For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீரியல் போடுங்க போடாட்டி போங்க.. எங்களுக்கு வெப் சீரிஸ் இருக்கே.. இல்லத்தரசிகளின் அதிரடி மாற்றம்

லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு வீடே கதி என்றாகி விட்ட நிலையில் டிவியில் ஒளிபரப்பாகும் போர் அடிக்கும் சீரியல்களையும் மறு ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களையும் பார்க்க இல்லத்தரசிகளுக்கு ஆர்வம் இல்லை. லா

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் லாக் டவுன் காலம் மக்களுக்கு பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்து விட்டது. எதெல்லாம் அவசியம் என்று நினைத்தோமா அதெல்லாம் அநாவசியமாகி விட்டது. வீட்டிலேயே இருப்பதால் நேரத்திற்கு சாப்பாடு நல்ல தூக்கம், கொஞ்ச நேரம் பொழுது போக டிவி, இணையதளம், ஓடிடி பிளாட்பார்ம் என்று ஓடிக்கொண்டிருக்கிறது.

Recommended Video

    Amazonல் வெளியாகும் தமிழ் படங்கள் | Master, Soorarai pottru

    மக்களுக்கு வீடே கதி என்றாகி விட்ட நிலையில் டிவியில் ஒளிபரப்பாகும் போர் அடிக்கும் சீரியல்களையும் மறு ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களையும் பார்க்க இல்லத்தரசிகளுக்கு ஆர்வம் இல்லை. லாக்டவுனுக்கு பிறகு சீரியல்களின் கதி என்னவாகும், சீரியல் நடிகர்களின் கதி என்னவாகும் என்பதே கேள்வி.

    மக்களோட வாழ்க்கையை கொரோனா லாக்டவுனுக்கு முன் கொரோனா லாக்டவுனுக்கு பின் என்று பிரிக்கலாம். டிவி சீரியல்கள் சூட்டிங் இல்லாததால் பல சேனல்களில் பழைய சீரியல்களை ஒளிபரப்புகின்றனர். அதை பார்க்க யாருமே இல்லை என்பதுதான் உண்மை. யுடுயூப்களில் விதம் விதமான வீடியோக்களை பார்க்கின்றனர். தியேட்டருக்கு போய் பார்க்க முடியாமல் மிஸ் செய்த சினிமாக்களை ஓடிடி பிளாட்பார்ம்களில் பார்த்து ரசிக்கின்றனர். வீடே தியேட்டராகி வருகிறது.

    சின்னத்திரை சினிமாக்கள்

    சின்னத்திரை சினிமாக்கள்

    காலை எழுந்த உடன் அரக்க பரக்க ஆபிஸ் ஓட வேண்டியதில்லை. அடுப்பங்கரையில் அதிகாலையிலேயே நிற்க வேண்டியதில்லை. ரிலாக்ஸ் ஆக காபி குடித்து காலை டிபனை 10 மணிக்கு சாப்பிட்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது கொரோனா லாக் டவுன் காலம். வெளியே போனால் உதை வாங்கி போலீஸ் தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால் பல குடும்பங்கள் ஸ்நாக்ஸ் உடன் டிவி முன்பு உட்கார்ந்து விடுகின்றனர்.

    இல்லத்தரசிகளின் ஃபேவரைட்

    இல்லத்தரசிகளின் ஃபேவரைட்

    லாக் டவுன் காலத்திற்கு முன்பு வரை இல்லத்தரசிகளின் டைம் டேபிள் எப்படி இருந்தது என்றால் பிள்ளைகளை பள்ளிக்கும், கணவரை அலுவலகத்திற்கும் அனுப்பிவிட்டு டிவியில் சீரியல் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். காய் நறுக்கிக்கொண்டே சில எபிசோடுகள், சமையல் செய்து கொண்டே சில எபிசோடுகள் என வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. லாக் டவுனுக்கு பிறகு இப்போது பலரது வாழ்க்கையே மாறிப்போய் விட்டது. சீரியல் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டு விட்டதால் பல இல்லத்தரசிகள் எதையோ இழந்து விட்டது போல ஃபீல் செய்து கொண்டிருந்தனர்.

    சீரியலை தாண்டிய உலகம்

    சீரியலை தாண்டிய உலகம்

    வீட்டிற்குள் எல்லோரும் இருப்பதால் சீரியலை தாண்டிய உலகம் இருக்கிறது என்பதை பல இல்லத்தரசிகள் உணர்ந்து விட்டார்கள். சினிமா பார்க்கவும், ஓடிடி பிளாட்பார்ம்களில் இருக்கும் வெப் சீரிஸ்களையும் பார்க்க பழகிக்கொண்டனர். அதை விட முக்கியமாக யுடுயூப் சேனல்களில் இருக்கும் காமெடிகள், சமையல் நிகழ்ச்சிகள், தையல் டிசைன்களை பல பெண்கள் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

    சூட்டிங் இல்லாத நாட்கள்

    சூட்டிங் இல்லாத நாட்கள்

    இப்போது சீரியல் படப்பிடிப்புகள் எதுவும் இல்லை. டிவி சீரியல்கள் எதுவும் ஒளிபரப்பவில்லை. நடிகர், நடிகைகள் வீட்டில் ரெஸ்ட்டில் இருக்கிறார்கள்.
    500 எபிசோடுகள் வரை ஒளிபரப்பான சீரியல்கள் மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்புகின்றன டிவி சேனல்கள். மறுபடியும் மொதல்ல இருந்தா என்று யோசிக்கும் பெண்கள் அடப்போங்கப்பா என்று சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டனர். அதற்கு பதிலாக வெப் சீரிஸ் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

    புதிது புதிதாக மாறுவோம்

    புதிது புதிதாக மாறுவோம்

    இந்த உலகத்தில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது. பழைய கழிந்து புதியன உருவாகிக்கொண்டே இருக்கும். மாற்றங்களை ஏற்க மக்கள் பழகிவிட்டால் அதுவும் சில காலம் நிலைத்து நிற்கும். ஊமைப்படங்கள் பேசும் படங்களாக மாறி, சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு மாறி, இப்போது ஓடிடி பிளாட்பார்ம் வடிவில் வந்து நிற்கிறது. பல லட்சம் சினிமாக்கள், நிகழ்ச்சிகள் ஓடிடி பிளாட்பார்ம்களில் கொட்டிக்கிடப்பதால் எந்த நேரத்திலும் எதையும் பார்க்கலாம் என்ற நிலைமை வந்து விட்டதால் வேலைகளை முடித்து விட்டு ரிலாக்ஸ் ஆக நெட்டில் சீரியல்கள், சினிமாக்கள் பார்க்க பழகிவிட்டனர் மக்கள்.

    கலைஞர்களுக்கு வேலை பாதிப்பு

    கலைஞர்களுக்கு வேலை பாதிப்பு

    டிவி சீரியல் சூட்டிங் இல்லாத நாட்களில் பலருக்கு வேலை இழப்பு, தயாரிப்பு கம்பெனிகளுக்கு வருமானம் இருப்பு, நடிகர், நடிகையர்களுக்கு வேலையில்லததால் வருமானம் இல்லை. சீரியல் துறையை நம்பியிருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு வருமானத்தை இழந்துள்ளனர். டிவி சீரியலை மட்டுமே நம்பியிருக்கும் சன் டிவி போன்ற பல சேனல்களின் கதி என்னவாகும் என்பதுதான் இப்போது யோசனையாக இருக்கிறது.

    English summary
    Housewives are shifting for webseries as tv serials have been stopped due to lock down.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X