For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவன் ஆனாலும் கசக்கி பிழியும் கேரக்டர்...!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் சற்குணம் அம்மாவின் சின்ன மருமகள் சுமதியாக நடிக்கும் அணு சாய் இலக்கியா, சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

அப்போது பேசிய இலக்கியா, நாயகி சீரியலில் கணவனாக இருந்தாலும், அவர் தவறு செய்யும் போது கசக்கிப் பிழியும் கேரக்டர்.. மக்கள் மத்தியில் நல்ல வரேவேற்பு கிடைச்சு இருக்கு என்று சொன்னார்.

லாக்டவுன் நேரத்திலும், நாயகி குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து, தினமும் பேசிக்கொண்டு இருப்பதாக கூறினார். சற்குணம் கேரக்டரில் நடிக்கும் அம்பிகா நாயகி குடும்பத்தினர் மீது ரொம்ப அன்பா இருப்பாங்க என்று சொன்னார்.

இப்போ சொல்லு.. எது அரை...எது ஒன்றரை..எது மூன்றரை?இப்போ சொல்லு.. எது அரை...எது ஒன்றரை..எது மூன்றரை?

ஈரோடு பொண்ணு

ஈரோடு பொண்ணு

ஈரோட்டில் பிறந்து வளர்ந்த அணு சாய் இலக்கியா, ஆங்கராகும் ஆசையில் சென்னைக்கு வந்தவர். சின்னத்திரை சீரியலில் நடிக்க நிறைய வாய்ப்புக்கள் தேடி வரும்போது ஆங்கரிங் பாணி நடிப்பால் அவை கை நழுவிப் போனதாகவும் சொல்லி இருக்கார்.முதன் முதலில் நந்தினி சீரியலில் சின்ன குஷ்பூவாக நடித்து சின்னத்திரை நடிகையாகி இருக்கிறார்.

நாயகி ஆடிஷன்

நாயகி ஆடிஷன்

ஆடிஷன் போனாலும் கூட, அங்கே எதாவது செய்து காட்டும்போது, ஆங்கர் ஸ்டைல் வந்துரும். நாயகி அடிஷனிலும் அப்படித்தான் ரிஜெக்ட் ஆவேன்னு நினைச்சேன். ஆனால், குமரன் சார், இந்த பெண்ணை என்னால் மோல்டு பண்னமுடியும்னு சொல்லி சுமதி கேரக்டரில் நடிக்க வச்சார் என்று சொன்னார் இலக்கியா.

துறு துறு அம்பிகா

துறு துறு அம்பிகா

அம்பிகா மேம் எப்போதும் துறு துறுன்னுதான் இருப்பாங்க. அவங்க படப்பிடிப்பு இடைவேளையில் ரெஸ்ட் கிடைச்சால் கூட ஹேண்ட் ஒர்க் எதாவது செய்துகிட்டே இருப்பாங்க. எங்களுக்கெல்லாம் ரெஸ்ட் கிடைச்சால் ரெஸ்ட் எடுக்கலாமேன்னுதான் தோணும். அம்பிகா மேம் ஒரு சேர் கிடைச்சால் போதும், உட்கார்ந்து ஹேண்ட் ஒர்க் பண்ணுவாங்க...இல்லை டிராயிங் வரைவாங்க என்று சொன்னார்.

எப்போதும் ரெடி

எப்போதும் ரெடி

ஒரு ஷாட் என்று சொன்னால் அதுக்கு எப்போதும் ரெடி என்று சொல்வது போல நாம் முதலில் நிற்கணும். இதை செய்யலை.. புடவை மாத்தி கட்டலை என்று நேரத்தை இழுக்கடிக்க கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுவாங்க. அவங்ககிட்டே இதை நான் கத்துக்கிட்டேன் என்று கூறினார் அணு சாய் இலக்கியா.

English summary
at Lockdown time, the nayagi 's family said they were talking to each other and talking to her every day. Ambika who plays the role of a good character, said that she was very loving.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X