எளிதாக இருப்பது போல பெண்களுக்கு எளிதல்ல என்று கூறினார்.

பிபி மாத்திரை

பிபி மாத்திரை

நிறைய பேர் பிபி க்கு மாத்திரை எடுத்துக்கொள்வது தவறானது என்று நினைக்கிறார்கள். செக் பண்ணும்போது நாங்கள் பிபி இருக்கிறது என்று கூறினால், ரொம்ப தூரம் நடந்து வந்தேன் டாக்டர் அதனாலதான் என்று சொல்கிறார்கள். பிபியை நார்மல் நிலைக்கு கொண்டு வர நாங்களே வாக்கிங்தான் போகச் சொல்கிறோம். எங்களிடம் வந்து இப்படி கூறினால் நாங்கள் என்ன சொல்ல முடியும்? உடலில் பிபி இருப்பதால்தான் பிபி எகிறி காண்பிக்கிறது என்று சொன்னால் புரிந்துக்கொள்ள வேண்டும். டென்ஷனாக இருக்கும்போது பிபி வருவதும், டென்சன் குறைந்தால் பிபி குறைந்துவிடும் என்று நினைப்பது தவறு. பிபி இருந்தால் தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்வதுதான் நல்லது என்று இதய நல மருத்துவ நிபுணர் டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன் கூறினார்.

English summary
Karthik Anjaneyan says that the arrival of a heart attack 15 years ago at the age of 35 was a matter of great concern to many doctors at the hospital, but in recent years has been declining.The reason for this, he said, is today's eating habits, lifestyle changes and insomnia. Parvathy and Azhar hosted the vanakkam thamizha program.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X